Wednesday, December 30, 2009

2010

2010 சில உறுதி மொழிகள் :

1. இதை வெளியே சொல்ல முடியாது இருந்தும் முயற்சிக்கணும்

2. வலைத்தளங்கள் வாசிப்பை குறைத்து நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும்

3.வாதாடுவதை குறைக்க வேண்டும் , நிறைய நண்பர்களையும் எதிரிகளையும் இழக்கிறேன்.

4.துறை சார்ந்த விஷயங்களை ஆர்வத்தோடு கற்று தெளிவு பெற வேண்டும் , இன்னும் நான்காண்டுகளில் வேறொரு நிலைக்கு செல்ல யோசிக்கிறேன்.

5.சமீப காலமாக ஏற்ப்படும் பாகிஸ்தானிய இசை மோகத்தை குறைக்க வேண்டும் , நிறைய இசைகளை பரிசோதனை ரீதியிலாது கேட்க வேண்டும் .கூடுதல் வாசிப்பை செலுத்தி பாகிஸ்தானிய இசையை பற்றி தரமான சில பதிவுகள் எழுத வேண்டும்.

6.Time management கொஞ்சமாவது ஒழுங்காக செய்ய வேண்டும் , நிறைய நேரம் விரயமாகிறது .

7.போலந்தில் நிறைய ஊர் சுற்ற வேண்டும் குறைந்தது நான்கு நாடுகளாவது போகவேண்டும் ( Hungary ,Budapest , Slovenia and Italy).

8.சில நல்ல சினிமாக்கள் பார்க்க ஆசை.

9.எல்லாரும் ஒன்னு சொன்னா அத எதிர்க்கணும்னு பொழப்பா வெச்சிருக்க அப்படீன்னு கதிரவன் சொல்லுவான் (கோபத்தில் ) , அந்த எதிர்ப்பை அறிவுசார்ந்ததாக இன்னும் கூர்மையாக்க வேண்டும்.

10. உறவு சார்ந்த காயின் நகர்தலில் முக்கியமான கட்டத்தில் இந்த வருடம் உள்ளேன் , பொறுமையாக வெற்றிகரமாக நகர்த்த வேண்டும் (தோல்வியை தவிர்த்து அல்லது குறைந்த சேதாரத்துடன்)

2009 எனக்கு சில இமாலய வெற்றிகளையும் மிக அவசியமான தோல்விகளையும் தந்துள்ளது. விளிம்பில் இருக்கிறேன் , இதிலிருந்து மீண்டு வருதல் என்னையே எனக்கு புதிதாக காட்டும்.புதுவருட நம்பிக்கை என்பது ஒருவித கற்பிதமே , எல்லாவற்றிற்கும் நாட்கள் புடிக்கும். வேண்டுமானால் இதை ஒரு காலம் சார்ந்து திரும்பி பார்க்கும் கோணத்தில் எடுத்து கொள்ளலாம். பல வரிகளை அடித்திருக்கிறேன் , இது போதும்.அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Thursday, December 10, 2009

ஹய்யா கவிதை - உரையாடல்


வெறிச்சு வானத்த பார்க்கணும்
கண்ணை சுருக்கிக்கொண்டு
புத்திசாலி மாறியே நடிக்கணும்
உட்பொருள்னு வேற ஒன்னு இருக்கணும்
கரு , அழகியல் இத்யாதி இத்யாதி
தோணும் நாலு வரியையும்
பின்நவீனத்துவமா மாத்தி மாத்தி அடிக்கணும்
நடுல என்டர் வேற தட்டனும்
இது இல்லாம கடைசியில்
எண்டு பன்ச் வேற வைக்கணும்
நாங்க என்ன வெச்சுகிட்டாயா
வஞ்சனை பண்றோம்

Tuesday, August 18, 2009

ஆட்டம் க்ளோஸ்



தோழர் ரமேஷ் என்னை கேட்டவுடன் தான் நான் செய்வதே எனக்கு உரைத்தது."என்னடா தம்பி யார் படிக்காட்டியும் பதிவு அடிக்கடி போடறியே , போறதுக்குள்ள நெறைய எழுதனும்னு வேண்டுதலா? "



ஆமாம்ல! இதோ நாளும் வந்துவிட்டது. இனி எனக்கு இணையதள ஆக்சஸ் கிடைப்பது அரிது ஒரு மாதத்திற்கு. என்னை நம்பி ஒருத்தன் படிக்க வேற கூப்புடுகிறான். முதல் முறை விமானப்பயணம் , அட பக்கத்துல போய் கூட பார்த்ததில்லை. நான் சமைக்கிறேன் பேர்வழி என்று அப்பாவை தினமும் ஹோட்டலில் சாப்பட வைக்கிறேன். கோவில்பட்டியில் உச்சி வெயில் மண்டையை பிளக்க கிரிக்கட் மைதானத்தில் நின்ற பொழுதுகள் எல்லாம் சொர்க்கம் , வியர்வையும் வெயிலும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஊட்டி கூட என்னால் பொருத்து கொள்ள முடியாது , பிரான்சில் குளிர் காலத்தில் போகிறேன். போலந்து இதைவிட மோசமாமே? செத்தேன்!

பாட புத்தகங்களை தொட்டு சிலபல மாதங்கள் ஆகிறது. ஒரு மன்னாங்கட்டியும் நினைவில்லை. திகட்டும் அளவிற்கு புத்தகங்கள் படித்தேன் ( பாட பொஸ்தகம் அல்ல ) , திகட்டாத அளவிற்கு பதிவுகள் படித்திருக்கிறேன்,நிறைய படங்கள் பார்த்தேன் . கல்லூரி முடித்து விட்டு மேற்படிப்புக்கு போகும் இந்த மூன்று மாத இடைவேளையை முழுவதும் வேலை எதுவுமே பார்க்காமல் சந்தோஷமாக இணையத்தில் கழித்திருக்கிறேன்.
பதிவுலகம் எனக்கு இன்னும் பிடிபடுவேனா என்கிறது ! ஆண்ட ( கதிரவன்) எனக்கு அறிமுகப்படுத்தியது இது . முதலில் நான் படித்த தளம் லக்கிலுக் , அடுத்து அதிஷா. அப்பொழுது எல்லாம் பின்னூட்டம் என்று ஒன்று இருக்கிறது என்றே எங்களுக்கு தெரியாது. ரித்தீஷ் பற்றி ஒரு பதிவு அதிஷா போட்டிருந்தார் , ஆண்டை எங்கள் எல்லாரையும் கூப்பிட்டான் லேப் முடிந்ததும் உக்கார்ந்து படித்தோம்.கூட்டம் கூடியதால் அவன் மட்டும் உரக்க வாசிக்க மற்றவர் அனைவரும் சிரித்து கொண்டு இருந்தோம்.
என் கல்லூரியில் , ஆண்டை ஷரீப் இருவர் தான் தொடர்ந்து வலைத்தளங்களை படித்து வருவார்கள். பல எழுத்தாளர்கள்களுக்கு தங்கள் ரசிகர்களை பற்றி தெரிவதே இல்லை,தெரிவதற்கு வாய்ப்பும் இல்லை . கடை நிலை ரசிகனுக்கு எழுத்தின் மீதும் எழுத்தாளர்கள் மீதும் பிரமிப்பு அவ்வளவு ஜாஸ்தி. மருதனின் புத்தகங்களை நானும் ஆண்டையும் பிரித்து வைத்து வாங்கி படிப்போம். இருவரும் ஒரே புத்தகம் வாங்காமல் இருவேறு புத்தகங்கள் வாங்கி எக்ஸ்சேஞ்சு செய்து படித்து கொள்வோம். காரைக்குடி புத்தக கண்காட்சிகள் ! மிஸ் யு ஆண்ட.

தமிழ் வலைத்தளம் அறிமுகமே இல்லாதவர்களுக்கு நான் முதலில் இதை தான் படிக்க குடுப்பேன். இவரின் அனைத்து பதிவுகளையுமே படித்திருக்கிறேன் :). சேடன் பகத் புத்தகம் ஜாலியாக படித்தது , மஸக்கலி பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் , தில்ஷன் கேப்டனாக இருந்த மேட்சை நினைத்து நினைத்து சிரித்திருக்கிறேன் , உலக திரைப்படங்கள் , பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் , மைக்கேல் ஜாக்சன் , சச்சின் காஸ்பரோவிச் பந்தில் அடித்த சிக்ஸ் என அனைத்தும் என் ரசனைக்குரிய ஏரியா.

நான் என் வாழ்கையிலேயே கதைகள் எழுதியதில்லை. உரையாடல் , உயிரோடை போட்டிகளுக்காக தான் கதைகள் எழுதினேன்.நடத்தியவர்களுக்கு நன்றிகள் பல.நான் அடிக்கடி படித்த வலைத்தளத்தில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக என் அம்மா காலத்து நபர். முந்திய தலைமுறைக்கு தான் எவ்வளவு ரசனை இருந்திருக்கிறது? புத்தகங்கள் , ஜென்சி , இளையராஜா இசை , கவிதைகள் ஹ்ம்ம் என் கல்லூரியில் எத்தனை பேர் புத்தகங்கள் படித்திருக்கிறார்கள்?

இவ்வளவு நீண்ட மொக்கை , நான் இந்த பக்கம் தலை வைத்து படுக்க இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்பதை தெரிவிப்பதர்க்கே. அதற்குள் பதிவுகளை படிக்க முடிந்து பின்னூட்டம் போட முடிந்தால் சந்தோசம்.

பி.கு : இந்த மொக்கையை திரட்டிகளில் சேர்க்க வேண்டுமா என்ன?








Monday, August 17, 2009

சைக்கோ கொலைகாரர்கள் - ராபர்ட் பிக்டன்


எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு , வெளியே சொல்ல முடியாததும் கூட. எனக்கு மிகவும் போர் அடிக்கும்பொழுது எல்லாம் , உலகின் மோசமான சைக்கோ கொலைகாரர்களின் வரலாற்றை படிப்பேன். அவர்களில் பால்ய பருவம், அவர்களை கூசாமல் கொலை செய்ய தூண்டிய காரணிகள் , அவர்களின் செக்ஸ் வேக்கைகள் , அவர்கள் கொலை செய்யும் விதம் , கொலை என்றால் தென்னன்கொலையா என்னும் ரேஞ்சுக்கு அதை மறந்து இயல்பு வாழ்கை வாழும் குரூரும் என்று அனைத்தையும் படிப்பது எனக்கு பிடித்தமான விடயம். ( நீ உருப்டாப்புல தான் என்று கூறும் உங்கள் மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது )



சிலரை பற்றி படிக்கும் பொது உறைந்து போய் உக்காந்திருக்கிறேன். பயம் என்னும் ஒற்றை சொல்லை உடைத்து விட்டால் , கொஞ்சம் அவர்கள் உளவியல் சிந்தனைகளுக்கு உள்ளே போய் பார்த்தால் கொலை நடுங்கிவிடும். மனிதருக்குள் மிருகம் படித்ததிலிருந்து எனக்கு இந்த பழக்கம் தொற்றி கொண்டது என்பதே உண்மை.




வான்கோவரில் பட்டப்பெயருடன் ஒரு ஊர் உண்டு , " லோ ட்ராக் " என்று அந்த மாவட்டத்தை அழைப்பார்கள். ஒரு முறை அங்கே சுற்றி நடந்துவந்தீர்கள் என்றால் , காலுக்கடியில் உபயோகிக்கப்பட்ட காண்டம்கள் , தூக்கி எறியப்பட்ட சிரிஞ்சுகள் என்று அனைத்து ஆரக்யோமான விஷயங்களும் படும். பதினோரு வயதில் கூட அங்கு விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை நீங்கள் காணலாம். 1995 இல் ஒரு புள்ளி விவரத்தை பார்த்த பொழுது லோ ட்ராக்கில் இருக்கும் பெண்களில் 73% விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள் .1998 இல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தில் அங்கே ஒரு நாளைக்கு ஒரு நபர் இறந்துகொண்டிருந்தார் , போதை பொருளுக்கு அடிமையாகி , எய்ட்ஸ் வந்து , கொலை செய்யப்பட்டு.



ஆம் கொலை செய்யப்பட்டு , ஆனால் இதை கண்டுபிடிப்பதற்குள் கானடா போலீஸ் செத்து சுண்ணாம்பு ஆகிவிட்டது. காணாமல் போனவர்கள் பெயர்விவரம் மற்றும் நாட்கள் விவரம் இங்கே எழுதினேன் என்றால் எனக்கு தாவு தீர்ந்துவிடும். எண்களை போட்டாலே தலை சுத்தும் , எண்பதுகளில் ஆரம்பித்தது 2002 வரை நிற்கவே இல்லை. எப்படி எப்படி எல்லாமோ ஒரு லிஸ்ட் தயாரித்தார்கள் 98 இல் மொத்தமாக ஒரு ஐம்பத்து நான்கு பெண்களை காணவில்லை ( காணலைன்னா 80களில் இருந்து காணவில்லை என்பதிலிருந்து நேற்று காணமல் போனவர் வரை) கிம் ரோசொமோ என்பவர் முதலில் திருவாய் மலர்ந்தார் " ஒரு வேலை இதெல்லாம் ஒரே ஆளின் கைவண்ணமாக இருக்கலாமோ? "



ஆதாரம்? சாட்சிகள்? ஒரு மண்ணும் கிடைக்கவில்லை. எந்த விபச்சாரியும் சாட்சி சொல்ல பயந்தார்கள் . தானும் மாட்டிக்கொண்டால்? . 98 இல் ஒரு மிக மிக முக்கியமான சாட்சியம் சிக்கியது. "Piggy Palace Good Times Society என்று இவனுங்க நைட்டு பெண்களை வெச்சு கூத்தடிக்கரானுவோ எசமான். அதுலயும் ராபர்ட் பிக்டனை பார்த்தாலே சரி இல்லை. நேத்து கூட அவன் பண்ணையில் ஒரு பண்ணி என்னை துரத்தி துரத்தி கடிக்க வந்துச்சுனா பார்த்துகோங்களேன் , பண்ணிங்க எதுக்கு எசமான் மனுஷங்கள கடிக்கணும் ? " என்றார் ஹிச்காக்ஸ் என்னும் பண்ணை வேலையாள்.



ஏற்கனவே ஒரு முறை ஒரு பெண்ணை கொலை செய்ய முயன்றதற்கு பிக்டனை போலீஸ் பிடித்தது . போதிய சாட்சியங்கள் இல்லாததால் தப்பித்து விட்டான். அப்பவும் கொஞ்சம் கூட சூதானம் இல்லாமல் இருந்தார்கள் கானடா போலீஸ் , நாங்க பிக்டனின் பண்ணையை தேடினோம் ஒன்றுமே இல்லையே என்றார்கள் போலீஸ்.


2002 இல் அது நடந்தது. அப்பொழுது பிக்டன் கம்பி எண்ணி கொண்டிருந்தான், அதுவும் கொலை குற்றத்திற்காக இல்லை. எதோ தனது பண்ணையில் இருக்கும் நிலத்தகராரால். முதல் முறை போலீஸ் வாய் திறந்தது , ஆதாரங்கள் இரண்டு பெண்மணிகளின் மரபணுக்களுடன் ஒத்து போகிறது. அந்த பண்ணையை சோதனையிடுகிறோம் . கனடா செய்தித்தாள் ஒன்று அலறியது " ஐம்பது பெண்கள் பன்றிகளுக்கு இரையானார்களா? " இதற்க்கு நடுவில் பன்றி மாமிசத்தில் மனித உடல் உறுப்புகள் கலந்திருக்கின்றன என செய்தி காட்டுத்தீயாக பரவியது. ஒரு நிமிடம் உறைந்து போய் உட்காந்தார்கள்.



முதலில் இரண்டு கொலை குற்றங்களில் முதல் நிலை குற்றவாளியாக நிறுத்திய போலீஸ் , பிக்டன் மீது முப்பது கொலை குற்றங்களை சுமத்தியது. அவர் பண்ணையில் இருந்த குளிர் சாதன பெட்டியிலிருந்து இரண்டு தலைகள் , கொஞ்சம் விரல்கள் கொஞ்சம் வேறு உடல் இருப்புகள் கண்டெடுக்கப்பட்டன. 2004 ஆம் ஆண்டு கிட்ட தட்ட முடிவுக்கு வந்தார்கள் , மொத்தம் 102 கைரேகை நிபுணர்கள் கிட்ட தட்ட 32 தடவியல் நிபுணர்கள் , கிடைத்த ஆதாரங்களை கொண்டு காணமல் போன முப்பது பெண்களின் மரபணுக்களோடு எங்களால் தொடர்புபடுத்த முடிகிறது என்றார்கள். கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆதாரங்கள் , அறுபது சாட்சிகள் , இரண்டுலக்ஷத்தி முப்பதாயிரம் தடயங்கள், மண்டை ஓடு , ரத்த கரைகள் , பற்கள் , எலும்புகள் இன்னும் இன்னும்.


சாட்சியங்களை நீதிமன்றத்தில் காட்டும் பொழுது பெண் வக்கீல்கள் வாந்தி எடுக்க ஆரம்பித்தார்கள் . 22 காலிபர் துப்பாக்கி ஒன்று டில்டோவுடன் ( அர்த்தம் தெரியாவிடின் விட்டு விடுங்கள் :P ) சிக்கியது.கண்ணால் பார்த்த சாட்சியங்களிலேயே முக்கியமாக கருதப்பட்டது பெல்வுட் , பிக்க்டன் தனது கொலைகளை எப்படி நிறைவேற்றுவான் என்று தனக்கு நடித்து காட்டியதாக சொன்னான்.



" அவர்கள் கைகளை கட்டி போட்டு , டாகி முறையில் உறவு கொண்டு பின்பு கொலை செய்து தனது பன்றிகளுக்கு உணவாக்கி விடுவான் . பெண்களை வசியம் செய்ய அவர்களுக்கு பிடித்த போதை பொருளை பிக்டன் கொடுத்தான் " என்றார். அவரே ஒரு போதைப்பொருள் அடிமை ஆதலால் இத்தனை நாள் அதை போலீசிடம் சொல்லவில்லை என்றும் சொன்னார்.



நாற்பதாயிரம் புகைப்படங்கள் , அருபதனாயிரம் ஆராய்ச்சி கூட சாம்ப்லிகள் என கஷ்டப்பட்டு போலீசார் முடிவுக்கு கொண்டு வந்த வழக்கில் அரசாங்கத்தின் செலவு நூறு மில்லியன் டாலர். கானடாவில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதால் , வாழ்நாள் முழுதம் சிறை தண்டனை அனுபவித்து வருகிறான் பிக்டன்.



Thursday, August 13, 2009

தமிழ் சினிமா இசையும் இந்தி பாடகர்களும்

அடித்து ஆடி கொண்டிருக்கிறார்கள் ஹிந்தி பாடகர்கள்.( நான் சிறு வயதிலிருந்தே பாடகிகளின் பெயர்களை நினைவில் வைத்து கொள்வதில்லை , ஆக பதிவு முழுவதும் பாடகர்களை பத்தி தான். ).


ஒரு கமர்ஷியல் சினிமா பாடல்கள் ரசிகனாக இதை பதிவு செய்கிறேன். "பருவா இல்லை" என்று கொல்வதில் எல்லாம் எனக்கும் சம்மதம் இல்லை தான். இருந்தும் தமிழ் சினிமாவில் அதிகம் ஹிந்தி பாடகர்கள் இன்றளவிலும் பாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஹரி சரண் , நரேஷ் , கார்த்திக் , திப்பு , ஹரீஷ் ராகவேந்தரா போன்ற தமிழ் பாடகர்கள் இருந்தும் சில சமயம் ஹிந்தி பாடகர்கள் பாடிய பாடல்கள் ஹிட் ஆவதால் தொடர்ந்து அவர்கள் பாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.


1. உதித் நாராயணன் :
தமிழை மொத்தமாக கொலை செய்கிறார். ழ வருவேனா என்கிறது , இருந்தும் பாடிக்கொண்டே தான் இருக்கிறார். ஏன் ? தோரணையில் " வா செல்லம்" கேட்டீர்களா? அதை தமிழ் பாடகர் ரஞ்சித் கூட பாடி இருந்தார் இருந்தும் திரையில் ஒலித்தது உதித் குரல் தான். கீழ் நோட்ஸில் உதித்துக்கு உள்ள கம்பீரமான குரல் வளம் ஒரு காரணம். " சஹாரா " போன்ற பாடல்களில் எந்த உயரங்களையும் அனாயசமாக தொட்டு விட்டு வந்து குழைத்து பாடுவார்.


இவர் பாடிய ஹிந்தி பாடல்களிலேயே எனக்கு " ஏ தாரா " சுவதேஷில் உள்ள பாடல் மிகவும் புடிக்கும். தமிழில் ஒரு ஹிந்துஸ்தானி சாயல் பாடல் வந்தாலே யுவன் உதித்தை கூப்புடுகிறார் , " எங்கேயோ பார்த்த மயக்கம்" ஒரு சிறந்த உதாரணம். ஐம்பதற்கும் மேற்பட்ட பாடல்களை உதித் தமிழில் பாடி இருப்பார்.


2. சோனு நிகம் :



தலை இன்னும் தமிழில் அதிகம் பாடவில்லை. " விழியில் என் விழியில்" என்று கிரீடத்தில் தெளிவான தமிழுடன் ஒரு குரல் கேட்டதல்லவா? சோனுவின் குரல் தான். ஹிந்தியில் இவர் பாடிய பாடல்களுக்கு எல்லாம் கண்மூடித்தனமான வெறியன் நான். எந்த சிரமமான பாடல்களையும் சொடுக்கு போடும் நிமிடத்தில் சோனுவால் பாட இயலும். இவர் இதற்க்கு முன்னால் பாடிய ஒரே தமிழ் பாடல் " வாராய் என் தோழி " ஜீன்ஸ் படம்.


3.ஜாவெத் அலி :




திரும்பவும் உச்சரியுங்கள் , ஜாவெத் அலி அதே தான். இந்த பெயரை இனி எந்த திரை இசை ரசிகனாலும் புறக்கணிக்கவே முடியாது. மச்சான் குசாரிஷ் கேட்டியா டா ? சோனு சோனு தான் டா என்றேன் , இணையத்தில் தேடி நண்பன் ஒருவன் பெயர் சொன்னான் , பாடியது யாரோ ஜாவெத் அலியாம் டா.


ஹிந்தியில் பல ஹிட் பாடல்கள் , " து முஸ்குரா " , " ஜஷ்னே பகார் " போன்ற சொக்க வைக்கும் மேலோடிகள். தமிழில்? குங்குமப்பூவும் கொஞ்சுபுராவும் படத்தில் "சின்னஞ்சிறுசுகள்" , சர்வத்தில் "சிறகுகள் நீளுது" , வாமனனில் " ஏதோ செய்கிறாய்" என்று இவர் பாடிய அனைத்தும் எனக்கு பிடித்திருக்கிறது. அதிலும் முஸ்குரா பாடலில் என்னமா அசத்தி இருக்கிறார்? வளமான எதிர்காலம் உண்டு ஜாவதுக்கு .

4. சுக்விந்தர் சிங்க் :



தக்க தையா என்று அலறிய குரல். இவரது பல இந்தி பாடல்கள் பிரமிப்பூட்டும் நுணுக்கம் கொண்டவை. இவரே இசையமைத்த நஷா ஹி நஷா அருமையான பாடல். இவர் பாடிய பல பாடல்கள் இந்தியில் பட்டையை கெளப்பி இருக்கின்றன. தமிழில் கம்மி தான் போல.டிஷ்யூம் படத்தில் இருந்து " கிட்ட நெருங்கி வாடி " தான் லேட்டஸ்ட் .


5.கிருஷ்ணா குமார் குனாந்த் :



கேள்விப்பட்டது இல்லையா? கே.கே என்றால் தெரியும். பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மன்மதனில் உள்ள " காதல் வளர்த்தேன்" , 12 B படத்தில் வரும் " எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது , அந்நியனில் வரும் " அண்டங்காக்கா கொண்டைகாரி " என்ற பல ஹிட் பாடல்களும். "மொழ மொழன்னு" போன்ற திராபை பாடல்களும் பாடியுள்ளார். இவர் பாடியதிலே " ஒரு பனித்துளி" ( கண்ட நாள் முதல் ) ," உன்னை தொட்ட" ( இதய திருடன் ) , " உயிரின் உயிரே " ( காக்க காக்க ) எல்லாமே மிக பிரபலமான பாடல்களே. தமிழ் பாடகர் போலவே தோன்றினாலும் , பல ஹிந்தி பாடல்கள் பாடியுள்ளார். அங்கே இவர் மிகப்ப்ரபலம்.


6.கைலாஷ் கெர் :


கிராமிய பாடல்களா? உற்சாகமான பாடல்களா? கொஞ்சம் குத்துடன் குரலை ஏற்றி இறக்கி பாட வேண்டுமா? கூப்பிடு கைலாஷ் கெரை என்பது தான் இப்பொழுது தமிழ் சினிமாவின் டிரென்ட். அவருக்கு சாதரணமாகவே ஷ வராது இது தமிழிற்கும் பொருந்துகிறது.

பீமாவின் ரங்கு ரங்கம்மா , அபியும் நானுமில் " ஒரே ஒரு ஊரிலே " , லீயில் " யாரு யாரு " போன்ற பாடல்களுக்கு சொந்தக்காரர். இவர் அறிமுகம் ஆனது மஜா படத்தில் " போதுமடா சாமி" என்ற பாடலில்.

சலாம் எ இஷ்கு திரைப்படத்தில் " யா ரப்பா " பாடலை கேட்டு பாருங்கள் , அல்லது " தேரி தீவாணி " என்று இணையத்தில் தேடி பாருங்கள் ! கைலாஷ் ஸுபி பாடகர்களில் மிக முக்கியமானவர்.


7.ரூப் குமார் :


வாமணன் படத்தில் " ஒரு தேவதை " பாடல் கேட்டேர்களா? இல்லையெனில் முதலில் போய் கேளுங்கள் , ரூப் பின்னியிருக்கிறார். இவர் மின்னலே படத்தில் " வெண்மதி வெண்மதியே " கூட பாடி இருக்கிறாராம். இன்னும் நிறைய பாடல்கள் பாடலாம் மயக்கும் குரல் .


இது போக விஜய் பிரகாஷ் , குணால் காந்ஜாவாலா , ஷான் , ஹிமேஷ் போன்றவர்களும் தமிழில் பாடி இருக்கிறார்கள். பிற மொழி பாடகர்கள் மொழியை சிதைக்காமல் பாடினால் கண்டிப்பாக ரசிக்கலாம். சிதைத்தும் ரசித்து கொண்டு தானே இருக்கிறோம்?

Wednesday, August 12, 2009

சீனா விலகும் திரை - நூல் விமர்சனம்


எனக்கு கண்ணை கட்டுகிறது. புத்தகம் வாங்குவதற்கு முன்பே பல்வேறு எதிர்பார்ப்புகள் வைத்திருந்தேன் , கட்டுரைகிளின் தொகுப்போ? பயண கட்டுரை எழுதி முழுவதும் மொக்கையாக இருந்து விட்டால் ?


அப்படி எதுவுமே இல்லை , தன் பயணத்தின் வாயிலாக தனது ஐந்து வருட இருப்பின் வாயிலாக புள்ளி விவரங்களை ஆங்காங்கே அள்ளி தெறித்து , ஒரு இடத்தில் நின்று கொண்டு அதன் வரலாற்றை நினைவில் நிறுத்தி எழுதி அசத்தி இருக்கிறார் பல்லவி அய்யர் ( படிச்சு வாங்கின பட்டமுங்களா? ). இவ்வளவு லைவ்லியான மொழிபெயர்ப்பா என அதிசயிக்க வைக்கிறது ராமன் ராஜாவின் உழைப்பு!

சீனாவின் தனி நபர் வருமானம் இந்தியாவை விட இரு மடங்கு. இந்தியாவில் 5.7 கோடிகுழந்தைகள் சத்தான உணவில்லாமல் வளர்ச்சியில் தடைபடுகிறார்கள் ஆனால் சீனாவில் எழுபது லக்ஷம் தான். இந்தியாவில் 15 வயது மேர்ப்பட்டவர்களில் 68% பேர் தான் எழுத படிக்க தெரிந்தவர்கள். சீனாவில் 95% .


நான் என்ன ரமணா விஜயகாந்தா? . விஷயத்துக்கு வருவோம் , ராமன் ராஜாவில் மொழிபெயர்ப்புக்கு ஒரு ஒரு உதாரணம் , சீன விருந்தாளிகள் இந்தியாவில் இருக்கும்பொழுது டெல்லியில் இருந்து ஆக்ரா அழைத்து செல்லப்படுகிறார்கள். சன்னமாக ஒருவர் கேட்கிறார் " நாம் நெடுஞ்சாலையில் பயணிப்போம் என்றீர்களே பல்லவி , அது எப்போ வரும்? "


" நாசமா போச்சு! நாம் அதில் தான் சென்று கொண்டிருக்கறோம். "

இதில் இருந்தே தொடங்கலாம் , சீனாவில் இருக்கும் சாலைகள் இந்தியாவில் இல்லை. ரயில் பாதைகளில் அசுர பாய்ச்சல். தொழிற் சாலைகள்? பட்டன் தயாரிக்கிரீகளா? பலூன் ? இரும்பு? பொம்மைகள்? எல்லாவற்றிலும் சீனா சீனா சீனா ! மாவோ சீனா இப்பொழுது கண்டிப்பாக இல்லை என ஆணித்தரமாக பல்லவி கூறுகிறார். இருந்திருந்தால் 44.7% ஏற்றத்தாழ்வு இருக்காது ( inequality) . சீனா அடைந்த அனைத்து வளர்ச்சிக்கும் அது கொடுத்த விலை , ஜனநாயகம் !

புத்தகம் நெடுக ஜனநாயகத்தை புதைத்த வளர்ச்சியா? வளர்ச்சியே இல்லாமல் வெத்து ஜனநாயகமா என்று மண்டையை ஒடைத்து கொண்டிருக்கிறார். தீர்வு? நான் ஏழை குடும்பத்தில் பிறந்தால் சீனனாகவே ஆசை படுகிறேன் ஆனால் நடுத்தர குடும்பம் என்றால் இந்தியா தான் என்ற முடிவை முன் வைக்கிறார் .


பல்லவி ஹூடாங்கில் வசிக்கும் பொழுது அவரது வீட்டின் அதிபாரான திரு வூ ( கோடீஸ்வரர்) தன் வீட்டின் கக்கூசை சுத்தம் செய்கிறார். பலப் ரிப்பேர் பார்க்கிறார். தனது அம்மாவிற்கு ஆயி வேலை கிடைக்குமா என்று தனது நவ நாகரீக சீன மாணவி கேட்கும் பொழுது ஆடி போகிறார் பல்லவி. ஏனென்றால் இதெல்லாம் இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வேலைகள் . சீனாவில் எந்த வேலையும் தரம் பார்க்காமல் செய்கிறார்கள் . வர்க்க பேதங்களின் , இன /மத பேதங்களின் முதுகெலும்பை உடைத்திருக்கிறார் மாவோ . இங்கே சாதீய ஏற்ற தாழ்வுகளை உடைப்பது சாதாரண விடயமா?


அதே நேரம் மக்கள் மாற்றி சிந்திக்க கூட தெரியாமல் வளர்ந்திருக்கிறார்கள் , இந்தியனுக்கு எடக்கு பேசாவிடின் தூக்கம் வருமா? சீனா காரன் எதுவும் நன்மைக்கே என்கிறார்கள். இரண்டு உதாரணங்கள் இதற்க்கு , திபெத்தில் தான் பார்த்த மொழி பெயர்ப்பாளர் ஒருவர் " சீனர்கள் ஒரே மாதிரி தான் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இன்னொன்று அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டால் ( கெட்ட செய்திகளாம்) மக்கள் மனசு ஒடிந்து விடும் என்று அவரது சீன மாணவி சொல்கிறார்.


மூச் , மாத்தி யோசிக்காதே என்கிறது அரசாங்கம். இணையத்தை தடுக்கிறார்கள் , எல்லாவற்றிற்கும் அடக்குமுறை. பொருளாதார ரீதியாக முதலாளித்துவமும் உள்ளே படை எடுத்து வந்தாகி விட்டது. இப்பொழுது தான் இடது சாரி சிந்தனைகளை தூசி தட்டி இருக்கிறார்கள். ஏனென்றால் கட்சியின் தூண்களான விவசாயிகளின் அதிர்ப்தி தான் காரணம். ஆனால் அதிகார பீடத்தை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய கல்வி அறிவு படைத்த நடுத்தர மக்கள் கேட்க மாட்டார்கள் , காரணம் வளர்ச்சி/முன்னேற்றம் என்னும் ராஜ போதை.



பலவியின் திபத் பயணம் , ஸ்பானிஷ் கணவர் , பீஜிங் மாணவிகள் ,ஹூடாங் வீடு மற்றும் வாழ்கை முறை , பொக்கை வாய் கிழவர்கள் , கக்கூஸ் கண்காட்சி , அங்கு அவர் சந்தித்த இந்தியர்கள் , வாஜ்பாய் வருகை , உணவு பழக்க வழக்கங்கள் , சீனாவும் மதமும் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களும் எப்படி பின்னி பிணைகின்றன இன்றைய கால கட்டங்களில் என்ற நுட்பமான ஆராய்ச்சி , யோகா மோகன் , திபெத் சிறுவன் , பீஜிங் தலைகீழாக மாறிப்போன காட்சிகள் , மலை மேல் ரயில் பிரயாணங்கள் , அவர் சந்திக்கும் உலகத்திலேயே பணக்கார கிராமம் அங்கு முன்னேற்றம் வர வித்திட்ட மனிதர் , அவர் கண்ட தொழில் சார்ந்த பேட்டிகள் , அவர் சந்தித்த சாக்ஸ் தொழிற்சாலை , பாதி புதுமையும் மீதி பழமையும் கொண்ட வீடுகள் ( இது தான் இன்றைய சைனா ) , தொழில் நகரம் அதில் இருக்கும் பொருள்கள் , மத வழிப்பாட்டு உருவங்கள் , செக்ஸ் பொம்மைகள் என்று ஒவ்வொன்றும் அவரின் ரசனையோடு கலந்த நுட்பமான தகவல்கள்.



அவர் சார்ஸ் பற்றி எழுதி இருக்கும் இடத்தில் நான் கடுமையாக முரண் படுகிறேன் அது இந்த புத்தகத்தின் சாரமும் கூட! முதலில் சீன அரசாங்கம் சார்ஸ் பரவிய விகிதத்தை குறைத்து சொல்லியது ( மீடியா அவங்க கையில் பாஸு). பிறகு உண்மையை ஒப்புக்கொண்டு தீர்வு கண்டது. இதை அறிந்த மாணவர்கள் /மக்கள் கலவரமானார்கள். அதற்க்கு பல்லவி அளிக்கும் பதில் இதுவே இந்தியா என்றால் நாங்கள் துல்லியமாக பத்திரிக்கைகள் ( மீடியா) மூலம் அலசி இருப்போம் என்று ஜம்பம் அடித்து கொள்கிறார்.


இந்தியாவில் சார்ஸ் பற்றி எத்தனையோ கட்டுரைகள் பத்திரிக்கைகளில் குவிந்தன! மொத்தம் எத்தனை நபர் பாதிக்கப்பட்டனர்? மூன்று. இறப்பு? பூஜியம் பல்லவி. ஏன் சார்ஸ் இவ்வளவு கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது? விமானம் மூலம் கூட பரவி வசதி படைத்தவர்களையும் கொல்லும் என்பதால் தானே? . Tuborculosis , வயிற்று போக்கினால் இந்தியாவில் சாகும் எண்ணிக்கை எவ்வளவு? அதன் புள்ளி விவரங்கள் வருவதே இல்லையே? ஏன் ? இந்திய மீடியா என்று நாம் எவ்வளவு பீத்தி கொண்டாலும் அது கார்பரேட்களின் கைப்பாவையாக உள்ளது ( They are corporate stenographers) இத்தனை இருந்தும் எனக்கு இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறைவில்லை , மீடியாக்கள் மீதும்! ஏனென்றால் ஒரு பாலகும்மி சாய்நாத் இல்லையென்றால் மேற்சொன்ன விவரங்கள் எனக்கு தெரிந்திருக்காது.




மொத்தத்தில் இந்த புத்தகத்தை படிக்காமல் விடுபவர்கள் ஒரு முக்கிமான ஒப்பீடு நடையில் எழுதப்பட்ட ஒரு சுவாரசியமான / அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றை இழக்கிறார்கள். A must read!

Thursday, July 30, 2009

எராஸ்மஸ் முன்டூஸ் மேற்படிப்பு- ஓர் அறிமுகம்


இதை எழுதி கூட கொஞ்சம் மொக்கை போட்டால் ஒருவரும் படிக்கமாட்டார்கள் எனது வலைத்தளத்தை ( இப்போ மட்டும் என்ன வாழுது என்று கேட்கும் பதி அண்ணனுக்கு , இன்னொரு ஜிங்கிலி ப்ளாக் பரிசாக அளிக்கப்ப்படும் ) ! தெரிந்தே எழுதுகிறேன் , ஏனென்றால் விஷயம் கொஞ்சம் முக்கியமானது. எனக்கு தெரிந்த உருப்புடியான ஒன்றை பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.

பொதுவாக , மேற்படிப்புக்கு ( MS , PhD) அதிகம் அமெரிக்கா அல்லது கனடா செல்லும் வழக்கம் தான் இருந்து வருகிறது. அதற்க்கு மாற்றாக முற்றிலும் வேறுபட்ட , மிகவும் வித்யாசமான ஒரு மாஸ்டர்ஸ் தான் இந்த Erasmus Mundus .

இது எராஸ்மஸ் என்னும் மனிதனின் பின்னால் பெயரிடப்பட்டுள்ளது. அவர் என்ன செய்தார் என்று இணையத்தில் படித்தால் கொஞ்சம் மொக்கையாக இருந்தது. விட்டு விடலாம் , பாதகம் இல்லை. ஆனால் ஒன்று முக்கியம் , மனிதன் ஐரோப்பா எங்கும் சுத்தி சுத்தி போய் படித்தார். ஏன் அது முக்கியம் என்றால் , இந்த படிப்பும் அப்படிதான். ஒரே இடத்தில் உக்காந்து ஜல்லி அடிக்காமல் , நாடு நாடாக சுத்தி கும்மி அடிக்க வழிவகுக்கும் படிப்பு இது .


குறைந்த பட்சம் ஒரு வருடத்தில் இருந்து , அதிகம் இரண்டாண்டுகள் வரை இந்த படிப்பு இருக்கும். குறைந்தது இரண்டு நாடுகளுக்காது செல்ல வேண்டும் , அதிகமாக நான்கு நாடுகள் கூட செல்லலாம். இது MS க்கு மட்டுமே உண்டான பிரத்யேக படிப்பு. மேலோ , கீழேயோ இதில் படிக்க முடியாது.


மொத்தம் 104 வகையான மேற்படிப்புகள் உள்ளன. நீங்கள் எந்த துறையை சேர்ந்தவராயினும் உங்களுக்கு உகந்தந்து போல் ஒரு படிப்பு இருக்கும்! இதில் என்னை பொறுத்தவரை உதவித்தொகை மிகவும் அதிகம்.


பொதுவாக ஒரு செமஸ்டர் படிக்க உங்களுக்கு இரண்டு இடங்கள் தரப்படும் , அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். சில செமஸ்டர்கள் இல் ஒரே இடம் , அதில் தான் படிக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும். நாம் மூன்றாம் நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர் என்ற அடையாளத்தில் வருவோம் ( third country applicant). ஒரு கோர்ஸில் பதினெட்டு பேர் மூன்றாம் நாடுகளில் இருந்தும் , மீதி எழு பேர் ஐரோப்பாவின் உள் இருந்தும் தேர்வுசெய்யப்படுவார்கள். ( இந்த எண்கள் மாறலாம் !! ) . ஆக நாம் ஒரு மாறுபட்ட பல்நாட்டு கலாச்சாரத்தை சந்திக்கும் வாய்ப்பாக இது அமைகிறது.பல நாட்டு மாணவர்களுடன் பழகும் வாய்ப்பாகவும் பல பல்கலைக்கழகங்கள் சென்று பயில ஒரு வாய்ப்பாகவும் இது இருக்கிறது.


நான் படிக்கப்போகும் இந்த படிப்பில் மொத்தம் இரண்டாண்டுக்கும் சேர்த்து 42,000 யூரோ உதவித்தொகை . அதில் செமஸ்டருக்கு இரண்டாயிரம் என எட்டாயிரம் இரண்டாண்டுக்கு போய்விடும் , மிச்சம் நமக்கு தான்.


சேர்வதற்கு உண்டான தகுதி ஒவ்வொரு கோர்ஸ்க்கும் மாறுபடும்! அதில் ஆங்கில அறிவை காட்ட TOEFL/IELTS எடுப்பது அவசியம். முக்கால்வாசி படிப்புகள் ஆங்கிலத்தில் தான் இருக்கும்.


மொத்தம் எத்தனை கோர்ஸ்கள் உள்ளன என்பதை இணைப்பாக தருகிறேன். உள்ளே போய் பாருங்கள் , ஒவ்வொரு ஹைபர்லிங்க்இலும் தேவையான அனைத்து தகவல்களும் இருக்கும். இதுபோக எராசுமஸ் படிப்பை பற்றிய முக்கிய வினா விடை ( FAQ's) தனியாக கீழே உள்ளது. நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் , அந்தந்த Graduate co-ordinator ஐ தொடர்பு கொள்வது தான்.


பி.கு : ஒவ்வொரு கோர்ஸும்ஒவ்வொரு தினுசு. ஆக தனித்தனியே உங்களுக்கு தேவையானதை எடுத்து பாருங்கள்.வேறு எதுனா தெரிய வேண்டும் என்றாலும் கேளுங்கள் , ஒவ்வொரு கோர்சிலும் ஒரு தமிழர் இருக்க வாய்ப்பு உண்டு. அவர்களிடம் கேட்டு விவரம் பெறலாம்



List of EM courses : http://ec.europa.eu/education/programmes/mundus/projects/index_en.html

FAQ's : http://www.u-picardie.fr/userfiles/file/Mundus%2520_%2520Frequently%2520asked%2520questions%5B1%5D.pdf

Wednesday, July 22, 2009

ஆத்மாநாம் என் ஆத்மாநாம்- அடுத்த ஐந்து

1.ஒரு தலைப்பிடாத கவிதையாய்

வாழ்க்கை

ஒரு நாள் இரண்டு நாள் என

தொடர்ந்து நாட்களை எண்ணினேன்

காலையை தொடர்ந்து மாலை

இரவாகும் காலப் புணர்ச்சியில்

பிரமித்து நின்றேன்

கடற்கரையில்

2.அற்புதமாய் புலர்ந்த காலை

நீள நிழல்கள்

நீலத்தில் கோலமிட

வண்ணக்கலவயாய் உலகம்

எங்கும் விரிந்து கெட்டியாய் தரை


என் காலடியில்


நிஜம் புதைந்து கிடக்க


3. தும்பி

எனது ஹெலிகாப்ட்டரை

பறக்க விட்டேன்

எங்கும் தும்பிகள்

எனது தும்பிகளை

பறக்க விட்டேன்

எங்கும் வெடிகுண்டு விமானங்கள்

எனது வெடிகுண்டு விமானங்களை

பறக்க விட்டேன்

எங்கும் அமைதி

எனது அமைதியை

பறக்க விட்டேன்

எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்


4. களைதல்

என்னை களைந்தேன்

என் உடல் இருந்தது

என் உடலை களைந்தேன்

நான் இருந்தது

நானை களைந்தேன்

வெற்றிடத்துச்

சூனிய வெளி இருந்தது

சூனிய வெளியை களைந்தேன்

ஒன்றுமே இல்லை

5.இசை/ஓசை

வயலினில்
ஒரு நாணாய்
என்னை போடுங்கள்
அப்பொழுதேனும்
ஒலிக்கிறேனா
எனப்பார்ப்போம்

அவ்வளவு துல்லியமாக
அவ்வளவு மெல்லியதாக
அவ்வளவு கூர்மையாக

எல்லா நாண்களுடனும்
ஒன்று சேர்ந்து
ஒலித்தப்படி

உள் ஆழத்தில்
ஒலியின்
ஆளரவமற்ற
இடத்தில்
மிக மிக மெலிதாய்
ஒரு எதிரொலி கேட்கிறது


கூர்ந்து கேட்டால்

அதே துல்லியம்
அதே மென்மை
அதே கூர்மை

Friday, July 10, 2009

ஆத்மாநாம் கவிதைகள்

இவரை பற்றி எங்கயாது போய் தெரிந்துகொள்ளுங்கள். எனக்கு ஒன்றுமே தெரியாது , இவரின் கவிதையும் இவரையும் தவிர! எனக்கு பிடித்த பத்து இதோ

சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பரை சொல்லுங்கள்

நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்

என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன்

நீங்கள் யாரென்று சொல்லுங்கள்

உங்கள் நண்பர்களை சொல்லுகிறேன்

முழித்த முழி முழியையே முழுங்கும் போல

நீங்கள் யாரானால் என்ன

நான் யாரானால் என்ன

அனாவசியக் கேள்விகள்

அனாவசிய பதில்கள்

எதையும் நிரூபிக்காமல்

சற்று சும்மா இருங்கள்

சில எதிர்கால நிஜங்கள்

அரிசி மூட்டையிலிருந்து சிதறிய

அரிசி மணிகள் போல்

தப்பி தவறி திசை தடுமாறி ஓடி வந்த

சின்னஞ்சிறு சிற்றெறும்பு போல்

மொசைக் தரையில் தவறிப்போன

ஒற்றை குண்டூசி போல்

இவற்றைப் போல் இன்னும்

ஆயிரக்கணக்கான போல்கள்

பழக்கம்

எனக்கு கிடைத்த சதுரத்தில்

நடை பழகிக்கொண்டிருக்கிறேன்

கால்கள் வலுவேறின

நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று

என் நடப்பைத்

தெரிந்துகொண்ட சில மாக்கள்

விளம்பினர்

ரோட்டிலேயே நடக்க முடியவில்லை

ஒரு சதுரத்திற்குள் நடக்கிறானாம்

நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா

என் கால்கள்

என் நடை

என் சதுரம்

ஐயோ

சொன்னால் மறுக்கிறார்கள்

எழுதினால் நிராகிக்கிறார்கள்

தாக்கினால் தாங்குகிறார்கள்

சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்

அற்புத உலகம்

அற்புத மாக்கள்

சுற்றி

அரச மரத்தை சுற்றி

பிறந்த பிள்ளை ஒருவன்

வேப்ப மரத்தை சுற்றி

பிறந்த பிள்ளை ஒருவன்

எந்த மரத்தை சுற்றி

பிறந்த பிள்ளை இவன்

ஏதேனும் தறுதலை மரமாக இருக்குமோ?

மீதி ஐந்து அப்பாலிக்கா

Wednesday, June 24, 2009

வெகு நாள் ஆசை


எல்லா இரவுகளும் போல அந்த இரவு இல்லை. குளிர் ஆள் மனதில் கூடுதலான பயத்தை உண்டாகி இருந்தது. நெஞ்சுக்குள் யாரோ கத்தியை இறக்குவது போல் குளிர் என்மீது பாய்ந்து கொண்டிருந்தது. இருட்டு முழுவதுமாக பரவியிருந்தது.


வெளியே எட்டி வானத்தை பார்த்தேன் , அடை மழை. மழையை மிஞ்சும் அளவு கதறி அழலாம் போல் இருந்தது. அதற்கும் தெம்பற்று மனம் இறக்கை ஒடிக்கப்பட்ட பறவை போல் முடங்கி கிடந்தது. தனிமை , நானே தேடிக்கொண்டது இல்லை. சபிக்கப்பட்ட தனிமை. மரணத்தை தீண்ட மனம் எவ்வளவு எத்தனித்தாலும் உடலளவில் தைரியம் இல்லை. எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு வீறு கொண்டு எழ நினைத்தாலும் கண்ணீர் துளியில் ஒடுங்கிப்போகிறேன். எனது வண்டி நேராக நான் பள்ளிபருவத்தில் படித்த இடத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தது மறுநாள் மதியத்தில்.





மாலதி , நான் உனக்கு என்ன குறை வைத்தேன்.இந்த கேள்வியை நான் அவளிடம் கேட்டிருந்தால் அவள் கூறும் பதிலின் ரணத்தை விவரிக்க இயலாது. படிப்பு மட்டுமே குறியாக இருந்தது கல்லூரியில் எனக்கு , இரண்டாவாதாக வந்தேன் கல்லூரியில்.உடன் வேலை , எதிர்பாரா சம்பளம். எல்லோர் போலும் நான் வீணாக குடி கும்மாளம் என்று காசை சீரழிக்கவில்லை , மாறாக சேர்த்தேன். சென்னையில் சொந்த வீடு பன்னிரண்டு லட்ச ருபாய் கொடுத்து வாங்கும் அளவிற்கு , அக்கா கல்யாணத்தை தனி ஆளாக தடபுடலாக நடத்தி காட்டும் அளவிற்கு சேர்த்தேன் . அடுத்தது எனக்கு ! வருபவளை ராணி போல் வைத்திருக்க வேண்டும் , தேடி தேடி முழுவதும் இயந்தரமயமாக்கப்பட்ட வாஷிங் மெஷீன் வாங்கினேன் , சோபா , இத்யாதி , இத்யாதி.

மாலதி நான் படித்த அதே படிப்பை படித்திருந்தாள் . பெண் பார்க்கும் போதே மனம் விட்டு பேசினோம். ஆசையாக நடந்த கல்யாணம். தலையில் வைத்து கொண்டாடினேன், மனசெல்லாம் மாலதி.அவளுக்கும் சந்தோஷத்திற்கு குறை இல்லை. அவ்வபொழுது உடலுறவில் நான் சோர்வடையும் பொழுது அவள் எரிச்சல் பட்டுக்கொள்வதை நான் பெரிதாக எடுக்க வில்லை. தனிமையில் மருத்தவரிடம் போனபொழுது எனக்கு ஒரு குறையும் இல்லை என்றார்.

"என்னன்னா இந்தாண்ட வந்திருக்க , எத்தினி நாள் ஆச்சு ? "நான் பன்னிரண்டாம் படிக்கும்பொழுது மெக்கானிக் கடையில் வேலைபார்த்த காளி இப்பொழுது கடை முதலாளி.

"நல்லா தாண்டா இருக்கேன். ராஜன் எப்டி இருக்கான்? ."

"இருக்கான் அவனும். என்ன இந்தாண்ட? ." வண்டியை பார்த்துக்கொண்டே கேட்டான் .

" ஒண்ணுமில்ல , மூர்த்தி அண்ணன் வீடு எங்க இருக்கு? வினோத் அடிக்கடி போவானே. "குரல் கம்மிப்போய் சொன்னேன்


"இன்னானா உனக்கு பழக்கம் இல்லையே? கண்ணாலம் வேற ஆயிடுச்சுனாங்க பசங்க . "


வூடு எங்க டா ? சிரித்துக்கொண்டே கேட்டேன்


" டேய் சங்கரு , அண்ணன மூர்த்தி அண்ணன் வூட்டாண்ட இட்டுனு போ. "


இருவருமே சிரித்துக்கொண்டோம். காளிக்கு தெரியும் நான் போதைப்பொருள்களை தொட்டதே இல்லை. வினோத் பள்ளிக்கே கொண்டு வருவான். காளி கடையில் வைத்து பல முறை அடித்திருக்கிறான் . மூர்த்தி வீட்டிற்கு போவதற்கு நான் புதிதாக வண்டி ஓட்ட கற்று கொள்ள வேண்டும் போல இருந்தது.


இந்த முறை அவள் என் முகத்திலேயே அறைந்தாள். ச்சீ என்று சொல்லிவிட்டு திரும்பி படுத்தாள். இது போல் தினமும் , எனக்கு ரண வேதனையாக இருந்தது , எதிர்ப்பார்ப்புகள் அதிகம் அவளுக்கு. ஆனால் அவள் ஏன் மாற வேண்டும்? யாருடனோ இரவு பன்னிரண்டு மணிக்கு தொலைபேசியில் பேசுகிறாள்? சிரிக்கிறாள் , சிணுங்குகிறாள். நான் வந்தால் துண்டித்துவிடுகிறாள் , இணைப்பை. மறுநாள் அவள் சொன்னன வார்த்தை தீயாக சுட்டது. " என்னுனுச்" என்றாள் , சத் என்று யாரோ கீறியது போல் இருந்தது. இதுபோன்ற சமயங்களில் அவளிடம் பேச முடியாது. அது சரி , எப்பொழுது தான் முகம் கொடுத்து பேசுகிறாள் ? . அன்றிரவு பெப்சி டின்னை உடைத்தேன் , பொங்கி வருவதை வெறுப்புடன் பார்த்துக்கொண்டே மீண்டும் தனிமையில்.



இதுக்குமேல வண்டி போவாதுனா என்றான் அந்த சின்னபய்யன்.

"எந்தாண்டடா போனும்? "

" இன்னும் ரெண்டு சந்திருக்கு , நானே இட்டுனு போறேன் , இல்லேனா காளினா திட்டும் "


மூர்த்தி வீட்டை ஒட்டி நிறைய குடிசை இருந்தது. அவன் பார்க்க நகைக்கடை பொம்மை போல் இருந்தான். உள்ளே போனேன் , போய்க்கொண்டே இருந்தேன். பல வகையான போதை , கல்லூரி மாணவர்கள் , பெண்கள் உட்பட. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாதாம். வாடிக்கையாளர் திருப்தி தான் முக்கியம் என்றான். பாம்பு கடி போதை கூட இருந்தது.சிறுவன் கழண்டு கொண்டான்.


" இன்னாப்பா வேணும் உனக்கு? " என்றான் மூர்த்தி சன்னமாக.


" ஹெராயின் " என்றேன்.


சிரித்துக்கொண்டே அடித்து பழக்கம் இருக்கா என்றான் , இல்லை என்று தலை ஆட்டினேன்.

அன்றிரவு நான் குளிரின் நடுக்கத்தில்மீண்டும் அந்த கடிதத்தை வாசித்து கொண்டிருந்தேன். என்னை போல் வாழ்க்கையை வீணாக்கும் பிறவியுடன் மாலதி வாழ விரும்பவில்லையாம் , கல்லூரியில் உடன் படித்தவன். நியூசீலாந்தில் இவளை வைத்து வாழ அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டானாம் , போகிறேன் என்று எழுதி விட்டு கிளம்பி விட்டாள் . ஏற்பாடுகளை அவன் அவனுடைய ஆண்குறியில் தான் செய்யவேண்டும் நியூசீலந்தில் அல்ல என்று நினைத்துக்கொண்டேன். அவள் கொடுத்துவிட்டபோன தாலி என் வெகுநாள் ஆசையின் சாட்சியமாக நின்றிருக்க மீண்டும் குளிர் ஆள் மனதில் கூடுதலான பயத்தை உண்டாகி கொண்டிருந்தது


ஹெராயின் முதலில் பௌடர் போல் இருக்கிறது. அதை அவன் அளந்து தான் கொதிக்கும் நீரில் போடுகிறான் , என்னை அந்த குழாயின் முனையை பற்றிக்கொள்ள சொன்னான் , புகை வந்தது.


" இழுங்க நல்லா " என்றான். பயத்தை மறந்து இழுத்தேன் , தலை இரண்டாக சுற்றியது. ஒரு சின்ன நாற்காலியில் உக்காந்திருந்தேன் , சிரித்துக்கொண்டே கீழே விழுந்தேன். கொஞ்சம் உணர்வற்று ஒரு அரைமணி நேரம் இருந்திருப்பேன். அடுத்த கேள்வி மூர்த்தியிடம் கேட்டேன்.


"பொண்ணு வேணும்னா , வீட்டுக்கு இன்னிக்கு ராத்திரி கூட்டினு போனும் "

"எப்போ வுடுவ ? மொத்தமா ஆறாயிரம் செலவாகும். சரக்குக்கும் சேர்த்துதான் சொல்றேன்"


"பிரச்சனை இல்லனா. "


"சரி அட்ரஸ் குடுத்துட்டு போ , மாரிதான் கொண்டாந்து விடுவான் பொண்ண"


"அண்ணா இருக்கறது பிளாட்டுனா , பிரச்சன ஆயுடாதே? "


சிரித்தான். " அது மாரி பொண்டாட்டி தான் பா. ஒன்னியும் கவலைப்படாத , வுட்டுட்டு கிளம்பினே இருப்பான் . நீ காத்தால டாக்சிக்கு கூட துட்டு தர வோணாம் "


சரினா என்று மொத்த ஆறாயிரமும் கொடுத்து விட்டு கிளம்பினேன்.

மாரி சொன்ன நேரத்துக்கு முன்னையே விட்டுவிட்டான் அவன் பொண்டாட்டியை . புருஷனே புரவலராக அமைய பலர் விரும்புவதில்லை , சிலருக்கு கட்டாயம். சிலருக்கு வேட்கை!


முழு பலத்துடன் அவள் உடலை புணர்ந்தேன். அவள் வாயில் வந்த கெட்ட வார்த்தைகளை கூட பொருட்படுத்தாமல் . சிறிது நேரம் கழித்து உணர்வற்று படுத்திருந்தாள் ,


வெகு நாள் ஆசை அவள் கழுத்தில் இருக்கும் தாலி அறுந்து ரத்தம் என் திறந்த மார்பை தொட்டது.குளிரின் பிடியில் ஜென்னலை வெறித்து பார்த்துகொண்டிருக்கிறேன் .

Monday, June 15, 2009

பெரியவர் ( சிறுகதை போட்டிக்காக)

எப்பொழுதும் போன்ற சிரிப்புடன் கூடிய பேச்சு சத்தம் அன்று மார்க்கெட்டில் இல்லை. ஒரு விதமான உஷ்ணத்தை அங்கிருக்கும் அனைவருமே உணர்ந்தனர்.அனைவரும் அண்ணாச்சியின் வார்த்தைக்கு ( கட்டளைக்கு) காத்திருந்தனர். கடையின் பின்புறத்தில் அண்ணாச்சி உக்கார , இருபது பேருடன் அந்த கூட்டம் தொடங்கியது


" ஏலே இந்த பயலுவலால தனியா நின்னு இப்புடி பேச முடியும்னு நினைக்கீகளா? " அண்ணாச்சி எழுந்து நின்று உரக்க கத்தினார்.


"இல்ல அண்ணாச்சி , போன வாட்டி அவிங்க என்ன கேட்டானுங்க? . எல்லா தடவையும் நாம தான மொதல்ல தேர இழுக்கோம்" சந்தேக தொனியில் வினவினான் வெள்ளை சாமி.


" எலேய் , உனக்கு புரியலையா? . எந்த பயலுக்கு அண்ணாச்சி முன்னாடி தேர நாங்க தான் மொதல்ல தொடுவோம்னு சொல்ற தெனவு இருக்கு? அண்ணாச்சி என்ன சொல்லுதார்னா , அந்த பெரியவர்தான் இவிங்கள தூண்டி விடுத்தாராம்." வேலு சொல்லி முடிப்பதற்குள் அண்ணாச்சி ஆரம்பித்தார்.


" இங்க பாருங்கலே , அந்த பெரியவரு இந்த சின்ன பயலுவள வேணும்னே தூண்டி விடுதாரு. இத்தனைக்கும் அந்த முருகப்பய சாமி ஆடுதான் , என்ன சாதில அந்த பெரியவரு? கொஞ்சம் காசு பணம் பார்த்துடா நம்மள எதிர்க்கவே ஆள தூண்டி விடுவானோ?

அருதப்பயவுள்ள காட்டனும்லே இந்த மார்கெட் நம்ம சாதியோட கோட்டை தாம்னு காட்டனும்லே . தொழில்ல என்ன ஜெயிச்சுப்புடுவானோ அப்புடீன்னு ஒரு பயம் வந்திருச்சுலே , இன்னிக்கு மருவாதையும் போகனுமா? . எலேய் என்னலே நான் ஆசைப்பட்டேன் , நம்ம பயலுவளுக்கு செய்யனும்னு தானல வாழ்க முழுசா உழைக்கிறேன் , தோத்தா நான்டுக்க வேண்டியது தான். " அண்ணாச்சி குரல் உச்ச ஸ்தாயியில் ஆரம்பித்து உடைந்தது.

" அண்ணாச்சி , நீங்க ஏன் கலங்குதீக? இன்னிக்கு ராவுல பெரியவர் கடை இருக்காது . ஊர்ல இல்லாத கலர் கடை வெச்சிருக்கனோ? . நீங்க வீடு போய் சேருங்க அன்னாசி சேதி வரும்" சீறினான் வெள்ளை.


அண்ணாச்சி ஒரு விதமான மன நிறைவுடன் கிளம்பினார். வெள்ளை , வேலு , குமார் , சங்கிலி நாலு பேரும் செல்வது என முடிவெடுக்கப்பட்டது. திருவிழாவில் அனைவரும் லயித்து கிடக்க கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருக்கும் பெரியவர் கடையை கொளுத்தினால் யாருக்கும் தெரியாது. வெள்ளை வீட்டுக்கு வேகவேகமாக சைக்கிளை அழுத்தினான்.

" பார்வதி , எங்குன இருக்க? மண்ணெண்ணெய் வேணும் , கடைக்கு தேவைப்படுது "


" எதுக்கு கடைக்கு? . வீட்ல குறைசலா இருக்கு , அரிசி கூட தீரப்போவுது. புள்ளைங்க ஸ்கூல் போவ புது துணி வேணும்னு கேட்டதுங்க . நான் என்ன உங்கள்ட நகநட்டா கேக்கேன்? " பார்வதி முடிப்பதற்குள் மண்ணெண்ணெய் எடுத்து கொண்டு வெள்ளை கிளம்பினான்.


" புருஷன் வீட்டுக்கு வந்தா கொஞ்சாமது அன்பா பேசுங்கடி , சும்மா எந்நேரமும் பஞ்ச பாட்டு பாடறது " கூடுதலாக பார்வதி குடும்பத்தை நான்கு கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்து விட்டு கிளம்பினான்.


துல்லியமாக செய்ய வேண்டும். கொஞ்சம் பிசகினால் தலை தப்பாது. யாரும் பார்த்து விடக்கூடாது. பாட்டிலில் ஊற்றி திரியை பற்ற வைத்து உள்ளே வீசும் வேலை சங்கிலியின் பொறுப்பில் விடப்பட்டது. மற்ற மூவரும் காவல் காத்தனர். திருவிழா ஜோரில் பெரியவர் கடையில் ஆள் நடமாட்டமே இல்லை. பெரியவரின் கடையை ஒட்டி தான் அவர் வீடு . சொந்தபந்தங்கள் திருவிழாவிற்கு வந்திருக்க கூடும். இரண்டு பெரிய மரக்கதவுகளில் ஒன்றை மட்டும் வெள்ளை நன்றாக தாளிட்டு வந்தான். பெரியவருக்கு சத்தம் கேட்டிருக்காது. வேலு ஊர்ந்து போய் இரண்டாவதை பூட்டி பின் வாசலை மொத்தமாக அடைத்தான். முன் வாசல் வழியாகத்தான் ஆள்கள் வர வேண்டும்.அந்த கதவை ஒரே நொடியில் பூட்டி விடலாம். பின்னாலிருக்கும் ஜென்னல் தேர்ந்தெடுக்கப்பட்டது. பின் வாசலுக்கு நேர் எதிராக இருக்கும் திரையில் சங்கிலி கொளுத்தி போட்டான். முன் வாசலை சாத்தி விட்டு வேலுவும் வெள்ளையும் பறந்தார்கள்.


சைக்கிள் அழுத்தம் நிற்கவே இல்லை , வீட்டுக்கு வரும் வரை. ஒருவரை ஒருவன் பின்பு பார்த்துக்கொண்டனர். சங்கிலி விடைபெற்றுக்கொண்டான்.



" எலேய் செஞ்சுப்புட்டோம்ல ,பெரியவர்க்கு கடைனு ஒன்னே இல்லைன்னு ஆகிடுச்சு பார்த்தியா? . என்னலாமோ சத்தம் , பெரியவர் பேரன் பேத்தி சத்தம் தான் அதிகமா கேட்டுச்சு,உள்ள போய் அதுங்கள காப்பாத்தி இருக்கலாமோ? "



" வேலு மொதல்ல கிளம்புல , அதுங்கள காப்பாத்தினா நம்ம குடும்பத்த
அவன் கருவருத்துப்புடுவான்". சரி தான் என்பது போல் தலையாட்டிவிட்டு வேலு கிளம்பினான்.


புரண்டு புரண்டு படுத்த பார்த்த வெள்ளைக்கு தூக்கமில்லை. அண்ணாச்சி சந்தோஷப்படுவார் , அது போதும். பார்வதி பக்கத்தில் இல்லை.

" புள்ள எதுக்கு வாசல்ல கெடக்க? " ?

" பொடுசுங்க ரெண்டும் பெரியவர் கடைல ரோஸ் மில்க் சாப்படனும்னு அம்மாச்சி கொடுத்த காச வாங்கிட்டு போச்சுங்க , இன்னும் வரக்காணோம்."

Tuesday, June 2, 2009

சைட் அடித்தல் - சாமி ஆடுதல்


அடுத்த மொக்கைப்பதிவு ரெடி. எனக்கு பகுத்தறிவு மிக லேட்டாக சேர்ந்த விடயம் தான். சின்ன வயதில் சாமி பக்தியும் அதிகம் கிடையாது. ஆனால் , நானும் பேசிலும் ( பார்த்து பத்து ஆண்டுகள் இருக்கும்) அடிக்கடி தேவாலயம் சென்றது நினைவிருக்கிறது. மச்சான் என் ஆளை காட்றேன் வாடா என கூட்டிக்கொண்டு போவான். அவன் ஆள் உட்பட அனைத்து ஜிகிடிகளையும் கண்ணால் விழுங்கி விட்டுதான் மறுவேலையே.கடைசி வரை அந்த பெண்ணிடம் பேசில் பேசினானா என்று நினைவில்லை.



இந்நிலையில் எங்கள் ஊரில் திருவிழா மிகப்ப்ரசித்தம். தங்ககார்த்தி எல்லாம் தீபாவளிக்கு கூட துணி எடுக்க மாட்டான் , ஆனால் திருவிழா என்றால் திலகராஜில் முதல் ஆளாக நின்று விடுவான். இந்த திருவிழாக்களில் ஒரே ஒரு பெண்ணை மட்டும் தேர்ந்தெடுத்து கூட்டத்தோடு கூட்டமாக அவள் பின்னால் செல்வதை வருடாந்திர கடமையாக செய்து வந்தோம். குறிப்பாக அவர்கள் வெளி கிராமத்து பெண்களாக இருக்கும் பட்சத்தில்.

இன்றும் நினைவிருக்கிறது " மாப்ள அந்த ப்ளூ உன்னையே தாம்ல பாக்குது" என்று உசுப்பி விடப்போய் ஒரு நான்கு கிலோமீட்டர் தூரம் என்னை நடக்க வைத்தான் ஒரு படுபாதகன். என் மனாசாட்சிக்கு தெரியும் அவள் திரும்பவேயில்லை.



பதிவின் சாரத்திர்க்கே வரவில்லை , நான் சொல்ல வந்தது சாமி ஆடுதலை பற்றி. பலமுறை பேச்சுபோட்டிகளில் கலந்திருக்கிறேன். வேறொரு பள்ளியிலிருந்து வரும் ஒரு சிட்டு செமையாக சிலிர்த்துகொள்ளும் போட்டிகளில். நம் ஊரில் அந்த இடத்தில் திருவிழா போகலாமா என்றான் நண்பன் , சரி என்று சைக்கிள் எடுத்து கிளம்பினோம். அங்கு போய் தான் அது முழுக்க சாமி ஆடும் திருவிழா என்று தெரிந்தது , ராட்டினம் இல்லை , மிளகாய் பஜ்ஜி இல்லை , பஞ்சுமிட்டாய் இல்லை ஒரு மயிரும் இல்லை.


சரி மொக்கை என்று திரும்பி வந்துவிடலாம் என பார்த்தல் பெருங்கூட்டம். சாமி அடஆரம்பித்துவிட்டாள் ஒரு பெண்மணி , ஆச்சரியமாக உற்று பார்த்தேன் , ஏன் ஆடுகிறாள் என்ற காரணம் புலப்படவில்லை , அப்பொழுது ஆத்திகனாகவே இருதாலும் எனக்கு சாமி ஆடுதல் ஒரு வித மன நோயாகவே பட்டது. அப்பொழுது தான் அந்த சிட்டு டமால் என்று சாமி ஆட்டம் போட்டது , அது போட்ட ஆட்டத்தில் நான் சாமி எல்லாம் காணவில்லை , பலான பலான ஆட்டம் போல் தான் அடியேனின் கண்ணுக்கு தெரிந்தது. பெருசு ஒன்று பட்டை பட்டையாக விபூதி போட்டுக்கொண்டு அந்த பிள்ளையை எடக்கு முடக்காக பார்த்துக்கொண்டிருந்ததை பார்த்தேன். நெருங்கிப்போய் அவளைப்பார்த்து கண்ணடித்தேன் , ஒரு பிளையிங் கிஸ். இடத்தை காலி செய்தோம் நானும் நண்பனும்.

அடுத்த நாள் ஒரு போட்டி , என்னை பார்த்தவள் தடலாடியாக கத்தினாள் " உன்மேல உள்ள மரியாதையே போச்சுல ஒன்னிய மனுஷனாவே நான் இனி மதிக்கமாட்டேன். சாமிஆடுதேம்ல அங்குட்டு என்ன என்னையா கேவலமா பாக்க , அப்பறம் நீ செஞ்ச காரியத்த பத்தி பேசவே புடிக்கல " என பொரிந்து தள்ளினாள்.

பொறுமையாக கேட்டேன் " ஏ புள்ள , நீ சாமி ஆடலை , என்னியத்தான பார்த்த ? "

" அப்படி எல்லாம் இல்லையே "

" அப்பறம் எப்புடி இம்புட்டு சரியா சொல்ற நான் செஞ்சதையெல்லாம் "

மூஞ்சியை திருப்பிக்கொண்டு போய்விட்டாள் . பின்னாளில் நான் பலமுறை சாமிஆடுபவர்களை பார்த்து கண்ணடித்திருக்கிறேன். ஒரு பெண் தனியாக வந்து "ஏன் அப்படி செஞ்சீங்க" என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.



இன்று யாரவது சாமி ஆடுவதை பார்க்கவேண்டும் போல் உள்ளது

Monday, June 1, 2009

விஜயகாந்த் - புத்தக விமர்சனம்


இப்போதைக்கு இருக்குற மொக்கைல இதைத்தான் என்னால் செய்ய இயலும். ஏதாவது புத்தகம் படிப்பது , விமர்சனம் எழுவது.

புத்தகம் வாங்கி வந்தவுடன் அம்மா கேட்ட கேள்வி " ஏண்டா விஜயகாந்திற்கு ஒரு புக் ஆ ? , நீ இதெல்லாம் வாங்கமாட்டயே? "

" ஆமாம். ஆனால் எழுதியவரை எனக்கு தெரியும்.போர் அடிக்காம இருக்கும். "

" என்னவோ பண்ணு"

சரி என்று திட்டு வாங்கி விட்டு படிக்க ஆரம்பித்தேன். 136 பக்கங்கள். பறந்தது நிமிட பிரேக் இல்லை. சிட்டாக பறந்தது புத்தகம். நல்ல போதை. காலையில் தான் தெளிந்தது.போதையிலேயே ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு படுத்தேன்.

ஆரம்பத்தை நான் ஏற்க்கனவே இணையத்தில் படித்துவிட்டதால் சுவாரசியம் இல்லை. அதற்க்கு பிறகு , விஜயகாந்தின் பால்ய மற்றும் இளம் வயதை பற்றி பல சுவைகரமான தகவல்கள். கூடவே "விளாறு" போன்றவைக்கு விளக்கத்தோடு. முழுப்புத்தகம் படிப்பது எதோ படம் பார்ப்பது போல் உள்ளது.படிப்பு வராமல் விஜயகாந்த் தந்தையிடம் அடி வாங்குவது , இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்றது , பிறகு மில்லில் வேலைக்கு சேர்ந்து எதிர்வீட்டு ஜென்னல் சிட்டை நோக்குவது என எண்பதுகளில் வந்த தமிழ் சினிமாவிற்கு தரணி திரைக்கதை எழுதி வேகமூட்டியது போல் ஒரு பீலிங்.

விஜயகாந்த் படிப்படியாக முன்னுக்கு வந்ததை பற்றி லக்கி நன்றாகவே எழுதி இருக்கிறார். பின்னால் நல்ல உழைப்பு இருக்கிறது. குறிப்பாக 92-96 சிறப்பான தொகுப்பு. அவர் பட்ட அவமானகளை அதே சூட்டுடன் படிக்க முடிகிறது. நிற்க.

அறுபத்தி மூன்று ருபாய் கொடுத்திருக்கிறேன். பச்சையாக பல இடங்களில் என்னை கேனயன் என்று நினைத்து வித்திருக்கிறார்கள் .பக்கத்துக்கு பக்கம் அவர் படம் போட்டா என்ன யா ஞ்யாயம் ? . லக்கி செய்த அநியாயம் ஒன்று பக்க எண்107-112. விஜயகாந்த் மாற்று சக்தி என்பதை நிரூபிக்க ஆதி காலத்து திராவிட அரசியல் ( 1957) இல இருந்து இன்ற வரை உண்டான ட்ரெண்டை விளக்குகிறார். தேவையே இல்லாத வேலை. என்ன சமாதானம் சொன்னாலும் ஒப்புக்கொள்ளவே முடியாது. இது பக்கத்தை நிரப்பும் வேலை என்றால் , இதை நான் வாசகர்களுக்கு செய்த பச்சைத்த்ரோகமாக பார்க்கிறேன். இல்லை , இது தேவை என்று அவர் நினைத்து எழுதி இருப்பார் ஆனால் , போனால் போகட்டும். இத்துனூண்டு புக் ல இதெல்லாம் எழுதினா அநியாயம். உங்களுக்கு தமிழக அரசியலில் உள்ள அறிவை சோதிக்காவா நாங்க காசு கொடுத்தோம் ? . மற்றபடி அரசியல் சார்ந்த இடங்களில் எனக்கு நன்றாகவே தெரியும் , லக்கியால் எளிதாக எழுதி விட இயலும் என்று. சமகால அரசியலை பின்தொடரும் எவராலும் தொகுத்து விடக்கூடிய விஷயம் தான் , ஆனால் சுவாரசியமா எழுவது தான் சவால். அடுத்தமுறை கம்மி விலைக்குமட்டுமே சரக்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
( பி.கு : நெறைய சரக்கே அடித்து சலித்துவிட்டதால் , உருப்படியான ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன் )

Thursday, May 28, 2009

Some FAQ's

மாப்ள எப்டி டா இருக்க ? : எதோ டா...

என்ன பண்ற ? : காஞ்சு போய் கெடக்கறேன்.

கம்பனி செமையா இருக்கு டா : ம்ம் ...

பிகுருங்க எல்லாம் அநியாயம் : சரி டா , கடிப்ப்--- ஏத்தாத

என்ன தாண்டா மாப்ள பண்ற ? : வெட்டியா இருக்கேன்.

எல்லா நேரமமுமா ? : ஆமாம் , நீ இங்க இருந்தப்போ என்ன நொட்டிகிட்டு இருந்த ?

கோபப்படாத , என்ன பண்ற? : எப்போ பார்த்தாலும் ஆன்லைன் தான்.

அப்பறம் ?: சாப்படறேன்-தூங்கறேன் மறுபடி தூங்கறேன்-சாப்படறேன். நடுல எதுனா புக் படிப்பேன். படம் பாக்கறது இல்லை.

ஏன் டா ? : தலைவலிக்குது பார்த்தா.

எப்போ டா மாப்ள ரிசல்ட் : ஜூன் முதல் வாரம் டா.

மார்க் சீட் எப்போ கொடுப்பானுங்க ? : தெரியல , சீக்கரம் கெடைக்கணும்.


Technical FAQ's for relations :

என்னப்பா , காலேஜு முடிச்சுட்ட போல : ஆமாங்க

வேலை கெடச்சது அப்டீனு அப்பா சொன்னாரே : உண்மை தான் சார் !

போகல ? : இல்லை ! வெளிநாட்டுல படிக்க வாய்ப்பு கெடச்சிருக்கு.

எங்க ? என்ன படிப்பு? : பிரான்ஸ். படிப்பு பெயர் " Materials for energy storage and conversion" இரண்டு வருஷம்.

ஏதுப்பா உங்கப்பா இவ்வளவு சேர்த்து வெச்சிருக்கார்? : படிக்க , தங்க , தூங்க , சாப்பட அவங்களே காசு கொடுக்கிறாங்க.

போக காசு : அது கூட நாம போடலேன்னா எப்புடி ?

எதோ வசதி இருக்கு போற : ( டேய் தகரடப்பா மண்டையா ) , இல்லங்க பெருசா இல்லை. ஒரு ஒருலட்சம் இன்னும் கொஞ்சம் கூட இருந்தா போலாம். அப்பா லோன் போட்ட்ருக்கார்.

ஹ்ம்ம் இந்த காலத்துல எங்கயும் வேலை கெடைக்காது அங்க எப்புடி? :
அங்க போனா தான் தெரியும். ஆமாம் , சாப்டீங்களா? இல்லைனா அத பண்ணுங்க மொதல்ல. (நர நர நர )

For Seniors :

மச்சி என்ன பண்ற ? : சும்மார்க்கேன் மச்சி

கலக்கு த்தா பி.டெக் முடிச்சுட்ட போல : ஆமாம் டா , ஒரு வழியா.

எங்க டா போனீங்க எல்லாரும் கடைசியா : கோவா , ஊட்டி ,பிளாக் தண்டேர் டா மாப்ள .

போடு , போடோ எங்கடா ? : நான் எதுமே எடுக்கல , கரடி அப்பறம் கிருஷ்ணா வெச்சிருக்கான்.

என்ன அடுத்து , பிளேஸ் ஆணியா ? : ஆனேன்டா , CTS ல

ஆகலைன்னு சொல்லிட்டு போயேன் , எதுனா univ கெடைச்சுதா : கெடச்சுது டா , பிரான்ஸ்.

என்ன டா வித்யாசமா போற : இல்லடா , பிரேம் போய் இருக்கான்.
ஒவ்வொரு செமஸ்டரும் ஒவ்வொரு நாட்டுல.பிரான்ஸ் , போலந்து , அப்பறம் ஸ்பெயின்.

எப்படா ரிசர்ச் பண்ணுவ அப்போ ? : நாலாவது செமஸ்டர்ல டா . ஒரு நாப்பது ப்ராஜெக்ட் கொடுத்து ஒன்னு எடுத்துக்க சொல்வாங்க. நம்ம CECRI மாதிரி தான். ரேங்க் பேசிஸ்.

போடு , எப்போ கெளம்பற ? : செப்டம்பர்.

விசா? : வேல நடந்துக்கிட்டே இருக்கு டா.



இதுபோக இன்னபிறர் ( தாளத்தோட தந்தையார் , தாயார் யாராது இருந்தீங்கன்னா) , இதை படிக்குமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். நான் படு வெட்டியாக இருப்பது உண்மை தான். அதற்காக வெந்த புண்ணில் , வேல் கம்பை விட வேண்டாமென்று உங்களிடம் மன்றாடுகிறேன்.


எரிச்சலுடன் ,
பிரகாஷ்

Wednesday, May 20, 2009

The 3 mistakes of my life - புத்தக விமர்சனம்


கோவாவில் மடுகானில் ,ரயில் வருவதற்கு சிறிது நேரம் முன் நானும் கிருஷ்ணாவும் புத்தக வேட்டையில் இறங்கினோம். என் கண்ணுக்கு இந்த புத்தகம் பட்டது ஏற்கனவே அவினாஷ் இதை படிக்க சொல்லியிருந்தான். விலை 95 தான் வாங்கி வைத்து அந்த மொக்கை ரயிலில் ஏறினேன். அங்கே உட்காரவே இடமில்லை , ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்தபோதிலும்.


மங்களூரில் நான்கு மணி நேர காத்திருப்பு , புத்தகத்தை திறந்தேன். அனைவரும் அசந்து தூங்க , ராப்பாடியாக கிருக்குபயல் போல் படித்த என் தலையில் பைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பு விழுந்தது.
மதம் , அரசியல் , கிரிக்கட் கொஞ்சம் காதல் + அருமையான கில்மா ( மஞ்சு பாதி புத்தகத்தை படித்தது விட்டு " மச்சி செம மூட் டா " என்றான் ) கலந்தால் இந்த புத்தகம். மைய கருத்துக்கு மெதுவாக வரலாம் , ஆனால் புத்தகத்தில் சொல்லிக்கொள்ளும் படி பெரிய உள்ளார்ந்த கருத்து ஒன்றுமில்லை , ஆனால் படிக்க படிக்க ஹெராயின் அடித்தாற்போல் ஒரு போதை. பக்கத்துக்கு பக்கம் சுவாரசியம். ஒரு மசாலா பாலிவூட் படத்திற்கும் இப்புதகத்திற்க்கும் எள்ளளவு வேறுபாடு இல்லை.


தனது வாசகர் ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக மின்னஞ்சல் அனுப்ப சேட்டன் அவர் கதையை பின்பு புத்தகமாக எழுதி அவரையும் காப்பாற்றுவதாக கதை. இந்த கற்பனையை உண்மை போல் எழுவது எல்லாம் நாங்க " ஜே ஜே சில குறிப்புகளிலேயே பார்த்தாகி விட்டது. ஆக சேட்டனை " தண்ணிய குடி தண்ணிய குடி " என்று தான் சொல்ல தோன்றியது .


மூன்று நபர்கள் மன்னிக்கவும் மூன்று நண்பர்கள் , ஓமி-இஷ்-கோவிந்து இவர்களை சுற்றி வருவது தான் புத்தகம்.


ஓமி- கோவிலில் வேலைபார்ப்பவன் , உடலை கட்டுமஸ்தாக வைத்து அவன் மாமா பிட்டூவின் பேச்சை கேட்டு இந்துத்வாவில் ஈர்க்கப்பட்டவன் .


இஷ் - தனது இடத்தில் மிக சிறந்த கிரிகட் ஆட்டக்காரன் , கொஞ்சம் முரடன். அதீத தேசப்பற்று கொண்டவன். பட்டாளம் புடிக்காமல் ஓடி வந்து ஊட்டில் திட்டு வாங்குபவன்.


கோவிந்து - கதை இவன் பார்வையில் இருந்து தான் சொல்லப்படுகிறது. மனித உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட தொழிலதிபராக துடிக்கும் ஒரு இளைஞன். கடவுள் நம்பிக்கை கம்மி. ( Agnostic)


இஷ் உடன் சேர்ந்து கோவிந்து ஒரு கிரிக்கட் சாதனங்கள் விற்கும் கடை ஆரம்பிக்கிறான். வருபவர்கள் இஷ் இடம் சந்தேகங்களை கேட்டு பொருட்களை வாங்குகிறார்கள் , வர்த்தகம் லாபத்தில் ஓட ஆரம்பிக்கிறது. கோவில் வளாகத்தில் ஒமியின் மாமாவின் உதவியோடு இயங்குகிறது கடை. அப்பொழுது கோவிந்து கணக்கு பாடம் எடுக்க , இஷ் கிரிக்கட் கோச்சிங்கும் ஓமி உடல் ஆரோக்கியமும் மாநாக்களுக்கு 250 ருபாய் தொகையில் கற்று தருகிறார்கள். மாமாவின் ஹிந்துத்வா பேச்சு கூட்டங்களுக்கு ஓமி ஆர்வமுடன் செல்ல , வேற வழியே என்று மற்ற இருவரும் செல்கிறார்கள். அலி என்ற இயற்கையாகவே மிக அருமையான திறமையுள்ள ஒரு சிறுவன் இஷாந்திர்க்கு சீடனாக கிடைக்கிறான். அவனை ஆஸ்திரேலியா சென்று பயிற்சி கொடுக்கும் அளவிற்கு இஷாந்த் முயற்சி எடுக்கிறான். இஷாந்தின் தங்கை வித்யாவிற்கு கணக்கு பாடம் எடுக்க கோவிந்திடம் சொல்ல கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் காதல் வயப்படுகிறார்கள். கடைசியில் பிட்டூ மாமாவின் மகன் கோத்ரா ரயில் எரிப்பில் கொல்லப்பட , அலியை தேடி கொண்டு பிட்டூ மாமா ஒரு மத வெறி கும்பலோடு இம்மூவரிடதிலும் வருகிறார். ஓமி தன உயிரை நீத்து ஒரு இஸ்லாமிய சிறுவனின் உயிரை காப்பாற்றுகிறான். பின்பு வித்யாவின் காதலை இஷ் ஏற்று கொண்டானா , இஷ்-கோவிந்து இணைந்தார்களா என்பது தான் கதை .



மூன்று முக்கிய தவறுகள் என்னவென்றால் , முதலில் கிடைத்த அனைத்து லாபங்களை வைத்து கோவிந்து ஒரு இடம் வாங்குகிறான் ஒரு ஷாப்பிங் மாலில் , ஆனால் அது பூகம்பத்தில் தரைமட்டமாகிறது.

கணக்கு வாத்தியாக இருந்து கொண்டே வித்யாவை காதலிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் , ஒன்பது முறை உடலுறவும் வைத்து கொள்கிறான்.

உண்மையில் பெரிய தவறு , கடைசி நேரத்தில் பிட்டூ மாமாவின் ஆள் ஒருவன் அலியை வெட்டவர கொஞ்சம் காலதாமதமாக அவனை தூக்குகிறான் கோவிந்து. அந்த ஒரு நிமிட சுயநல சிந்தனையால் அலியின் கையில் பலத்த அடிபடுகிறது.

இதில் சேட்டன் நமக்கு பிடித்த பல அம்சங்களை கவர் செய்கிறார். யார் போட்டாலும் அலி சிக்சராக அடிப்பது. லக்ஸ்மனின் 287 ரன்கள் எடுக்கும் ஆட்டத்திற்கு பிறகு வ்யாபாரம் சூடு பிடிப்பது. அழகாக கோவிந்து காதல் வயப்படுவது , வித்யா முதன்முறையாக அவனிடம் இதழ் பதிப்பது. ( We kiss each other until one of us struggle for our breath , we kiss when we feel like kissing and study when we feel guilty) . பிறகு அவளது பிறந்தநாள் சமயத்தில் இருவரும் மொட்டைமாடியில் கொள்ளும் உடலுறவு என்று சூர கில்மா. ஒக்கா மக்காவென்று எழுதியிருக்கிறார். மத அரசியலை உள்ளே புகுத்தும்பொழுது பல இடத்தியல் லாஜிக் சறுக்கல்கள். பேலன்ஸ் செய்வதாக நினைத்து கொண்டு கோத்ராவையும் , அதான் பிறகு நடந்த வன்முறைகளையும் ஒரு சேர கதையில் புகுத்துகிறார். எது எப்படியோ , பிட்டூ மாமாவின் வெறியை கண்முன்னே நிறுத்துவதில் சேட்டன் பிரமாதம். கடைசியில் சுபம் போட்டு முடிக்காத குறை தான்.

படமாக எடுத்தால் பிச்சுகிட்டு ஓடும் ! தெரிந்து கொள்ள ஒன்றும் இல்லை , ஆனாலும் இந்த புத்தகம் கிக் தான்.



Wednesday, May 6, 2009

நான்

இந்த எழுதவேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்து உதிக்கிறது ?. அது ஒரு உள்ளார்ந்த உந்துதல் என எவனாவது சொன்னா கேட்டுக்கொண்டு விட்டு விடுவேன். எனக்கு அது ஒரு அரிப்பு. எப்பொழுதாவது வரும்.
இப்போ எண்டா வந்துச்சுன்னு கேக்குறீங்களா? அட பயபுள்ளைங்க கல்லூரியில் இரண்டு ஒன்று என கணக்கு சொலாரானுங்க , என்னடா ஒரு நாளைக்கு எத்தன தடவங்க்ற கணக்கா ( அதில் ஆண்டோனி மட்டுமே ஆறு முறை தொட்டு சாதனை புரிந்தவன்) அப்டீனு கேட்டா , அட நம்ம பிரியப்போக இருக்கும் நாட்கள் என சொல்லி கஜக்குஷ்டத்தை தர்ரானுங்க.
பிரியப்போகும் பொழுது ஸ்லாம் புக் எழுத கொடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் , எவன் எவன் என்ன எழுதரான்னு தெரிஞ்சுக்கலாமேன்னு கொடுத்துடறது. நம்மள எழுத சொன்னா , ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணன் இடம் இருந்து எதுனா காப்பி அடிச்சு அஜால் குஜாலா எழுதி கொடுத்து விடுகிறேன். கோடிட்ட இடத்தை நிரப்புவது இன்னும் எளிது , டைரியில் தான் கதை அடிக்க வேண்டும்.

இதில் எழுதி கொடுப்பவன் எல்லாம் , நீ இப்படி இருந்திருக்கலாம் அப்படி இருந்திருக்கலாம் என கதை விடுவது படிப்பதற்கே அருவருப்பாக உள்ளது. நினைவுகள் மட்டுமே எடுத்து செல்ல அந்த எழவு புத்தகம் என நினைத்தால் , ஹ்ம்ம். இதில் பாராட்டுகள் மிகுந்த எரிச்சலை தருகின்றன , எவன் பாராட்டுவதிலும் உண்மை இருப்பதாக தெரியவில்லை. என்னை புத்திசாலி என்று சொல்றவன எதால அடிக்க மக்களே ?


இரண்டாண்டுகளுக்கு முன்பு நட்பு வட்டாரத்தை தவிர ஒன்றுமே நான் அறிந்ததில்லை , நண்பர்கள் கூட்டம் தான் வாழ்கை. இணையம் தலை திருப்பி போட்டது. விட்டு விட்டு வாசித்ததை வைத்து வெத்து சீன் போட்ட என்னை விடாமல் உண்மையாக வாசிக்க வைத்தது . ஈழம் , பாலஸ்தீனம் , லெபனான் , இலக்கியம் , திருக்குறள் , தலித் அரசியல் , மார்க்சீயம் , திராவிட அரசியல் , நாத்திகம் , கில்மா , உலக சினிமா , வரலாறு , பயணக்கட்டுரைகள் , சிறுகதைகள் , ஜெயமோகன் , பா.ரா , எஸ்.ரா , லா.சா.ரா , சாய்நாத், சாம்ஸ்கி , அமிர்த்யா சென் , அதிஷா , லக்கிலுக் , பத்ரி , முகில் , அஜயன்பாலா , மாலன் , ஆர்க்குட் தமிழ்நாடு அரசியல் , ஆர்க்குட் தமிழ் சினிமா , ஆர்க்குட் தமிழ் சினிமா கிசு கிசு , போதாக்குறைக்கு நல்ல கட்டுரைகள் என கிறுக்கு பயல் போல வாசிக்க செய்தது. இதில் விட்டுப்போன விடயங்கள் ஏராளம்.

எல்லாம் உண்மையை சொல்லவேண்டுமானால் , ஆறே மாதங்களில்! பைத்தியம் போல் படித்தேன் , முதலில் சும்மா ஆரம்பித்தது இப்பொழுது ஒரு அட்டிக்ஷன் போல் ஆகி விட்டது. படிச்சு நான் ஒன்னும் பெரிய படிப்பாளி மயிறு என்ற சொல்ல வரவில்லை அதற்கான பதிவும் இதுவில்லை. ஒரு விதமான சுழலில் வேண்டுமென்ற சிக்கி , எழ மறுக்கிறது மனம். முன்பு போல் ஒன்றும் தெரியாமல் இருந்ததை யோசித்தால் , அப்படியே இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. ஏன் மாறினேன்? சே!


நக்கல் நய்யாண்டி அறவே குறைந்து போனது , மசாலா படங்களாக பார்த்த என்னை பெரிய அகிரோ குரோசிவா ரசிகன் ரேஞ்சுக்கு பிட்டை போடா வெச்சுட்டானுங்க. சிரித்து நாட்கள் ஆகி விட்டன. எதையும் ஒரு விதமாக ஆழமாக பார்த்து தொலைகிறேன். கூடவே பகுத்தறிவு வேறு. இது எல்லாம் நல்ல விஷயங்கள் என்றாலும் , வயதை மீறி யோசிக்கிறேன் ,வயதிற்கே உண்டான சந்தோஷங்களை இழந்து விட்டேனோ என தோன்றுகிறது. மூன்று வருடங்குளுக்கு முன் என்னை விழாவில் பேசவிடவில்லை என்று வருத்தப்பட்ட பிரகாஷ் இப்பொழுது இல்லை , ஒரு விதமான தனிமை சிறையில் வந்து விட்டது போல் ஒரு உணர்வு. எல்லாத்தையும் தத்துவ ரீதியாக பார்க்கிறேன் பேர்வழி என ஒரு பைத்தியக்கார டாஷாக அலைகிறேன். முதிர்ச்சி ஒரு சாபம் , எனக்கு இல்லை என தெரிந்தவர்கள் சொன்னாலும் , நான் இதை விட குழந்தைத்தனமாக இருந்தவன்.

படிப்பில் கட்டம் கடைசியாக ஆர்வம் வந்தது ( ஷப்பா) , ஏழாவது செமஸ்டரில் திணறிப்போனேன் . ஆர்க்குட்டில் கோபாலன் , மோகன் போன்றோர் படிக்காமல் என்ன மணி ஆட்டி கொண்டிருக்கிறாய் என கேட்டதற்கு மழுப்பியது தான் மிச்சம். கடைசியில் என்னை நம்பி மேற்படிப்பிற்கு ஒரு scholarship உம் கொடுத்து விட்டார்கள். நான்கு நாடுகள் அல்லது குறைந்தது இரண்டிலிருந்து மூன்று நாடுகள் பிரயாணம் செய்து படிக்க வேண்டும். எனக்கு பிடித்தமான படிப்பு. வெவ்வேறு சூழல் , இந்தியாவிலிருந்து நான் ஒருவன் மட்டும் தான். மத்தவர்கள் மெக்சிகோ , சீனா, துருக்கி , தாய்லாந்து , தைவான் ,இந்தோனேஷியா , ரஷியா ,ஈரான் , சிங்கப்பூர் என வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் . புண்ணியவான் பா.ராவை படித்த பலன் , மெக்சிகோ பெண்ணிடம் " Palace of Justice , M-19 , Escober , Medlin cartel , Coli cartel " என ஒரு வலம் வந்தேன் .


பதிவு எங்கேயோ போகிறது ,சொல்ல வந்த விடயம் நான் நட்பு வட்டாரங்களை தெளிவாக இழந்துவிட்டேன் , கேளிக்கைகளில் பங்கு பெற முடியவில்லை. பெரிய புடுங்கி மாதிரி யோசிக்கறேன். மனோ தத்துவ நிபுணர் என்னை பார்த்து பைத்தியம் ஆகி விடுவார் என அவர் நலன் கருதி இன்னும் நான் போகவில்லை.


என்றாவது ஒரு நாள் மீண்டும் வாரக்கணக்கில் நண்பர்களுடன் கூத்தடிக்க ஆசையாக ஏங்குகிறேன். இப்பொழுது ஒருவாரம் விடுமுறையின் போது கோவா செல்கிறோம்.

Sunday, April 12, 2009

கதை

அவளுக்கு என்னை அடையாளம் தெரியுமா ? குரல் வைத்து? ஹ்ம்ம் இல்லை , மாறி இருந்தது என் குரல் . உடலில் அந்தந்த வயதிற்கு தேவையான மாற்றங்கள் வந்திருந்தன. ஆனால் அவளை எனக்கு தெரிந்தது , மெலிதான ரோஸ் நிறத்தில் சுடிதார் அதை விட கொஞ்சம் அடர்த்தியான நிறம் கொண்ட துப்பட்டா. உடல் கொஞ்சம் பூசினால் போல் இருந்தது , பருமன் இல்லை. கல்லூரி பேருந்திற்காக நிற்கிறாளா? எந்த கல்லூரியில் படிக்கிறாள் ? .


பல முறை பள்ளயில் அவள் பின்தொடர்ந்து சைக்கிளில் போகும்போது உதிர்த்த புன்னகை நினைவுக்கு வந்தது . பிறந்த நாளில் முதல் முதலில் அவளுக்கே சிறப்பான ஒரு இனிப்பைத்தர நான் காலை எட்டு மணிக்கே பள்ளிக்கு வந்திருந்தேன் . இன்றே சொல்லிவிடலாமா ? இல்லை. வேண்டாம். மனம் அடித்து கொள்ள , அவள் அன்றைக்கென்று பார்த்து இவ்வளவு தாமதமாக வர வேண்டுமா ? நடுவில் இந்த வினோத் வேறு வந்து ஏதேதோ ஜபக்கூட்ட கதைகள் சொல்லி என் தாலி அறுத்தான்.


அடங்கப்பா பள்ளி விடுமுறை என்றால் இவனுங்க அலும்பு தாங்காது , வந்து பாய் போட்டு படுத்து பரிசுத்த ஆவியில் இட்லியை வேக வைப்பார்கள். காலையில் சுப்ரபாதம் கேட்கும்போது வரும் அதே கோபம் , இவர்களின் கூச்சலை கேட்டாலும் வரும் . விற்பனை பொருள் ஒன்று தான் , மதமென்னும் போதை பொருள் .இவன் நீல டப்பாவில் விற்கிறான், அவன் சிகப்பு டப்பாவில் .

அடச்சே!இந்நேரத்துல நமக்கு பெரியாரீயமா முக்கியம் ? வினோத்துடன் பக்கத்துக்கு தெருவில் உள்ள பரிமளாவும் வந்திருந்தாள் . அவளுக்கு என்னவாம் ? பக்கத்துல இருந்துட்டு லேட்டா வந்தா என்னடி கொறஞ்சு போவ ?

அடுத்ததாக அவள் வந்தாள் , அப்புடியே லாவகமாக கண்ணால் பேசி அவளை வெளியில் அழைத்து சென்று விடலாம் தான். முன்ன பின்ன அதுக்கு அவளிடம் பழகி இருக்க வேண்டுமே . போன பிறந்தநாளில் பார்த்தது , இது இரண்டாம் ஆண்டு. இருந்தாலும் தைரியத்துடன் அவள் வெளியில் தனியாக நிற்கும்போது கொடுத்தேன்.

சிரித்துக்கொண்டே வாங்கினாள் , சொல்லிவிடலாம் , இதை விட்டால் தருணம் இல்லை .கை விரலை பற்றலாமா , தவறில்லை பக்கத்தில் சென்றேன் , சனியன் புடிச்ச கணக்கு வந்தான். காதலே போச்சு . கடைசியில் அவள் எங்கோ நான் எங்கோ !அவ்வபொழுது நலம் விசாரிப்பேன் , நண்பர்களிடம்.

ஆஹா கதைய எங்கே விட்டேன் பேருந்து நிலையத்திலா , மீண்டு ஒருமுறை காதல் கதை எழுதும் முயற்ச்சியில் தோல்வி ! பிரகாஷா , நீ தேரமட்டடா ! எப்பொழுதும் தாளை கிழித்து விடுவேன் . இந்த விஞ்ஞான வளர்ச்சியான ப்ளாகை படிப்பவன் தான் நொந்து கொள்ள வேண்டும்

Friday, April 10, 2009

49O -பத்து பைசாக்காது பிரயோஜனமா ?

முதலில் நாம் 49 O என்றால் என்னவென்று பார்த்துவிடுவது உத்தமம். இந்த இந்திய திருநாட்டில் வோட்டு போடபோகாமல் ஊட்டில் மப்பில் மல்லாந்து கிடக்கும் குப்புசாமிகளுக்கும் , அன்று விடுமுறை என்று சும்மா வீட்டில் இருக்கும் ராகேஷ்களுக்கும் ஒரு மாபெரும் மாற்று தீர்வு என்ற பல SMSகள் குவிகின்றதா ? . அய்ய இன்னாமே நீ அல்லாரும் மாத்தி மாத்தி ஊர ஏமாதிக்கினு இருக்காங்கோ நான் மட்டும் இன்னத்துக்கு வோட்டு போடணும் ? . இந்த கேள்விகளுக்கெல்லாம் 49 O விடை அளிக்கிறது என்கிறார்கள் ஒரு சாரர். இல்லை என்கிறேன் நான். கொஞ்சம் விரிவாக பார்போம்.


அதாகப்பட்டது , தேர்தலில் 49 0 விதிமுறைகளின் படி ஒரு வாக்காளர் தான் எந்த வேட்பாளரயுமே விரும்பவில்லை என்று வாக்களிக்கலாம். ஆஹா அருமை ? அப்போ எல்லாரும் இதையே போட்டுட்டா நம்ம தொகுதிக்கே திரும்ப தேர்தல் தான் , ஏற்கனவே போட்டியிட்ட எந்த வேட்பாளரும் நிற்க முடியாது என்றெல்லாம் கிளப்பி விட்டு கொண்டிருக்கிறார்கள் . எல்லாம் பொய் , பச்சை பொய் .


1. இந்த வாக்குமுறை மிகவும் வெளிப்படையாக செய்ய வேண்டும் , அது நமது அரசியல் சாசன உரிமையான மறைமுகமாக நாம் நமது வாக்குகளை பதிவு செய்யலாம் என்பதை முற்றிலும் மறுக்கிறது .


2. இது எந்த வோட்டெடுப்பு இயந்தரங்களிலும் இல்லை பாலட் தாள்களிலும் இருக்காது . நாமாக கேட்டு போட வேண்டும். யாருக்குமே எனது வோட்டு இல்லை என்னும் பட்டன் எந்த மெஷினில் உள்ளது ? இல்லவே இல்லை. இந்த மாற்றம் எப்பொழுது வரும் ? நிதர்சனம் இல்லை .


3.எல்லாரும் சொல்வது போல் மறு தேர்தல் நடக்குமா ? கண்டிப்பாக இல்லை . எந்த கேனப்பய கெளப்பி வுட்டான் இதை ? சரி வேட்பாளர்களை கட்சி மாற்றியாக வேண்டுமா? மயிரா போச்சு , அப்படி எந்த தேவையும் இல்லை .


4. சரியா அப்போ நம்ப போட்ட வோட்டு ? செல்லாத ஒட்டு தான் ! வேண்டுமானால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு தொகுதிக்கு இந்த மாதிரி எத்தன கிறுக்கன் போட்டானு கேட்டு தெரிஞ்சுக்கலாம் .


5.யோ அப்போ ஒரே தொகுதில 99% பேர் இதை போட்டா என்னையா பண்ணுவ ? மிச்சம் இருக்கற 1% வாக்கு பெற்றவன் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கபடும் .


6. யோ அப்போ என்னதான்யா பிரயோஜனம் ? உன் வோட்டிற்கு பதில் யாரும் கள்ள வோட்டு போட முடியாது. அதை தடுக்கதான தேர்தல் ஆணையம் , காவல் துறை எல்லாம் ? அதை எல்லாம் நாம கேக்கக்கூடாது .



ஆனால் வோட்டு போடுவது ஜனநாயக கடமை. அதை உபயோகபடுத்தி கொள்வது நமது திறமை. ஆனால் உண்மையில் மாற்றம் வரவேண்டும் என்று ஞானி போன்றோர் எண்ணுவதற்கு தோள் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இந்த தேர்தலில் ? பயனில்லை !

Saturday, March 28, 2009

பட்டாளம் - படமாடா எடுத்திருக்க ?


திங்கட்கிழமை தீசிஸ் கொடுத்தாக வேண்டும் , தேவையாடா உனக்கு என்று உள்மனது கேள்வி கேட்டாலும் , ஐந்து மணி வரை மின்சாரம் வராது என்று ஆற்காட்டாரின் அறிவிப்பை ஒட்டியும் , நாம் எல்லாம் பிரியப்போகிறோம் என்ற ஆனந்தின் ( சனியன் புடிச்சவனே ! ) செண்டிக்காகவும் ராம்விலாஸ் போனேன் , இந்த எழவை பார்க்க .




பச்சை பச்சையாக கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும் என்று கை துடிக்கிறது , ஆனால் எனது வலைப்பூவை நண்பர்களுக்கு அலுவலகத்திலும் தான் படித்த கல்லூரியிலும் சில நண்பர்கள் பரிந்துரை செய்திருக்கும் ஒரே காரணத்தால் விடுகிறேன் .



ஆரம்ப காட்சியின் போதே எனக்கு விளங்கி விட்டது . கனா காணும் காலங்களின் 'ஜோ' இல்லாத காமடிக்கு சிரித்து நமக்கு முதல் நிமிடத்திலேயே வெயிலில் வெந்நீர் குடிக்க வைக்கிறார். இதே போல் ஒரு எட்டு வருங்கால ரித்தீஷ்களும் , சாம் அன்டேர்சன்களும் அறிமுக படுத்தபடுகிறார்கள்.



கதையா? ஒரு மயிரும் இல்லை! பள்ளிகூடத்தில் இரண்டு க்ரூப் , ரெண்டு பேரும் கனா காணும் காலங்களில் வருவதை விட அதிகமாக மொக்கை போடுகிறார்கள் . நதியா வந்து நீதி பேசுகிறார் , தவறு செய்யும் மாணவர்களை அன்பாக கண்டிக்கிறார் . அடிக்கும் வாத்தியாரிடம் வசனம் பேசுகிறார் என ஒரு படுமொக்கயாக ஒன்றோடு ஒன்று தொடர்பே இல்லாத காட்சிகளில் முதல் பாதி நகர்கிறது .



பாட்டு வேற எதுக்கு எடுத்தாலும் , என்ன மண்ணாங்கட்டிக்கு வருகிறது என்பது அந்த இயக்குனர் புண்ணியவானுக்கு தான் வெளிச்சம் . படத்தை கேவலம் கேவலமாக ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள் முதல் பாதியிலேயே! அதை விமர்சனம் செய்யாத ஒரே ஜீவன் எனது அன்பு ஜுனியர் தினேஷ் தான் , பின் வரிசை காலியாக இருந்ததால் படுத்தே தூங்கி விட்டான் . ( அவனும் ஆனந்தை அசிங்கமாக திட்டினான் என்பது வேற விடயம் )
நடுவில் எங்கோ சுற்றுலா செல்கிறார்கள் , அந்த இடத்தில் க கா கா வினித் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார் , அப்பொழுது தான் காட்சியோடு நான் ஒன்றினேன் . அவன் செய்து கொள்கிறானோ இல்லையோ என்னை கொலை செய்தது போல் இருந்தது .அடங்கப்பா கூட ரெண்டு சுத்துதே , ஏண்டா வசனம் கூடவா ஒழுங்கா பேச மாட்டீங்க ? !



நடுவில் ராகவி கதாபாத்தரத்தில் சோபி என்று ஒரு அரை லூசு வருகிறது ! எச்சை ச்சீ பச்சை போல் இப்படத்தில் ஒரு சக்கரை. வினித் அந்த பெண்ணை டாவு தான் அடிக்கிறான் என்று புழங்க , அவன் அவளை தமக்கையாக எண்ணுகிறான். இதுக்கு நடுவில் ஒற்றுமையை பற்றி இயக்குனர் நதியா வாயிலாக நமக்கு நடுத்தும் பாடத்தில் புல் மட்டும் இல்லை குவார்டர் வரை அரிக்கிறது . ஜாசீ வேறு வயலினை உச்ச ஸ்தானத்திற்கு கொண்டு சென்று நம் காதை பதம் பார்க்கிறார்.



கடைசியில் எதோ ஒரு பாட்ட போடுறானுங்க , வினித் தலையில் பெரிய மணி ஒன்று விழ வேண்டும் என இந்த சக்கரை கயிறை அறுக்கிறார். பின்பு உண்மை தெரிய வந்து அழுகிறார் , மாறாக ஜோ தலையில் விழ சோகம் நம்மை அப்பி எல்லாம் கொள்ளவில்லை. டேய் முடிஞ்சது வா ஓடிடலாம் என தான் தோன்றுகிறது. இதுல கடைசியில் சேது ரேஞ்சுக்கு பில்ட் அப்பு வேற.



உலக சினிமா வரலாற்றில் இப்படி ஒரு மொக்கை படத்தை எடுக்க இன்னொருவன் பிறந்து தான் வர வேண்டும்




Wednesday, March 4, 2009

Possessiveness = புலவி நுணுக்கம்

எனக்கு சின்ன வயதில் வரும் திருக்குறள் பாடம் மிகவும் சிரமான ஒன்று , மனப்பாடம் செய்வது என்பது இன்றளவும் எனக்கு ஆகாத காரியம். ஆதலால் , அவ்வளவு ஆர்வம் இல்லை.

ஆனால் , பொன்னீலன் அண்ணாச்சி ( சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் , எங்கள் குடும்ப நண்பர் ) காரைக்குடி வந்த பொழுது அவருக்கு மிகவும் புடித்த இலக்கியம் திருக்குறள் என்றார். தினம் ஒரு திருக்குறள் படித்து தான் பாரேன் என்றார் , கொஞ்சம் ஆர்வம் தூண்டிய நிலையில் தமிழ் வேட்பனின் எளிய தெளிவுரயோடு ஒரு சின்ன புத்தகம் வாங்கினேன் . எடுத்தவுடன் அருளுடைமை , தவம் , துறவு , ஹ்ம்ம் வேலைக்கு ஆகாது என்று மூடிவிட்டேன். கொஞ்சம் நாள் கழித்து தான் , காமத்துப்பாலில் ஆர்வம் திரும்பியது. ஆகா வள்ளுவன் பின்றார்யா என்று தோன்றியது அன்றிலிருந்து தான். காமத்திலும் காதலிலும் இவரை அடித்து கொள்ள , உலக எழுத்தாளர்கலில் எவரும் உண்டோ ? உலக எழுத்த நான் என்ன கரைத்தா குடிச்சிருக்கேன்? , இல்லை தான் , ஆனால் " உலக இலக்கியங்களில் வள்ளுவம் " என ஜீவா பேசியதை பற்றி அண்ணாச்சி மிகவும் சிலாகித்து பேசுவார் .


விஷயத்துக்கு வருவோம் , இந்த பெண்கள் வட்டத்தில் ( நான் ரொம்ப உள்ள எல்லாம் போனதில்லைங்க )Possessiveness என்ற ஒரு சொல்லாடல் உண்டு . இதை கேட்டவுடன் அர்த்தம் சற்றே விளங்காமல் oxford ஐ புரட்டும்போது மண்டையில் தட்டினான் நண்பன் ஒருவன் , அகராதியில் அர்த்தம் கண்டுகொள்ள முடியாது என திடமாக கூறினான், அனுபவசாலி வேறு. சரி என்று அமைதியாக விட்டு விட்டேன் . காமத்துப்பாலில் , புலவி நுணுக்கம் படிக்கும் பொழுது தான் ஆச்சரியம் அப்பி கொண்டது . அட , இது தானா அது என்று ? நாஞ்சில் நாடனும் என்னுடைய favorite குறளை மேற்க்கோள் காட்டிய பொழுது , மேலும் ஆச்சரியம்.முடிந்தவரை எனது உரையை கொடுக்கிறேன் எனக்கு பிடித்த இந்த அதிகாரத்திற்கு .


குறள்: பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு.

எனது புரிதல் :பரந்த மார்பை உடையவனே , பெண்ணாக பட்டவர் எல்லாருமே உனது மார்பை பொதுவென எண்ணி கண்ணாலேயே உண்பர் , ஆகையால் நான் உன் பரந்த மார்பை தழுவ மாட்டேன் .

குறள்:ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து.

எனது புரிதல் : காதலரோடு ஊடியிருக்கும் பொழுது தும்மினேன் , நீடுடி வாழ்க என்று சொல்லி ஊடலை மறப்பார் என்ற நப்பாசையில்.

குறள்:கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று.

எனது புரிதல் : வளையமாக பூவை நான் உடம்பில் சூடினாலும் , இதை அடுத்த பெண்ணிடம் காட்டி பிராக்கட் போட முயற்சிக்கிறாய் என்று கோபப்படுவாள்

குறள்:யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று.

எனது புரிதல்: எனக்கு மிக மிக பிடித்த குறள். விளக்கம் என்னவென்றால் , யாரை விடவும் நாம் தான் காதல் மிக்கவர் என காதலன் கூறினானாம். அந்த "யாரை விடவும்" என்பதில் யாரை குறிப்பில் உணர்த்துகிறாய் என காதலி ஊடினாள் .

குறள்: இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்.

எனது புரிதல்:நாம் இந்த பிறவியில் பிரியமாட்டோம் என்றேன் , அப்போ அடுத்த பிறவியில் ? என்று கேட்டு கண்ணீர் விட்டாள்

குறள்: உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்.

எனது புரிதல்:உன்னை நினைத்தேன் என்றானாம் காதலன். மறந்ததால் தானே நினைத்தீர் என்று கோபப்பட்டு தழுவ வந்தவள் தழுவாமலே போனாளாம் .
P.S : எத்தன சினிமா பாட்டு/ வசனம் இதுலேந்து காப்பி அடிச்சிருக்காங்க , கணக்கே இல்லை


குறள்:வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று.

எனது புரிதல்: நான் தும்மினேன் , நெடுநாள் வாழ்க என வாழ்த்தினாள் ! அப்பறமா ,யாரோ நினைத்ததால் தான் தும்மல் வருகிறது என கோபப்பட்டாள்

குறள்: தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று.

எனது புரிதல்:வந்த தும்மலை கூட அவளுக்கு அஞ்சி அடக்கினேன் , அதையும் இனம் கண்டு உம்மவள் நினைத்ததை மறைக்க பார்கிறீர் என அழுதாள் .

குறள்: தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று.

எனது புரிதல்:ஊடலில் இருப்பவளை கஷ்டப்பட்டு சிரிக்க வைத்தேன் , இப்படித்தானே பிற பெண்களையும் சிரிக்க வைப்பீர் என மீண்டும் ஊடினாள்.

குறள் : நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று.

எனது புரிதல்: அவள் அழகை வியந்து நோக்கினேன் , யாரோடு ஒப்பீடு செய்து பார்க்கிறீர்கள் என சினம் கொண்டாள் !

Sunday, February 8, 2009

வெண்ணிலா கபடி குழு

போன வெள்ளிகிழமை நானும் ஆனந்தும் கிளம்பினோம் இந்த படத்துக்கு , அதற்குள் இந்த சோம்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசரமாக ஏதோ மென்பொருள் தரவிறக்கம் செய்து தர சொல்லியதால் போக இயலவில்லை . இந்த ஒரு வாரம் படு வெட்டியாக போனது , என்னுடன் என் ஆர்குட் தோழன் திருவாளர் " All time vetti" நாகபூஷன் அவ்வபோது புது படங்களை பற்றி அதி உன்னத ஆங்கிலத்தில் கதைத்து கொண்டிருப்பான் . மத்தபடி அவனைவிட நான் படு வெட்டி. :D


ஞாயிறு மாலை முழித்தவுடன் ( மதியம் தூக்கம் தான் ) நம்ம பேரானந்துக்கு ஒரு காலை போட்டேன் . வண்டி நேராக சுண்டல்கடை நின்றபிறகு சிவத்தில் போய் நின்றது. முதலில் சுமாரான கூட்டம் பின்பு மிக நல்ல கூட்டம் வர படம் தொடங்கியது .


இந்த படத்தின் பெயர் தட்டே மிக வித்யாசமானது , முதல் முறையாக Dog trainer , Focus mover , Light men , என திரைக்கு பின்னால் இருந்த அத்தனை உழைப்பிற்கும் மரியாதை கொடுத்திருக்கிறார்கள் .


கதைக்களம் அவ்வளவு விசாலமானது அல்ல . ஆனால் முதலிலேயே சில வலிகள் பதிவு செய்ய பட்டுவிடுகின்றன. தந்தையை இழந்துவிட்டு பண்ணை வேலை செய்யும் மகன் , கபடி ஆடபோகும் அவனை தண்டிக்கும் பண்ணையார் என கிளியின் சிறகை அறுத்து எரியும் காட்சிகளில் ஆழமாக வலிகள் பதிவு செய்யபட்டிருக்கலாம் . ஆனால் அதன்பிறகு வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு . காமெரா கண்கள் கிராமத்தின் எந்த அழகையும் விடவில்லை . காதல் காட்சிகளில் எந்த அழுத்தமும் இல்லை என்றாலும் , சில குட்டி ஹைக்கூ போன்ற காட்சிகளால் படத்தை நகர்த்தி செல்கிறார் இயக்குனர். படத்தின் மாபெரும் பலம் இசை/பின்னணி இசை . ஒரு காட்சியில் கதாநாயகன் நாயகியை துரத்தி செல்கிறார் , அவ்வளவு எழில் கொஞ்சும் பின்னணி இசை , அது இல்லாவிடில் காட்சி அம்பேல் தான் . லேசா பறக்கிறது பாடல் அருமையான மெலடி , கண்கள் இரண்டால் போல் கமர்ஷியலாக்காமல் இருக்க வேண்டுமே .

கபடி குழுவில் ஒவ்வொருவர் கதாபாத்திரமும் " Well defined " ஆக உள்ளது . புது மாபிள்ளை , டி கடை கதாபாத்திரம் என ஒவ்வொன்றும் தனி ராகம் . ஆரம்பத்தில் இருந்து தோற்கும் ஒரு அணியை கிஷோரின் வருகை மாற்றுகிறது . உள்ளூர் கபடி அணியில் வாய் சண்டை , காதலி பிரிதல் என மிக மெதுவாக போகும் படம் இடைவேளைக்கு பிறகு படு ஸ்பீட் .


ஆமாம் , அந்த இடைவேளையின் பின் வரும் ரெண்டு அழகான பாடல்களும் இடை செருகல்கள் போல அமைந்து விட்டதை ஏன் இயக்குனர் கவனிக்கவில்லை ? . பிறகு படத்தில் வரும் நகைச்சுவை தான் படத்திற்கு பலம் , பரோட்டா காட்சி பிரமாதம் . கிஷோரின் திருநெல்வேலி தமிழ் படத்தில் பெரிய தலைவலி உச்சரிப்பு வருவேனா என்கிறது அவருக்கு ! இரண்டாம் பாதியில் கதாநாயகிக்கு பதில் இன்னொரு நாயகியே வந்துவிட்டது போல் உள்ளது. ஜாதி அரசியலை விளையாட்டில் கொண்டு வருவதை பார்த்து சீறுவதும் , ஒன்னும் இல்லாதவர்களை கொண்டு வருவதில் பெருமளவு முனைப்பு காட்டுவதும் என கிஷோர் நடிப்பில் எந்த அளவிலும் குறை வைக்கவில்லை கடைசியில் சோகமா முடிக்கனும்னே பன்னுவானுகளோ ? .
மொத்தத்தில் அசல் கிராமத்தை பார்த்து , புதிய அப்பழுக்கற்ற காற்றை சுவாசித்த உணர்வு . ஏன் என்றால் படத்தை முடித்து ஆனந்த் செலவில் சரஸ்வதி மெஸ்ஸில் உக்காரும் பொழுது "குத்து" படம் பார்த்தேன் .நிம்மதி பெரு மூச்சு நமக்கு வேண்டியது " வெண்ணிலா கபடி குழுக்கள் தான் "

Wednesday, February 4, 2009

Dalits and the 'touch' politics.

Links :
Atrocties meted out on dalits : A collection by myslelf.

Missing dalit and an indifferent CM in haryana : http://www.hinduonnet.com/fline/fl2101/stories/20040116002703700.htm

Khairlanji Massacre...http://flonnet.com/stories/20061201004713000.htm


In North India, some of the worst crimes against Dalits are still being committed by upper caste Brahmins. http://wcar.alrc.net/mainfile2.php/Urgent+Appeals/49/

Official statistics on increasing atrocities : http://www.nacdor.org/TEXT%20FILES/Atrocities.htm

Labour MPs move against 'atrocities' on Dalits : http://www.hinduonnet.com/thehindu/2003/06/08/stories/2003060804800800.htm


‘Atrocities on Dalits continuing’ -In a statement on the eve of World Human Rights Day, Mr. Srinivas said in the last five years, 205 Dalits were murdered, 537 Dalit women were molested and Dalits were attacked in 2,369 incidents.http://www.thehindu.com/2008/12/10/stories/2008121053640300.htm

Anatomy of Atrocities on Dalits in Haryanaby Ranbir Singh, 3 September 2008http://www.mainstreamweekly.net/article899.html

Sunday, January 25, 2009

சிங்களத் சித்ரவதைகள் கொலைகார 'வெள்ளை வேன்'!

பல நாட்கள் தூக்கம் சிரமமாகிப்போனது . மனதளவில் இந்த துயரம் வெகுவாகவே என்னை பாதித்து விட்டது . சொல்லில் அடங்கா வேதனைகள் , நாஞ்சில் நாடன் சொல்வது போல் இந்த காலகட்டங்களில் ஈழத்தமிழனை போல் சித்தரவதைகள் அனுபவித்தவர் யாருமே இல்லை . லசந்தா போன்றவர்களை போற்றி பாராட்ட மனம் எத்தினிக்கும் பொழுது , அவரும் பேரினவாதத்தர்க்கு பலியானார் என்ற உண்மை தீயாக சுடுகிறது . ஓட்டரசியல் என்னும் சாக்கடையில் மாந்தநேயம் என்னும் சொல்லே அர்த்தமற்ற ஒன்றாக ஆகிப்போனது . ஆனந்த விகடனில் இந்த குறிப்பிட்ட கட்டுரை என்னை உலுக்கியது போல் என் வாழ்க்கையில் வேறேதும் என்னை உலுக்கியது இல்லை . சொற்கள் என்றும் என் எண்ணங்களை செரிவர வெளிகொனர்ந்தது இல்லை. இதற்க்கு மேலும் ரத்தம் கசியத்தான் வேண்டுமா ஈழத்தில் ? இன்னும் இரண்டு சாராரையும் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் பச்சை துரோகம் செய்துகொண்டிருக்கும் "தமிழ் இனத்தலைவர்களை " வரலாறு காரி உமிழும் இதோ அந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு

'கிழக்கில் உதயத்தை அனுபவிக்கிறார்கள் தமிழர்கள். வடக்கில் வசந்தத்தைக் காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்!' - இது இலங்கையின் மாட்சிமை தங்கிய அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, ஈழத் தமிழ் மக்களுக்குச் சொல்லும் வரவேற்பு வார்த்தைகள்!அத்தனையும் வெறும் வார்த்தை ஜாலங்கள் என்பதைக் கடந்த வாரம் கொழும்பு வீதிகளில் ஒலித்த மரண ஓலங்கள் நமக்குச் சொல்கின்றன.'என்னுடைய கணவனை ஒப்படை!', 'என் தந்தை எங்கே?' என்ற தட்டிகளுடன் பெண்களும் குழந்தைகளுமாக நின்று கூக்குரல் எழுப்பினார்கள் இலங்கைத் தமிழர்கள்.இலங்கைச் சிறைகளில் நடக்கும் சித்ரவதைகள் உலகக் கொடுமைகளின் உச்சம். வெட்டுக் கத்தியால் கண்களைத் துளைத்தெடுத்து காலில் போட்டு மிதித்து சந்தோஷப்படும் கொடூரம், குட்டிமணி காலத்தில் தொடங்கியது. அடுத்து நகக்கண்ணில் ஊசியை நுழைப்பது, நகத்தையே பிடுங்குவது, தூங்கவிடாமல் அடித்துத் துவைப்பது, பனிக்கட்டியில் படுக்கவைப்பது, தலைகீழாகக் கட்டிவைத்து கீழே தீயைக் கொளுத்துவது, முள் படுக்கையில் உருட்டுவது எனத் தொடர்ந்தது. பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் வார்த்தைகளின் எல்லைகளுக்குள் வராதவை. உடலையும் மனதையும் ஒருசேர நசிக்கும் சித்ரவதைகளை ஈழத்துப் பெண் எத்தனையோ ஆண்டுகளாக அனுபவித்து வருகிறாள். இலங்கையின் எல்லையைத் தனியாகப் பிரித்துத் தமிழீழம் ஆக்கப் போராடும் புலிகளையோ அவர்களுக்கு அடைக்கலம் தரும் ஆதரவாளர்களையோ கைது செய்ய, அவர்களிடம் இருந்து சில தகவலைப் பெற ராணுவம் முயற்சிப்பது பற்றிச் சமாதானம் சொல்லப்படலாம். மாறாக அப்பாவிகளை, அவர்கள் தமிழினத்தில் பிறந்து தொலைத்த ஒரே ஒரு பாவத்துக்காகப் பழிதீர்க்கக் கடத்திச் சென்று சித்ரவதை செய்வதும், அந்தக் குரூர நிமிடங்கள் முடிந்ததும் உயிரோடு கொளுத்திவிடுவதுமான அட்டூழியங்கள் இன்று அதிகமாகி வருகிறதாம். தமிழ் ஆட்களைக் கடத்திச் சென்று காலி செய்வதற்கென்றே கொழும்பில் தனி அணி இருப்பதாக மனித உரிமை அமைப்பினர் சொல்கிறார்கள். இந்த டீம் வரும் வாகனம் 'வெள்ளை வேன்'. ஊருக்குள் வெள்ளை வேன் வந்தாலே, யாரையோ கடத்தப் போகிறார்கள் என்று தமிழர்கள் பதற்றமடைகிறார்கள்; ஓடி ஒளிகிறார்கள். வேனில் சுற்றிலும் கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும். நம்பர் பிளேட் இருக்காது. இதுதான் அந்த எமன் வாகனத்தின் அடையாளம். அதில் இருப்பவர்கள் ராணுவ, போலீஸ் உடைகளில் இருக்க மாட்டார்கள். சாதாரண உடுப் பில், ராணுவ மிடுக்குடன் இருப்பார்கள். 10 பேர் சேர்ந்து ஒருவரை நெட்டி முறுக்கி வேனுக்குள் ஏற்றும்போது, தட்டிக்கேட்க ரோட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். 'வெள்ளை வேன்ல வந்தவங்க எங்க அப்பாவைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க' என்ற புகார் காவல் நிலையங்களில் செல்லாது. தட்டிக்கேட்க யாரும் இல்லாததால், வெள்ளை வேன் கொடூரங்களுக்குத் தடையே இல்லை!இப்படிக் கடத்திச் செல்லப்படுபவர்கள் மீது மேற் கொள்ளப்படும் விசாரணை சித்ரவதைகளின் கதையைக் கேட்டால், ரத்தம் சுண்டி இழுக்கும். அடிக்காமல், உதைக்காமல், அணுஅணுவாகக் கொன்று தீர்க்கிறார்கள். தன் நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட சித்ரவதைகள் பற்றி இலங்கைத் தமிழர் ஒருவர் பகிர்ந்துகொண்ட செய்திகள், 'கற்கால காட்டுமிராண்டித்தனம் இன்னமும் இலங்கையில் மட்டும்தான் கொடூரப் பரிணாமம் பெற்றிருக்கிறது' என்று சொல்லவைக்கிறது.''30 வயது சத்யன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நல்ல வேலையில் இருந்தார். ஒருநாள் அவர் வீட்டுக்கு போலீஸ் அதிகாரிகள் வந்தாங்க. தன் அடையாள அட்டையைக் காண்பித்தார் இவர். 'வழக்கமான சோதனைதான்' என்று சொல்லிவிட்டுச் சென்றது போலீஸ். அடுத்த வாரமே மீண்டும் வந்தார்கள், 'அதிகாரிகள் காத்திருக்காங்க!'ன்னு கூப்பிட்டாங்க. 'போன வாரமே விசாரணை முடிந்துவிட்டதே' என்று சத்யன் சமாளிக்கப் பார்க்க, ராணுவ உடுப்பில் இருந்த ரெண்டு பேர் உள்ளே வந்தாங்க. 'என்னமோ நடக்கப் போகுது' என்று சத்யனுக்குப் புரிஞ்சிருக்கு. உடை மாற்றிக்கொள்ளக்கூட விடாம, லுங்கி, டி-ஷர்ட்டுடன் அழைத்துப்போனாங்க. அப்போ மணி ராத்திரி 9 இருக்கும். வெளியே வந்த சத்யன் முன் பளீரெனக் காத்திருந்தது வெள்ளை வேன்! கண்ணைக் கட்டியபடி 3 மணி நேரப் பயணம். ஒரு கட்டடத்தின் முன் வேன் நிற்க, சத்யனை உள்ளே இழுத்துட்டுப் போனாங்க. அவரை நிர்வாணமாக்கி ஒரு கல்லின் மேல் உட்காரவெச்சு, அவர் கைகளைப் பின்னாடி கட்டிட்டு விசாரணை ஆரம்பிச்சது. 'சொல்லு, உனக்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம்?'னு முதல் கேள்வி. 'நான் கொழும்புல வேலை பார்த்துப் பிழைக்கிறவன். எனக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லை'ன்னு சத்யன் பதில் சொல்ல, அந்தக் கல்லோடு சேர்த்து அவரது ஆண் குறியின் முனையை பூட்ஸ் காலால் நசுக்கினாங்க. ரெண்டு கைகளும் பின்னால் கட்டப்பட்டு இருந்ததால், அவரால எதுவும் செய்ய முடியலை. தனக்கு எதுவும் தெரியாதுன்னு கதறிட்டே இருந்திருக்கார்.'இப்ப உனக்கு ஒரு செகண்ட் கரன்ட் ஷாக் கொடுப்போம். ரெண்டு செகண்ட் கொடுத்தா நீ செத் துடுவ'ன்னு சொல்லிட்டு, மின்சார வயரை சத்யனின் ஆண் குறியில் வெச்சிருக்காங்க. மிருதுவான அந்தப் பகுதி வழியா ஹைவோல்டேஜ் மின்சாரம் உடம்பில் ஊடுருவும் ஒவ்வொரு நொடியும் மின்சார நரகம். கரன்ட் பாய்ஞ்சு உடம்பு மொத்தமும் துடிக்கும்போது, ஒரு ரப்பர் பையை அவரது முகத்தைச் சுற்றிக் கட்டிஇருக்காங்க. அந்தப் பை முழுக்க பெட்ரோல். வலியால் வாயைத் திறந்து ஒருவன் கத்தும்போது, பெட்ரோல் வாசம் பிடிச்சா எப்படி இருக்கும்? அந்தச் சமயம் பெட்ரோல் வயித்துக்குள்ளே போவதையும் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. மொத்த பெட்ரோலும் உள்ளே போயிருச்சு. அடுத்த ஒரு மணி நேரம் அவங்களுக்கு ரெஸ்ட். இவர் வேதனையில் துடிச்சிட்டு இருப்பாரு. ரெஸ்ட் முடிஞ்சு வர்றாங்க. 'சொல்லு, கொழும்புல எங்கெல்லாம் குண்டு வெச்சிருக்கீங்க?' - இது ரெண்டாவது கேள்வி. 'எனக்குத் தெரியாது'ன்னு இவர் சொல்லவும், கால்ல கயித்தைக் கட்டி தலைகீழாத் தொங்கவிட்டிருக்காங்க. லிட்டர் லிட்டரா பெட்ரோல் குடிச்சவரைத் தலைகீழாக் கட்டித் தொங்கவிட்டா எப்படி இருக்கும்? கொஞ்சம் கொஞ்சமா வாய், மூக்கு வழியா பெட்ரோல் ஒழுகுது. இப்படியே கொஞ்ச நேரம் போயிருக்கு. அப்புறம் அவரைக் கீழே இறக்கி கை ரெண்டையும் பின்னாடி வெச்சு, ரெண்டு பெருவிரலை மட்டும் சேர்த்து கயித்துல முடிச்சுப் போட்டு மேலே தூக்கியிருக்காங்க. பின்பக்கம் கையை வளைச்சாலே வேதனை தாங்க முடியாது. ரெண்டு பெருவிரல் பலத்துல மொத்த உடம்பும் அந்தரத்துல தொங்கிட்டு இருந்தா, எப்படி இருக்கும்? உடல் கனம் தாங்க முடியாம ரெண்டு பெருவிரலும் ஒடிஞ்ச பிறகுதான், அவரைக் கீழே இறக்கியிருக்காங்க. அதுக்கு மேலயும் கஷ்டத்தைத் தாங்குற சக்தி அவர் உடம்புல இல்லை. உயிர் எங்கோ ஒளிஞ்சுட்டு இருக்குற பிணமாக் கெடந்தார்.திரும்ப வந்தவங்க ரெண்டு கையையும் கட்டி மறுபடியும் தூக்குறாங்க. அடுத்து என்ன பண்ணுவாங்கன்னு யோசிக்கிற மனநிலையில்கூட அவர் இல்லை. அவரோட ஆசன வாயில் பி.வி.சி. பைப்பைத் திணிச்சிருக்காங்க. வேதனையில அலறியிருக்கார். அடுத்து இரும்பு வேலிக் கம்பியைக் கையில் எடுத்திருக்காங்க. (இதற்கு மேலான விவரங்கள் மனவலிமை கொண்டவர்களையும் நொறுங்கச் செய்யும் என்பதால், அவற்றைத் தவிர்க்கிறோம்!) இப்படி ரெண்டு ராத்திரிகளைச் சோறு தண்ணி இல்லாமக் கழிச்சிருக்கார். படுக்கவும் முடியாது உட்காரவும் முடியாது. குப்புறப் படுத்தா கரன்ட் ஷாக் கஷ்டம், நிமிர்ந்து படுத்தா வேலிக்கம்பி வேதனை. என்ன பண்ண முடியும்? ரெண்டாவது ராத்திரி அவருக்கு லேசாத் தூக்கம் வர்ற மாதிரி இருந்திருக்கு. அப்ப ஜில்லுனு ஐஸ் தண்ணியை ஊத்தியிருக்காங்க. தூக்கம் தொலைஞ்சு வேதனை வெடிச்சிருக்கு. எழுப்பி 'ஒரு நாள் ரெஸ்ட் எடு'ன்னு சொல்லி ஒரு இடத்துல வெச்சுப் பூட்டியிருக்காங்க. சவப்பெட்டி அளவுக்கான செல் அது. ஒரு ஆள் உள்ளே படுத்துக்கலாம். அசைய முடியாது, புரண்டு படுக்க முடியாது. இந்த மாதிரியான செமிட்டிக் செல் அங்கே நிறைய இருக்காம். படுத்திருக்கும் தளத்தில் கூர்மையான கல்லும் கண்ணாடித் துகள்களும் கொட்டிக்கிடக்குமாம். இந்தச் சித்ரவதையைத் தாங்கி உயிர் மிஞ்சுமா என்ன? வெள்ளை வேன்ல ஏறாததால நான் உங்க முன்னாடி பிழைச்சுக் கெடக்கேன்!'' என்று வேதனையும் விரக்தியுமாக வெதும்பினார் அவர்.இன்னமும் வார்த்தைகளில் வடிக்க முடியாத சித்ரவதைகள், ஹிட்லரின் நாஜி கேம்ப் கொடுமைகளைவிடக் கொடூரமானவை. வெள்ளை வேன் பயணம் மின்சார அடுப்பில் முடிவதாக மனித உரிமை அமைப்பினர் பயமுறுத்துகிறார்கள். இதில் பெண்கள் என்றால், பாலியல்ரீதியான சித்ரவதைகளுக்கும் அதிக முனைப்பு காட்டப்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 'கொழும்பில் புலிகளின் மனித வெடிகுண்டுகள் நடமாடுகின்றன, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் புலிகள் இன்னும் 'கெரில்லா' தாக்குதலை நடத்தி வருகிறார்கள்' என்பதுதான் தமிழ் இளைஞர்கள் மீதான இந்த விசாரணைகளுக்கான காரணங்கள்.காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க கடந்த ஆண்டு ஜனாதிபதியின் ஆணையக் குழு உறுப்பினர் ராஜித் சேனாரட்சணா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இது போன்ற சித்ரவதைகள் நடைபெறுவதாகச் சொல்லப்படும் பூசா முகாமுக்கு ராஜித் சென்றார். அங்கு தமயந்தி என்ற பெண் தனது 6 மாதக் குழந்தையுடன் இருந்தார். 'என் வீட்டுல துப்பாக்கி இருந்ததாச் சொல்லி இங்கே அடைச்சிருக்காங்க. நான் துப்பாக்கியைப் பார்த்ததே இல்லை' என்றார். இரண்டு செல்போன் வைத்திருந்தார், அடையாள அட்டையில் கிளிநொச்சி என்று இருந்தது போன்றவை அவர் கைதுக்கான காரணங்கள். இதனால் எல்லாம்தான் உலகில் இராக்குக்கு அடுத்தபடியாக மனித உரிமைகளை மீறும் இரண்டாவது நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டு உள்ளதுஇது போன்ற தகவல்களைத் திரட்டி வருகிறார் பி.யூ.சி.எல். அமைப்பின் தலைவர் வி.சுரேஷ். ''மனித உரிமை பிரச்னை தொடர்பாக உலகில் அதிக அதிகாரம்கொண்ட அமைப்பு ஐ.நா-வின் மனித உரிமை கமிட்டி. இதன் தலைவரான லூயி ஆர்பர், கனடா நாட்டின் சுப்ரீம் கோர்ட் நீதிபதி. அவர் இலங்கை வந்தபோது, பல இடங்களைப் பார்க்க அந்த நாடு அவரை அனுமதிக்கவில்லை. 'மனித உரிமை மீறல்கள் இங்கு நிறுவனமயமாகிவிட்டன' என்று அவர் அறிவிக்கவும், அவரையே பயங்கரவாதி என்று இலங்கை சொல்லிவிட்டது.ஐ.நா-வின் மனித உரிமைப் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் இலங்கை போட்டியிட்டது. 'இலங்கைக்கு வாக்களிக்கக் கூடாது' என்று, அங்கிருந்தே செயல்படும் 8 மனித உரிமை அமைப்புகள் அனைத்து நாடுகளுக்கும் கடிதம் அனுப்பின. நோபல் பரிசு பெற்ற டெஸ்பான்ட் டுட்டு (தென் ஆப்பிரிக்கா), ஜிம்மி கார்க் (அமெரிக்கா), அடால்போ (அர்ஜென்டினா) ஆகிய மூவரும் அதே காரணம் சொல்லிக் கடிதங்கள் அனுப்பினார்கள். ஆனால், இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வாக்கு அளித்தது. ஆனாலும், இலங்கை தேர்தலில் தோற்றது. இலங்கை அரசாங்கத்தின் இன அழிப்பு, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், சிங்களமயமாக்கல், அடையாளங்களை அழிப்பது போன்றவற்றுக்கான ஆதாரங்களைத் திரட்டி, உலகளாவிய பிரசார இயக்கத்தைத் தொடங்க எங்கள் அமைப்பு முடிவெடுத்துள்ளது. இவை அனைத்தையும் ஐ.நா. அமைக்கும் கமிட்டி விசாரணை நடத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும்!'' என்கிறார் சுரேஷ்.'பேயாட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்' என்பதற்கு நிகழ்கால உதாரணமாகத் திகழ்வதில், புத்தர் வாழ்ந்த பூமிக்கு என்ன பெருமையோ?

நன்றி : ஆனந்த விகடன் (21.01.2009)