இவரை பற்றி எங்கயாது போய் தெரிந்துகொள்ளுங்கள். எனக்கு ஒன்றுமே தெரியாது , இவரின் கவிதையும் இவரையும் தவிர! எனக்கு பிடித்த பத்து இதோ
சும்மாவுக்காக ஒரு கவிதை
உங்கள் நண்பரை சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களை சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும் போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்
சில எதிர்கால நிஜங்கள்
அரிசி மூட்டையிலிருந்து சிதறிய
அரிசி மணிகள் போல்
தப்பி தவறி திசை தடுமாறி ஓடி வந்த
சின்னஞ்சிறு சிற்றெறும்பு போல்
மொசைக் தரையில் தவறிப்போன
ஒற்றை குண்டூசி போல்
இவற்றைப் போல் இன்னும்
ஆயிரக்கணக்கான போல்கள்
பழக்கம்
எனக்கு கிடைத்த சதுரத்தில்
நடை பழகிக்கொண்டிருக்கிறேன்
கால்கள் வலுவேறின
நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று
என் நடப்பைத்
தெரிந்துகொண்ட சில மாக்கள்
விளம்பினர்
ரோட்டிலேயே நடக்க முடியவில்லை
ஒரு சதுரத்திற்குள் நடக்கிறானாம்
நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா
என் கால்கள்
என் நடை
என் சதுரம்
ஐயோ
சொன்னால் மறுக்கிறார்கள்
எழுதினால் நிராகிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்
சுற்றி
அரச மரத்தை சுற்றி
பிறந்த பிள்ளை ஒருவன்
வேப்ப மரத்தை சுற்றி
பிறந்த பிள்ளை ஒருவன்
எந்த மரத்தை சுற்றி
பிறந்த பிள்ளை இவன்
ஏதேனும் தறுதலை மரமாக இருக்குமோ?
மீதி ஐந்து அப்பாலிக்கா
7 comments:
நல்லா இருக்கு...
//சொன்னால் மறுக்கிறார்கள்
எழுதினால் நிராகிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள் //
ஒரு சமயம், இவரும் தமிழ் வலைப்பதிவுலகம், ஒர்குட் வந்து இருப்பாரோ???
சரி போகட்டும்....
நிஜத்தை பற்றி ஒன்று எழுதி இருக்கிறார் , பிறகு வலையேற்றுகிறேன் . இந்தளவு எந்த கவிதையும் பாதிப்பை என்னுள் ஏற்படுத்தியதில்லை :)
ம்ம்ம்ம்
என் கடன் படித்துக் கிடப்பதே....
வலையேற்றி விட்டு இணைப்பை தரவும் !!!!
இவரின் கவிதைகள் நானும் படித்திருக்கிறேன். என்னிடம் இவர் புத்தகம் இருக்கிறது.தீடிரென்று படிக்கும்போது மகிழ்ச்சி.
அந்த புத்தகத்தில் இவரின் போட்டோ ஒரு கவிதையாக இருக்கும்.இவரின் இறப்பு என்னை பயமுறுத்தியது.
கடைசி நாட்கள் கொடுமையானவை.
ரொம்ப யோசித்தால் நமக்கும் இப்ப்டி ஆகிவிடுமோ என்பதாக.(???)
தமிழ் மணத்தில் பதிவை இணைப்பதில்லையா?
நன்றி.
நன்றி ரவி வருகைக்கும் கருத்திற்கும். பொதுவாக இதுபோன்ற புத்தகங்கள் நான் படிப்பதில்லை , அம்மா இந்த முறை கையில் திணித்து படித்து தான் பாரேன் என்றார். அருமையான படைப்புகள்.அவரது மரணம் பற்றி அவ்வளவாக தெரியாது , தற்கொலை என்பதை தவிர.
சொன்னால் மறுக்கிறார்கள்
எழுதினால் நிராகிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்
//
இக்கவிதையில் சாவிர்க்குரிய ஒரு மனப்பான்மையும் ஒரு உச்சகட்ட விரக்தி தெரிவதாக அம்மா சொன்னார்.
பி.கு : தமிழ் மனத்தில் இணைக்க முயற்சிக்கிறேன். பாசு நான் தமிளிஷ்கே கஷ்டப்பட்டு போயிட்டேன் :D
ஆத்மாநாம் என்ற எஸ்.கே.மதுசூதன் (1951-1984)
சென்னையில் பிறந்தவரான ஆத்மா நாம் ‘ழ‘ இதழைத் தொடங்கியவர். ‘காகிதத்தில் ஒரு கோடு‘ என்ற ஒரு புத்தகமும், அவர் இறந்த பிறகு கவிஞர் பிரம்மராஜன் அவர்கள் தொகுத்து வெளியிட்ட ‘ஆத்மாநாம் கவிதைகள்‘ என்ற தொகுப்பும் வெளியாகியுள்ளது. தனி மனிதனுக்கும் சமுகத்திற்கும் உலகிற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியும், தனி மனிதனின் அவலங்கள் வாழ்க்கை மதிப்பீடுகள் பற்றியும் கவிதை வாயிலாக தீவிரமாகப் பேசி வந்த ஆத்மாநாம் தமிழின் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களில் ஒருவர். Affective Disorder என்ற மனநலத் தாக்குதல் ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஆத்மாநாம் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று, 1984 ஜுலை மாதம் பெங்களுரில் இறந்தார்
Nandri: அகநாழிகை.
நன்றி சூர்யா சார். எழுதவதை நிறுத்தி பல நாட்கள் ஆகிவிட்டன. அந்த புத்தகத்தை இருமுறை முழுமையாக படித்த பிறகு ரவி போட்டிருக்கும் பின்னூட்டத்தின் உள்ளார்த்தம் விளங்குகிறது
Post a Comment