Thursday, May 28, 2009

Some FAQ's

மாப்ள எப்டி டா இருக்க ? : எதோ டா...

என்ன பண்ற ? : காஞ்சு போய் கெடக்கறேன்.

கம்பனி செமையா இருக்கு டா : ம்ம் ...

பிகுருங்க எல்லாம் அநியாயம் : சரி டா , கடிப்ப்--- ஏத்தாத

என்ன தாண்டா மாப்ள பண்ற ? : வெட்டியா இருக்கேன்.

எல்லா நேரமமுமா ? : ஆமாம் , நீ இங்க இருந்தப்போ என்ன நொட்டிகிட்டு இருந்த ?

கோபப்படாத , என்ன பண்ற? : எப்போ பார்த்தாலும் ஆன்லைன் தான்.

அப்பறம் ?: சாப்படறேன்-தூங்கறேன் மறுபடி தூங்கறேன்-சாப்படறேன். நடுல எதுனா புக் படிப்பேன். படம் பாக்கறது இல்லை.

ஏன் டா ? : தலைவலிக்குது பார்த்தா.

எப்போ டா மாப்ள ரிசல்ட் : ஜூன் முதல் வாரம் டா.

மார்க் சீட் எப்போ கொடுப்பானுங்க ? : தெரியல , சீக்கரம் கெடைக்கணும்.


Technical FAQ's for relations :

என்னப்பா , காலேஜு முடிச்சுட்ட போல : ஆமாங்க

வேலை கெடச்சது அப்டீனு அப்பா சொன்னாரே : உண்மை தான் சார் !

போகல ? : இல்லை ! வெளிநாட்டுல படிக்க வாய்ப்பு கெடச்சிருக்கு.

எங்க ? என்ன படிப்பு? : பிரான்ஸ். படிப்பு பெயர் " Materials for energy storage and conversion" இரண்டு வருஷம்.

ஏதுப்பா உங்கப்பா இவ்வளவு சேர்த்து வெச்சிருக்கார்? : படிக்க , தங்க , தூங்க , சாப்பட அவங்களே காசு கொடுக்கிறாங்க.

போக காசு : அது கூட நாம போடலேன்னா எப்புடி ?

எதோ வசதி இருக்கு போற : ( டேய் தகரடப்பா மண்டையா ) , இல்லங்க பெருசா இல்லை. ஒரு ஒருலட்சம் இன்னும் கொஞ்சம் கூட இருந்தா போலாம். அப்பா லோன் போட்ட்ருக்கார்.

ஹ்ம்ம் இந்த காலத்துல எங்கயும் வேலை கெடைக்காது அங்க எப்புடி? :
அங்க போனா தான் தெரியும். ஆமாம் , சாப்டீங்களா? இல்லைனா அத பண்ணுங்க மொதல்ல. (நர நர நர )

For Seniors :

மச்சி என்ன பண்ற ? : சும்மார்க்கேன் மச்சி

கலக்கு த்தா பி.டெக் முடிச்சுட்ட போல : ஆமாம் டா , ஒரு வழியா.

எங்க டா போனீங்க எல்லாரும் கடைசியா : கோவா , ஊட்டி ,பிளாக் தண்டேர் டா மாப்ள .

போடு , போடோ எங்கடா ? : நான் எதுமே எடுக்கல , கரடி அப்பறம் கிருஷ்ணா வெச்சிருக்கான்.

என்ன அடுத்து , பிளேஸ் ஆணியா ? : ஆனேன்டா , CTS ல

ஆகலைன்னு சொல்லிட்டு போயேன் , எதுனா univ கெடைச்சுதா : கெடச்சுது டா , பிரான்ஸ்.

என்ன டா வித்யாசமா போற : இல்லடா , பிரேம் போய் இருக்கான்.
ஒவ்வொரு செமஸ்டரும் ஒவ்வொரு நாட்டுல.பிரான்ஸ் , போலந்து , அப்பறம் ஸ்பெயின்.

எப்படா ரிசர்ச் பண்ணுவ அப்போ ? : நாலாவது செமஸ்டர்ல டா . ஒரு நாப்பது ப்ராஜெக்ட் கொடுத்து ஒன்னு எடுத்துக்க சொல்வாங்க. நம்ம CECRI மாதிரி தான். ரேங்க் பேசிஸ்.

போடு , எப்போ கெளம்பற ? : செப்டம்பர்.

விசா? : வேல நடந்துக்கிட்டே இருக்கு டா.



இதுபோக இன்னபிறர் ( தாளத்தோட தந்தையார் , தாயார் யாராது இருந்தீங்கன்னா) , இதை படிக்குமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். நான் படு வெட்டியாக இருப்பது உண்மை தான். அதற்காக வெந்த புண்ணில் , வேல் கம்பை விட வேண்டாமென்று உங்களிடம் மன்றாடுகிறேன்.


எரிச்சலுடன் ,
பிரகாஷ்

4 comments:

techieV2 said...

அடங்கப்பா, ரொம்ப வெளாவரியாவே வெளக்கிருக்கியே தலைவா :D

Prakash said...

ஒய் பாஸ்டன் , அது நீர்தானா ? பின்னூட்டம் போட்டதற்கு நன்றி.

பதி said...

:)

இதுக்கே இப்படி பொளம்புனா எப்படி ராசா??

வேலை, படிப்பு இந்த இரண்டும் கிடைக்காம யார் எவனெவன் கையிலையோ சிக்கி செதறப் போறாங்களோ.. அவங்களை நினைச்சு கொஞ்சம் ஆறுதல் படு !!!!!

Prakash said...

அதுவும் சரி தான். எங்கள் வகுப்பில் நூறு சதவிகிதம் வேலை கிடைத்துவிட்டது : ) . ஆனாலும் , இருக்கும் மூன்று மாதங்களில் தண்டசோறு என்று திட்டுவாங்கவேன்டியது தான் நிலைமை .