Wednesday, December 30, 2009

2010

2010 சில உறுதி மொழிகள் :

1. இதை வெளியே சொல்ல முடியாது இருந்தும் முயற்சிக்கணும்

2. வலைத்தளங்கள் வாசிப்பை குறைத்து நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும்

3.வாதாடுவதை குறைக்க வேண்டும் , நிறைய நண்பர்களையும் எதிரிகளையும் இழக்கிறேன்.

4.துறை சார்ந்த விஷயங்களை ஆர்வத்தோடு கற்று தெளிவு பெற வேண்டும் , இன்னும் நான்காண்டுகளில் வேறொரு நிலைக்கு செல்ல யோசிக்கிறேன்.

5.சமீப காலமாக ஏற்ப்படும் பாகிஸ்தானிய இசை மோகத்தை குறைக்க வேண்டும் , நிறைய இசைகளை பரிசோதனை ரீதியிலாது கேட்க வேண்டும் .கூடுதல் வாசிப்பை செலுத்தி பாகிஸ்தானிய இசையை பற்றி தரமான சில பதிவுகள் எழுத வேண்டும்.

6.Time management கொஞ்சமாவது ஒழுங்காக செய்ய வேண்டும் , நிறைய நேரம் விரயமாகிறது .

7.போலந்தில் நிறைய ஊர் சுற்ற வேண்டும் குறைந்தது நான்கு நாடுகளாவது போகவேண்டும் ( Hungary ,Budapest , Slovenia and Italy).

8.சில நல்ல சினிமாக்கள் பார்க்க ஆசை.

9.எல்லாரும் ஒன்னு சொன்னா அத எதிர்க்கணும்னு பொழப்பா வெச்சிருக்க அப்படீன்னு கதிரவன் சொல்லுவான் (கோபத்தில் ) , அந்த எதிர்ப்பை அறிவுசார்ந்ததாக இன்னும் கூர்மையாக்க வேண்டும்.

10. உறவு சார்ந்த காயின் நகர்தலில் முக்கியமான கட்டத்தில் இந்த வருடம் உள்ளேன் , பொறுமையாக வெற்றிகரமாக நகர்த்த வேண்டும் (தோல்வியை தவிர்த்து அல்லது குறைந்த சேதாரத்துடன்)

2009 எனக்கு சில இமாலய வெற்றிகளையும் மிக அவசியமான தோல்விகளையும் தந்துள்ளது. விளிம்பில் இருக்கிறேன் , இதிலிருந்து மீண்டு வருதல் என்னையே எனக்கு புதிதாக காட்டும்.புதுவருட நம்பிக்கை என்பது ஒருவித கற்பிதமே , எல்லாவற்றிற்கும் நாட்கள் புடிக்கும். வேண்டுமானால் இதை ஒரு காலம் சார்ந்து திரும்பி பார்க்கும் கோணத்தில் எடுத்து கொள்ளலாம். பல வரிகளை அடித்திருக்கிறேன் , இது போதும்.அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

7 comments:

Frederick D Souza said...

Also, Therinjadha naalu perukku sollu.

Prakash said...

:)

Gopalan Ramasubbu said...

தங்களின் பத்து உறுதிமொழிகளும் இந்த ஆண்டில் வெற்றிகரமாக நிறைவேற என் வாழ்த்துக்கள் :)

Prakash said...

நன்றி தல :) இந்த ஆண்டில் உங்கள் நட்பு முக்கியமான ஒன்று . நாலு நல்ல் பொஸ்தகம் படிக்க வெச்சீங்க

rajamelaiyur said...

எந்த உறுதி மொழியும் எடுக்க கூடாது னு உறுதி மொழியு எடுக்க போறேன்

Prakash said...

இதே உறுதிமொழியை பல பேர் எடுக்கிறார்கள்.புத்தாண்டு வாழ்த்துகள்.

Sharif M said...

Un muthal uruthi mozhi ezhuthum pothu ennai ninaitthiruppai...unmai...