அடுத்த மொக்கைப்பதிவு ரெடி. எனக்கு பகுத்தறிவு மிக லேட்டாக சேர்ந்த விடயம் தான். சின்ன வயதில் சாமி பக்தியும் அதிகம் கிடையாது. ஆனால் , நானும் பேசிலும் ( பார்த்து பத்து ஆண்டுகள் இருக்கும்) அடிக்கடி தேவாலயம் சென்றது நினைவிருக்கிறது. மச்சான் என் ஆளை காட்றேன் வாடா என கூட்டிக்கொண்டு போவான். அவன் ஆள் உட்பட அனைத்து ஜிகிடிகளையும் கண்ணால் விழுங்கி விட்டுதான் மறுவேலையே.கடைசி வரை அந்த பெண்ணிடம் பேசில் பேசினானா என்று நினைவில்லை.
இந்நிலையில் எங்கள் ஊரில் திருவிழா மிகப்ப்ரசித்தம். தங்ககார்த்தி எல்லாம் தீபாவளிக்கு கூட துணி எடுக்க மாட்டான் , ஆனால் திருவிழா என்றால் திலகராஜில் முதல் ஆளாக நின்று விடுவான். இந்த திருவிழாக்களில் ஒரே ஒரு பெண்ணை மட்டும் தேர்ந்தெடுத்து கூட்டத்தோடு கூட்டமாக அவள் பின்னால் செல்வதை வருடாந்திர கடமையாக செய்து வந்தோம். குறிப்பாக அவர்கள் வெளி கிராமத்து பெண்களாக இருக்கும் பட்சத்தில்.
இன்றும் நினைவிருக்கிறது " மாப்ள அந்த ப்ளூ உன்னையே தாம்ல பாக்குது" என்று உசுப்பி விடப்போய் ஒரு நான்கு கிலோமீட்டர் தூரம் என்னை நடக்க வைத்தான் ஒரு படுபாதகன். என் மனாசாட்சிக்கு தெரியும் அவள் திரும்பவேயில்லை.
பதிவின் சாரத்திர்க்கே வரவில்லை , நான் சொல்ல வந்தது சாமி ஆடுதலை பற்றி. பலமுறை பேச்சுபோட்டிகளில் கலந்திருக்கிறேன். வேறொரு பள்ளியிலிருந்து வரும் ஒரு சிட்டு செமையாக சிலிர்த்துகொள்ளும் போட்டிகளில். நம் ஊரில் அந்த இடத்தில் திருவிழா போகலாமா என்றான் நண்பன் , சரி என்று சைக்கிள் எடுத்து கிளம்பினோம். அங்கு போய் தான் அது முழுக்க சாமி ஆடும் திருவிழா என்று தெரிந்தது , ராட்டினம் இல்லை , மிளகாய் பஜ்ஜி இல்லை , பஞ்சுமிட்டாய் இல்லை ஒரு மயிரும் இல்லை.
சரி மொக்கை என்று திரும்பி வந்துவிடலாம் என பார்த்தல் பெருங்கூட்டம். சாமி அடஆரம்பித்துவிட்டாள் ஒரு பெண்மணி , ஆச்சரியமாக உற்று பார்த்தேன் , ஏன் ஆடுகிறாள் என்ற காரணம் புலப்படவில்லை , அப்பொழுது ஆத்திகனாகவே இருதாலும் எனக்கு சாமி ஆடுதல் ஒரு வித மன நோயாகவே பட்டது. அப்பொழுது தான் அந்த சிட்டு டமால் என்று சாமி ஆட்டம் போட்டது , அது போட்ட ஆட்டத்தில் நான் சாமி எல்லாம் காணவில்லை , பலான பலான ஆட்டம் போல் தான் அடியேனின் கண்ணுக்கு தெரிந்தது. பெருசு ஒன்று பட்டை பட்டையாக விபூதி போட்டுக்கொண்டு அந்த பிள்ளையை எடக்கு முடக்காக பார்த்துக்கொண்டிருந்ததை பார்த்தேன். நெருங்கிப்போய் அவளைப்பார்த்து கண்ணடித்தேன் , ஒரு பிளையிங் கிஸ். இடத்தை காலி செய்தோம் நானும் நண்பனும்.
அடுத்த நாள் ஒரு போட்டி , என்னை பார்த்தவள் தடலாடியாக கத்தினாள் " உன்மேல உள்ள மரியாதையே போச்சுல ஒன்னிய மனுஷனாவே நான் இனி மதிக்கமாட்டேன். சாமிஆடுதேம்ல அங்குட்டு என்ன என்னையா கேவலமா பாக்க , அப்பறம் நீ செஞ்ச காரியத்த பத்தி பேசவே புடிக்கல " என பொரிந்து தள்ளினாள்.
பொறுமையாக கேட்டேன் " ஏ புள்ள , நீ சாமி ஆடலை , என்னியத்தான பார்த்த ? "
" அப்படி எல்லாம் இல்லையே "
" அப்பறம் எப்புடி இம்புட்டு சரியா சொல்ற நான் செஞ்சதையெல்லாம் "
மூஞ்சியை திருப்பிக்கொண்டு போய்விட்டாள் . பின்னாளில் நான் பலமுறை சாமிஆடுபவர்களை பார்த்து கண்ணடித்திருக்கிறேன். ஒரு பெண் தனியாக வந்து "ஏன் அப்படி செஞ்சீங்க" என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.
அடுத்த நாள் ஒரு போட்டி , என்னை பார்த்தவள் தடலாடியாக கத்தினாள் " உன்மேல உள்ள மரியாதையே போச்சுல ஒன்னிய மனுஷனாவே நான் இனி மதிக்கமாட்டேன். சாமிஆடுதேம்ல அங்குட்டு என்ன என்னையா கேவலமா பாக்க , அப்பறம் நீ செஞ்ச காரியத்த பத்தி பேசவே புடிக்கல " என பொரிந்து தள்ளினாள்.
பொறுமையாக கேட்டேன் " ஏ புள்ள , நீ சாமி ஆடலை , என்னியத்தான பார்த்த ? "
" அப்படி எல்லாம் இல்லையே "
" அப்பறம் எப்புடி இம்புட்டு சரியா சொல்ற நான் செஞ்சதையெல்லாம் "
மூஞ்சியை திருப்பிக்கொண்டு போய்விட்டாள் . பின்னாளில் நான் பலமுறை சாமிஆடுபவர்களை பார்த்து கண்ணடித்திருக்கிறேன். ஒரு பெண் தனியாக வந்து "ஏன் அப்படி செஞ்சீங்க" என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.
இன்று யாரவது சாமி ஆடுவதை பார்க்கவேண்டும் போல் உள்ளது
4 comments:
அடப்பாவி.....
இப்ப யாரை கரக்ட் பண்ணுற ஐடியால இந்த லிங்கை ஸ்டேட்டஸ் மெசேஜா போட்டு வைச்சு இருக்கே?
ஆமாம் , இந்த ஜி மெயிலில் ஒளிந்து கொள்ளும் வசதியை முதலில் தூக்கனும்னே , பல பிகருங்க ஒளிஞ்சுக்குதுங்க.
பி. கு : word verification தூக்கிவிட்டேன். இனிமேல் பின்னூட்டங்கள் இடுவது எளிதென நம்புகிறேன் :)
ahaan ahaan ahaaan
haaaaaaaaaaaaaaaaannnnnnnnnnnnnnnnnnnn
எங்க போனாலும் கந்தனுக்கு புத்தி கவுட்டிக்குள்ள ... :)
எங்கள் சூப் கதாநாயகனே , கில்மாவின் தலைவனே. எல்லாம் நீவிர் தந்த ஆசீர்வாதம் தான் :D
Post a Comment