எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு , வெளியே சொல்ல முடியாததும் கூட. எனக்கு மிகவும் போர் அடிக்கும்பொழுது எல்லாம் , உலகின் மோசமான சைக்கோ கொலைகாரர்களின் வரலாற்றை படிப்பேன். அவர்களில் பால்ய பருவம், அவர்களை கூசாமல் கொலை செய்ய தூண்டிய காரணிகள் , அவர்களின் செக்ஸ் வேக்கைகள் , அவர்கள் கொலை செய்யும் விதம் , கொலை என்றால் தென்னன்கொலையா என்னும் ரேஞ்சுக்கு அதை மறந்து இயல்பு வாழ்கை வாழும் குரூரும் என்று அனைத்தையும் படிப்பது எனக்கு பிடித்தமான விடயம். ( நீ உருப்டாப்புல தான் என்று கூறும் உங்கள் மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது )
சிலரை பற்றி படிக்கும் பொது உறைந்து போய் உக்காந்திருக்கிறேன். பயம் என்னும் ஒற்றை சொல்லை உடைத்து விட்டால் , கொஞ்சம் அவர்கள் உளவியல் சிந்தனைகளுக்கு உள்ளே போய் பார்த்தால் கொலை நடுங்கிவிடும். மனிதருக்குள் மிருகம் படித்ததிலிருந்து எனக்கு இந்த பழக்கம் தொற்றி கொண்டது என்பதே உண்மை.
வான்கோவரில் பட்டப்பெயருடன் ஒரு ஊர் உண்டு , " லோ ட்ராக் " என்று அந்த மாவட்டத்தை அழைப்பார்கள். ஒரு முறை அங்கே சுற்றி நடந்துவந்தீர்கள் என்றால் , காலுக்கடியில் உபயோகிக்கப்பட்ட காண்டம்கள் , தூக்கி எறியப்பட்ட சிரிஞ்சுகள் என்று அனைத்து ஆரக்யோமான விஷயங்களும் படும். பதினோரு வயதில் கூட அங்கு விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை நீங்கள் காணலாம். 1995 இல் ஒரு புள்ளி விவரத்தை பார்த்த பொழுது லோ ட்ராக்கில் இருக்கும் பெண்களில் 73% விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள் .1998 இல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தில் அங்கே ஒரு நாளைக்கு ஒரு நபர் இறந்துகொண்டிருந்தார் , போதை பொருளுக்கு அடிமையாகி , எய்ட்ஸ் வந்து , கொலை செய்யப்பட்டு.
ஆம் கொலை செய்யப்பட்டு , ஆனால் இதை கண்டுபிடிப்பதற்குள் கானடா போலீஸ் செத்து சுண்ணாம்பு ஆகிவிட்டது. காணாமல் போனவர்கள் பெயர்விவரம் மற்றும் நாட்கள் விவரம் இங்கே எழுதினேன் என்றால் எனக்கு தாவு தீர்ந்துவிடும். எண்களை போட்டாலே தலை சுத்தும் , எண்பதுகளில் ஆரம்பித்தது 2002 வரை நிற்கவே இல்லை. எப்படி எப்படி எல்லாமோ ஒரு லிஸ்ட் தயாரித்தார்கள் 98 இல் மொத்தமாக ஒரு ஐம்பத்து நான்கு பெண்களை காணவில்லை ( காணலைன்னா 80களில் இருந்து காணவில்லை என்பதிலிருந்து நேற்று காணமல் போனவர் வரை) கிம் ரோசொமோ என்பவர் முதலில் திருவாய் மலர்ந்தார் " ஒரு வேலை இதெல்லாம் ஒரே ஆளின் கைவண்ணமாக இருக்கலாமோ? "
ஆதாரம்? சாட்சிகள்? ஒரு மண்ணும் கிடைக்கவில்லை. எந்த விபச்சாரியும் சாட்சி சொல்ல பயந்தார்கள் . தானும் மாட்டிக்கொண்டால்? . 98 இல் ஒரு மிக மிக முக்கியமான சாட்சியம் சிக்கியது. "Piggy Palace Good Times Society என்று இவனுங்க நைட்டு பெண்களை வெச்சு கூத்தடிக்கரானுவோ எசமான். அதுலயும் ராபர்ட் பிக்டனை பார்த்தாலே சரி இல்லை. நேத்து கூட அவன் பண்ணையில் ஒரு பண்ணி என்னை துரத்தி துரத்தி கடிக்க வந்துச்சுனா பார்த்துகோங்களேன் , பண்ணிங்க எதுக்கு எசமான் மனுஷங்கள கடிக்கணும் ? " என்றார் ஹிச்காக்ஸ் என்னும் பண்ணை வேலையாள்.
ஏற்கனவே ஒரு முறை ஒரு பெண்ணை கொலை செய்ய முயன்றதற்கு பிக்டனை போலீஸ் பிடித்தது . போதிய சாட்சியங்கள் இல்லாததால் தப்பித்து விட்டான். அப்பவும் கொஞ்சம் கூட சூதானம் இல்லாமல் இருந்தார்கள் கானடா போலீஸ் , நாங்க பிக்டனின் பண்ணையை தேடினோம் ஒன்றுமே இல்லையே என்றார்கள் போலீஸ்.
சாட்சியங்களை நீதிமன்றத்தில் காட்டும் பொழுது பெண் வக்கீல்கள் வாந்தி எடுக்க ஆரம்பித்தார்கள் . 22 காலிபர் துப்பாக்கி ஒன்று டில்டோவுடன் ( அர்த்தம் தெரியாவிடின் விட்டு விடுங்கள் :P ) சிக்கியது.கண்ணால் பார்த்த சாட்சியங்களிலேயே முக்கியமாக கருதப்பட்டது பெல்வுட் , பிக்க்டன் தனது கொலைகளை எப்படி நிறைவேற்றுவான் என்று தனக்கு நடித்து காட்டியதாக சொன்னான்.
" அவர்கள் கைகளை கட்டி போட்டு , டாகி முறையில் உறவு கொண்டு பின்பு கொலை செய்து தனது பன்றிகளுக்கு உணவாக்கி விடுவான் . பெண்களை வசியம் செய்ய அவர்களுக்கு பிடித்த போதை பொருளை பிக்டன் கொடுத்தான் " என்றார். அவரே ஒரு போதைப்பொருள் அடிமை ஆதலால் இத்தனை நாள் அதை போலீசிடம் சொல்லவில்லை என்றும் சொன்னார்.
12 comments:
யோவ் என்னய்யா டேஸ்ட் உனக்கு. ஒன்னும் சொல்றதுக்கில்லை. ஃப்ரீயா விடு. சைக்கோ கொலைகாரர்களின் கொலைகளை உளவியல் ரீதியாக அனுகுதல் என்பது ஒரு வகையில் சுவாரசியம் தான். ‘டெக்ஸ்டர்’ என்று ஒரு டி.வி. சீரியஸ் உள்ளது. மூன்று சீசன்கள் வந்து உள்ளன. அதில் ஒரு சைக்கோ கொலைகாரன் மற்ற சைக்கோ கொலைகாரர்களை அனுகுகிறான் என்பதே சாராம்சம். முடிந்தால் பார்க்க ட்ரை பண்ணு...
மம்மி , திட்டாத பா. நான் அந்த சீரியல் பார்ப்பதில்லை. நிறைய படித்திருக்கிறேன் , அதில் இந்த கேஸ் இழுவை என்பதால் எழுதினேன். வர ஒரு பின்னூட்டமும் என்னை திட்டுவதாக அமைந்தால் நான் எங்கையா போவேன் , அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பிரபலம் ஆனாலே இந்த ப்ராப்ளம் தானே...
பிரபல பதிவர் ஆனதற்கு வாழ்த்துகள் பிரசன்னா :)
அய்யா சாமி!! நான் உன்ன சொன்னேன். அப்படியே ப்ளேட்டை திருப்பி போட்டுட்டியே...
ஆமாம் நீங்க என்ன சொல்லுங்க , நான் உங்கள சொல்றேன். மாத்தி மாத்தி சொல்லிப்போம்
There was a thodarkadhai in Junior Vikatan some 10 yrs. ago called "kutravali thappa mudiyadhu"...it used to feature real life stories of serial killers and how they were caught....sends shivers down my spine!
Havent read that though. Thanks for reading Shiva :)
இந்த ஆளைப் பத்தி படிக்கும் போதே நெஞ்சை பதற வைக்குது.
ராஜேஷ் குமாரோட ஒரு திரில்லர் நாவலை படிச்ச திருப்தி கிடைக்குது உங்க பதிவை படிக்கும் போது..
மிக்க நன்றி தோழர் , முதல் வருகைக்கும் கருத்திற்கும் :)
இதே போல் தொடர்ந்து எழுதவும்
நன்றி சதீஷ். வருகைக்கும் கருத்திற்கும் :)
Post a Comment