Wednesday, August 12, 2009

சீனா விலகும் திரை - நூல் விமர்சனம்


எனக்கு கண்ணை கட்டுகிறது. புத்தகம் வாங்குவதற்கு முன்பே பல்வேறு எதிர்பார்ப்புகள் வைத்திருந்தேன் , கட்டுரைகிளின் தொகுப்போ? பயண கட்டுரை எழுதி முழுவதும் மொக்கையாக இருந்து விட்டால் ?


அப்படி எதுவுமே இல்லை , தன் பயணத்தின் வாயிலாக தனது ஐந்து வருட இருப்பின் வாயிலாக புள்ளி விவரங்களை ஆங்காங்கே அள்ளி தெறித்து , ஒரு இடத்தில் நின்று கொண்டு அதன் வரலாற்றை நினைவில் நிறுத்தி எழுதி அசத்தி இருக்கிறார் பல்லவி அய்யர் ( படிச்சு வாங்கின பட்டமுங்களா? ). இவ்வளவு லைவ்லியான மொழிபெயர்ப்பா என அதிசயிக்க வைக்கிறது ராமன் ராஜாவின் உழைப்பு!

சீனாவின் தனி நபர் வருமானம் இந்தியாவை விட இரு மடங்கு. இந்தியாவில் 5.7 கோடிகுழந்தைகள் சத்தான உணவில்லாமல் வளர்ச்சியில் தடைபடுகிறார்கள் ஆனால் சீனாவில் எழுபது லக்ஷம் தான். இந்தியாவில் 15 வயது மேர்ப்பட்டவர்களில் 68% பேர் தான் எழுத படிக்க தெரிந்தவர்கள். சீனாவில் 95% .


நான் என்ன ரமணா விஜயகாந்தா? . விஷயத்துக்கு வருவோம் , ராமன் ராஜாவில் மொழிபெயர்ப்புக்கு ஒரு ஒரு உதாரணம் , சீன விருந்தாளிகள் இந்தியாவில் இருக்கும்பொழுது டெல்லியில் இருந்து ஆக்ரா அழைத்து செல்லப்படுகிறார்கள். சன்னமாக ஒருவர் கேட்கிறார் " நாம் நெடுஞ்சாலையில் பயணிப்போம் என்றீர்களே பல்லவி , அது எப்போ வரும்? "


" நாசமா போச்சு! நாம் அதில் தான் சென்று கொண்டிருக்கறோம். "

இதில் இருந்தே தொடங்கலாம் , சீனாவில் இருக்கும் சாலைகள் இந்தியாவில் இல்லை. ரயில் பாதைகளில் அசுர பாய்ச்சல். தொழிற் சாலைகள்? பட்டன் தயாரிக்கிரீகளா? பலூன் ? இரும்பு? பொம்மைகள்? எல்லாவற்றிலும் சீனா சீனா சீனா ! மாவோ சீனா இப்பொழுது கண்டிப்பாக இல்லை என ஆணித்தரமாக பல்லவி கூறுகிறார். இருந்திருந்தால் 44.7% ஏற்றத்தாழ்வு இருக்காது ( inequality) . சீனா அடைந்த அனைத்து வளர்ச்சிக்கும் அது கொடுத்த விலை , ஜனநாயகம் !

புத்தகம் நெடுக ஜனநாயகத்தை புதைத்த வளர்ச்சியா? வளர்ச்சியே இல்லாமல் வெத்து ஜனநாயகமா என்று மண்டையை ஒடைத்து கொண்டிருக்கிறார். தீர்வு? நான் ஏழை குடும்பத்தில் பிறந்தால் சீனனாகவே ஆசை படுகிறேன் ஆனால் நடுத்தர குடும்பம் என்றால் இந்தியா தான் என்ற முடிவை முன் வைக்கிறார் .


பல்லவி ஹூடாங்கில் வசிக்கும் பொழுது அவரது வீட்டின் அதிபாரான திரு வூ ( கோடீஸ்வரர்) தன் வீட்டின் கக்கூசை சுத்தம் செய்கிறார். பலப் ரிப்பேர் பார்க்கிறார். தனது அம்மாவிற்கு ஆயி வேலை கிடைக்குமா என்று தனது நவ நாகரீக சீன மாணவி கேட்கும் பொழுது ஆடி போகிறார் பல்லவி. ஏனென்றால் இதெல்லாம் இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வேலைகள் . சீனாவில் எந்த வேலையும் தரம் பார்க்காமல் செய்கிறார்கள் . வர்க்க பேதங்களின் , இன /மத பேதங்களின் முதுகெலும்பை உடைத்திருக்கிறார் மாவோ . இங்கே சாதீய ஏற்ற தாழ்வுகளை உடைப்பது சாதாரண விடயமா?


அதே நேரம் மக்கள் மாற்றி சிந்திக்க கூட தெரியாமல் வளர்ந்திருக்கிறார்கள் , இந்தியனுக்கு எடக்கு பேசாவிடின் தூக்கம் வருமா? சீனா காரன் எதுவும் நன்மைக்கே என்கிறார்கள். இரண்டு உதாரணங்கள் இதற்க்கு , திபெத்தில் தான் பார்த்த மொழி பெயர்ப்பாளர் ஒருவர் " சீனர்கள் ஒரே மாதிரி தான் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இன்னொன்று அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டால் ( கெட்ட செய்திகளாம்) மக்கள் மனசு ஒடிந்து விடும் என்று அவரது சீன மாணவி சொல்கிறார்.


மூச் , மாத்தி யோசிக்காதே என்கிறது அரசாங்கம். இணையத்தை தடுக்கிறார்கள் , எல்லாவற்றிற்கும் அடக்குமுறை. பொருளாதார ரீதியாக முதலாளித்துவமும் உள்ளே படை எடுத்து வந்தாகி விட்டது. இப்பொழுது தான் இடது சாரி சிந்தனைகளை தூசி தட்டி இருக்கிறார்கள். ஏனென்றால் கட்சியின் தூண்களான விவசாயிகளின் அதிர்ப்தி தான் காரணம். ஆனால் அதிகார பீடத்தை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய கல்வி அறிவு படைத்த நடுத்தர மக்கள் கேட்க மாட்டார்கள் , காரணம் வளர்ச்சி/முன்னேற்றம் என்னும் ராஜ போதை.



பலவியின் திபத் பயணம் , ஸ்பானிஷ் கணவர் , பீஜிங் மாணவிகள் ,ஹூடாங் வீடு மற்றும் வாழ்கை முறை , பொக்கை வாய் கிழவர்கள் , கக்கூஸ் கண்காட்சி , அங்கு அவர் சந்தித்த இந்தியர்கள் , வாஜ்பாய் வருகை , உணவு பழக்க வழக்கங்கள் , சீனாவும் மதமும் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களும் எப்படி பின்னி பிணைகின்றன இன்றைய கால கட்டங்களில் என்ற நுட்பமான ஆராய்ச்சி , யோகா மோகன் , திபெத் சிறுவன் , பீஜிங் தலைகீழாக மாறிப்போன காட்சிகள் , மலை மேல் ரயில் பிரயாணங்கள் , அவர் சந்திக்கும் உலகத்திலேயே பணக்கார கிராமம் அங்கு முன்னேற்றம் வர வித்திட்ட மனிதர் , அவர் கண்ட தொழில் சார்ந்த பேட்டிகள் , அவர் சந்தித்த சாக்ஸ் தொழிற்சாலை , பாதி புதுமையும் மீதி பழமையும் கொண்ட வீடுகள் ( இது தான் இன்றைய சைனா ) , தொழில் நகரம் அதில் இருக்கும் பொருள்கள் , மத வழிப்பாட்டு உருவங்கள் , செக்ஸ் பொம்மைகள் என்று ஒவ்வொன்றும் அவரின் ரசனையோடு கலந்த நுட்பமான தகவல்கள்.



அவர் சார்ஸ் பற்றி எழுதி இருக்கும் இடத்தில் நான் கடுமையாக முரண் படுகிறேன் அது இந்த புத்தகத்தின் சாரமும் கூட! முதலில் சீன அரசாங்கம் சார்ஸ் பரவிய விகிதத்தை குறைத்து சொல்லியது ( மீடியா அவங்க கையில் பாஸு). பிறகு உண்மையை ஒப்புக்கொண்டு தீர்வு கண்டது. இதை அறிந்த மாணவர்கள் /மக்கள் கலவரமானார்கள். அதற்க்கு பல்லவி அளிக்கும் பதில் இதுவே இந்தியா என்றால் நாங்கள் துல்லியமாக பத்திரிக்கைகள் ( மீடியா) மூலம் அலசி இருப்போம் என்று ஜம்பம் அடித்து கொள்கிறார்.


இந்தியாவில் சார்ஸ் பற்றி எத்தனையோ கட்டுரைகள் பத்திரிக்கைகளில் குவிந்தன! மொத்தம் எத்தனை நபர் பாதிக்கப்பட்டனர்? மூன்று. இறப்பு? பூஜியம் பல்லவி. ஏன் சார்ஸ் இவ்வளவு கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது? விமானம் மூலம் கூட பரவி வசதி படைத்தவர்களையும் கொல்லும் என்பதால் தானே? . Tuborculosis , வயிற்று போக்கினால் இந்தியாவில் சாகும் எண்ணிக்கை எவ்வளவு? அதன் புள்ளி விவரங்கள் வருவதே இல்லையே? ஏன் ? இந்திய மீடியா என்று நாம் எவ்வளவு பீத்தி கொண்டாலும் அது கார்பரேட்களின் கைப்பாவையாக உள்ளது ( They are corporate stenographers) இத்தனை இருந்தும் எனக்கு இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறைவில்லை , மீடியாக்கள் மீதும்! ஏனென்றால் ஒரு பாலகும்மி சாய்நாத் இல்லையென்றால் மேற்சொன்ன விவரங்கள் எனக்கு தெரிந்திருக்காது.




மொத்தத்தில் இந்த புத்தகத்தை படிக்காமல் விடுபவர்கள் ஒரு முக்கிமான ஒப்பீடு நடையில் எழுதப்பட்ட ஒரு சுவாரசியமான / அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றை இழக்கிறார்கள். A must read!

9 comments:

Nathanjagk said...

நல்ல அலசல். ஆனால் முதல் வரியில் பயமுறுத்தி விட்டீர்கள். நல்ல அனுபவசாலியின் (பல்லவி) குறிப்புகள் என்று நம்புகிறேன். A Must read Book எங்கு கிடைக்கும், விலை, ஆன்லைன் ஆர்டர் விபரம் ​போன்றவையும் குறிப்பிட்டிருக்கலாமோ?

Nathanjagk said...

உத்து உத்துப் பார்த்ததில் கிழக்கு பதிப்பகம் என்று அறிகிறேன். கரெக்டா?

Prakash said...

நன்றி ஜகன்னாத் வருகைக்கும் கருத்திற்கும். விலை ருபாய் 200 . NHM ஆன்லைனில் வாங்கலாம். பத்ரி தெரியும் தானே? ( http://www.thoughtsintamil.blogspot.com/) இவரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். கிழக்கே தான் :)

Vina Sana said...

யாருப்பா இந்த பிகர் ?

Prakash said...

இந்துவில் எழுதும் வீணும் , பிகரா என்பது விவாதத்துக்குரிய விஷயம் தான்

Prasanna Rajan said...

ஃபிகர் மாதிரி தெரியலை. அனேகமாக ஆண்டியா தான் இருக்கும். :D நல்ல பதிவு ப்ரகாஷ். பயணக் கட்டுரைகள் பெரும்பாலும் ஏனோ மொக்கையாக இருப்பதில்லை. பயணக் கட்டுரைகள் படிக்க பிடிக்குமென்றால் ஆர்.கே.லக்‌ஷமணின் ட்ராவலாகுகளைப் படிக்க முயற்சிக்கவும்...

Prakash said...

நன்றி பிரசன்னா. பயணக்கட்டுரைகள் பெரும்பாலும் எனக்கு அவ்வளவு பிடிப்பதில்லை. லக்ஷ்மனின் புத்தகத்தை படிக்க முயற்சிக்கிறேன். இது பயணத்தில் மூலமாக நிகழ் கால சீனாவை அறிந்து அதை மாவோ கால சீனவிடன் ஒப்பீடு செய்து பின்பு இந்திய சீன ஒற்றுமை வேற்றுமைகளை அலசும் புத்தகம்.

பயனக்கட்டுரைகளின் தொகுப்பில் என்னை கவர்ந்த புத்தகம் தேசாந்திரி

Nathanjagk said...

பதிப்பக விவரத்து நன்றி பிரகாஷ். NHM-ல் ஆர்டர் ​செய்துவிட்டேன்.
உத்து உத்து பதிப்பகத்தை தான் பார்த்தேன்... ஆளு பிகரான்னு பாக்க மறந்துட்டேன்..!

Prakash said...

உத்து உத்து பதிப்பகத்தை தான் பார்த்தேன்... ஆளு பிகரான்னு பாக்க மறந்துட்டேன்//

ஹி ஹி :D