Thursday, August 13, 2009

தமிழ் சினிமா இசையும் இந்தி பாடகர்களும்

அடித்து ஆடி கொண்டிருக்கிறார்கள் ஹிந்தி பாடகர்கள்.( நான் சிறு வயதிலிருந்தே பாடகிகளின் பெயர்களை நினைவில் வைத்து கொள்வதில்லை , ஆக பதிவு முழுவதும் பாடகர்களை பத்தி தான். ).


ஒரு கமர்ஷியல் சினிமா பாடல்கள் ரசிகனாக இதை பதிவு செய்கிறேன். "பருவா இல்லை" என்று கொல்வதில் எல்லாம் எனக்கும் சம்மதம் இல்லை தான். இருந்தும் தமிழ் சினிமாவில் அதிகம் ஹிந்தி பாடகர்கள் இன்றளவிலும் பாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஹரி சரண் , நரேஷ் , கார்த்திக் , திப்பு , ஹரீஷ் ராகவேந்தரா போன்ற தமிழ் பாடகர்கள் இருந்தும் சில சமயம் ஹிந்தி பாடகர்கள் பாடிய பாடல்கள் ஹிட் ஆவதால் தொடர்ந்து அவர்கள் பாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.


1. உதித் நாராயணன் :
தமிழை மொத்தமாக கொலை செய்கிறார். ழ வருவேனா என்கிறது , இருந்தும் பாடிக்கொண்டே தான் இருக்கிறார். ஏன் ? தோரணையில் " வா செல்லம்" கேட்டீர்களா? அதை தமிழ் பாடகர் ரஞ்சித் கூட பாடி இருந்தார் இருந்தும் திரையில் ஒலித்தது உதித் குரல் தான். கீழ் நோட்ஸில் உதித்துக்கு உள்ள கம்பீரமான குரல் வளம் ஒரு காரணம். " சஹாரா " போன்ற பாடல்களில் எந்த உயரங்களையும் அனாயசமாக தொட்டு விட்டு வந்து குழைத்து பாடுவார்.


இவர் பாடிய ஹிந்தி பாடல்களிலேயே எனக்கு " ஏ தாரா " சுவதேஷில் உள்ள பாடல் மிகவும் புடிக்கும். தமிழில் ஒரு ஹிந்துஸ்தானி சாயல் பாடல் வந்தாலே யுவன் உதித்தை கூப்புடுகிறார் , " எங்கேயோ பார்த்த மயக்கம்" ஒரு சிறந்த உதாரணம். ஐம்பதற்கும் மேற்பட்ட பாடல்களை உதித் தமிழில் பாடி இருப்பார்.


2. சோனு நிகம் :



தலை இன்னும் தமிழில் அதிகம் பாடவில்லை. " விழியில் என் விழியில்" என்று கிரீடத்தில் தெளிவான தமிழுடன் ஒரு குரல் கேட்டதல்லவா? சோனுவின் குரல் தான். ஹிந்தியில் இவர் பாடிய பாடல்களுக்கு எல்லாம் கண்மூடித்தனமான வெறியன் நான். எந்த சிரமமான பாடல்களையும் சொடுக்கு போடும் நிமிடத்தில் சோனுவால் பாட இயலும். இவர் இதற்க்கு முன்னால் பாடிய ஒரே தமிழ் பாடல் " வாராய் என் தோழி " ஜீன்ஸ் படம்.


3.ஜாவெத் அலி :




திரும்பவும் உச்சரியுங்கள் , ஜாவெத் அலி அதே தான். இந்த பெயரை இனி எந்த திரை இசை ரசிகனாலும் புறக்கணிக்கவே முடியாது. மச்சான் குசாரிஷ் கேட்டியா டா ? சோனு சோனு தான் டா என்றேன் , இணையத்தில் தேடி நண்பன் ஒருவன் பெயர் சொன்னான் , பாடியது யாரோ ஜாவெத் அலியாம் டா.


ஹிந்தியில் பல ஹிட் பாடல்கள் , " து முஸ்குரா " , " ஜஷ்னே பகார் " போன்ற சொக்க வைக்கும் மேலோடிகள். தமிழில்? குங்குமப்பூவும் கொஞ்சுபுராவும் படத்தில் "சின்னஞ்சிறுசுகள்" , சர்வத்தில் "சிறகுகள் நீளுது" , வாமனனில் " ஏதோ செய்கிறாய்" என்று இவர் பாடிய அனைத்தும் எனக்கு பிடித்திருக்கிறது. அதிலும் முஸ்குரா பாடலில் என்னமா அசத்தி இருக்கிறார்? வளமான எதிர்காலம் உண்டு ஜாவதுக்கு .

4. சுக்விந்தர் சிங்க் :



தக்க தையா என்று அலறிய குரல். இவரது பல இந்தி பாடல்கள் பிரமிப்பூட்டும் நுணுக்கம் கொண்டவை. இவரே இசையமைத்த நஷா ஹி நஷா அருமையான பாடல். இவர் பாடிய பல பாடல்கள் இந்தியில் பட்டையை கெளப்பி இருக்கின்றன. தமிழில் கம்மி தான் போல.டிஷ்யூம் படத்தில் இருந்து " கிட்ட நெருங்கி வாடி " தான் லேட்டஸ்ட் .


5.கிருஷ்ணா குமார் குனாந்த் :



கேள்விப்பட்டது இல்லையா? கே.கே என்றால் தெரியும். பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மன்மதனில் உள்ள " காதல் வளர்த்தேன்" , 12 B படத்தில் வரும் " எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது , அந்நியனில் வரும் " அண்டங்காக்கா கொண்டைகாரி " என்ற பல ஹிட் பாடல்களும். "மொழ மொழன்னு" போன்ற திராபை பாடல்களும் பாடியுள்ளார். இவர் பாடியதிலே " ஒரு பனித்துளி" ( கண்ட நாள் முதல் ) ," உன்னை தொட்ட" ( இதய திருடன் ) , " உயிரின் உயிரே " ( காக்க காக்க ) எல்லாமே மிக பிரபலமான பாடல்களே. தமிழ் பாடகர் போலவே தோன்றினாலும் , பல ஹிந்தி பாடல்கள் பாடியுள்ளார். அங்கே இவர் மிகப்ப்ரபலம்.


6.கைலாஷ் கெர் :


கிராமிய பாடல்களா? உற்சாகமான பாடல்களா? கொஞ்சம் குத்துடன் குரலை ஏற்றி இறக்கி பாட வேண்டுமா? கூப்பிடு கைலாஷ் கெரை என்பது தான் இப்பொழுது தமிழ் சினிமாவின் டிரென்ட். அவருக்கு சாதரணமாகவே ஷ வராது இது தமிழிற்கும் பொருந்துகிறது.

பீமாவின் ரங்கு ரங்கம்மா , அபியும் நானுமில் " ஒரே ஒரு ஊரிலே " , லீயில் " யாரு யாரு " போன்ற பாடல்களுக்கு சொந்தக்காரர். இவர் அறிமுகம் ஆனது மஜா படத்தில் " போதுமடா சாமி" என்ற பாடலில்.

சலாம் எ இஷ்கு திரைப்படத்தில் " யா ரப்பா " பாடலை கேட்டு பாருங்கள் , அல்லது " தேரி தீவாணி " என்று இணையத்தில் தேடி பாருங்கள் ! கைலாஷ் ஸுபி பாடகர்களில் மிக முக்கியமானவர்.


7.ரூப் குமார் :


வாமணன் படத்தில் " ஒரு தேவதை " பாடல் கேட்டேர்களா? இல்லையெனில் முதலில் போய் கேளுங்கள் , ரூப் பின்னியிருக்கிறார். இவர் மின்னலே படத்தில் " வெண்மதி வெண்மதியே " கூட பாடி இருக்கிறாராம். இன்னும் நிறைய பாடல்கள் பாடலாம் மயக்கும் குரல் .


இது போக விஜய் பிரகாஷ் , குணால் காந்ஜாவாலா , ஷான் , ஹிமேஷ் போன்றவர்களும் தமிழில் பாடி இருக்கிறார்கள். பிற மொழி பாடகர்கள் மொழியை சிதைக்காமல் பாடினால் கண்டிப்பாக ரசிக்கலாம். சிதைத்தும் ரசித்து கொண்டு தானே இருக்கிறோம்?

29 comments:

Shiva Balasubramanian said...

Nice blog Prakash, makes a good collection of songs. Just one note - Sonu Nigam has sung a very nice song - "Poove punnagai kaatu.." from Paarthen Rasithen.

Prakash said...

Thanks Shiva :) . Poove punnagai kaatu is by sonu ah? Great. I gave this link to Sanghu ( sathish shankar) , informations are streaming in about singers and their various songs.Apparently sonu has also sung " poo poothathu" from mumbai express along with Shaan

cdk said...

Teri Deewani is one awesome number by him.

And many facts were very new to me like Sonu Nigam singing in Tamil.

Awesome writing Prakasha. Nice to see that your blog is extremely diverse and has good variety. Keep going.

Prakash said...

Thanks a lot thalaiva. Teri dwwani is really out of this world. :)

Prasanna Rajan said...

நாங்களல்லாம் ஏதோ சும்மா உதார் வுடறதுக்காக Post modernism, Existentialismனு பேசிட்டு திரியுறோம். புதுசா ப்ரகாஷிசம்னு எல்லாம் கண்டு புடிக்கிறீங்கோ. என்னமோ போங்க சார். எம்.ஏ,எம்.ஏ பிளாஸஃபி... பிளாஸஃபி...

Prakash said...

உம்மை ஒரு பின்னூட்டம் போட வைக்க face book இல் பல முறை கெஞ்ச வேண்டியிருக்கு :D . என் சீரியஸ் பதிவுகள் நகைச்சுவை ஆக்கபடுவதால் இனி நகைச்சுவை கோதாவில் குதிக்கலாம் என இருக்கிறேன்

Prasanna Rajan said...

அட விடுங்க பாஸ்... பிரபல பதிவர் ஆகுறதுக்கு முன்னாடி பின்னூட்டம் வர வைக்குறதுக்கு இது மாதிரி ப்ரம்ம ப்ரயத்தனம் பண்ணிதான் ஆகனும்...

Prakash said...

அவ்வ்வ்வ்வ்வ்வ் :D

Prasanna Rajan said...

சோனு நிகம் ‘மும்பை எக்ஸ்ப்ரஸ்’ படத்திலும் ஒரு பாடல் பாடி இருக்கிறார்...

Prakash said...
This comment has been removed by the author.
Prakash said...

ஆமாம் பிரசன்னா , அதை பின்னூட்டத்தில் போட்டு விட்டேன் பாருங்கள். இது போக கைலாஷ் கெர் குசேலனிலும் வெயிலிலும் , திண்டுக்கல் சாரதி படத்திலும் பாடியுள்ளார்.

தாம் தூமில் அவர் பாடிய உய்யாலாலோ படத்திலேயே இடம் பெறவில்லை

Prasanna Rajan said...

உதித் நாரா(ச)யணன் என்னைக்கு ‘ஏதோ சவுக்கியம் பருவாயில்லை’னு பாடுனதிலிருந்தே அந்த ஆளு பாடுன பாட்டெல்லாம் கேக்குறேதே இல்லை. ஹிந்தி மட்டும் தான் கேக்குறது...

Prakash said...

அனைவரும் சொல்லும் காரணம் தான். ஆனால் மீண்டும் மீண்டும் உதித்தை கூப்பிடும் மர்மம் என்னவோ? வா செல்லம் போன்ற பாடல்களை வேற யார் பாடினாலும் கேட்க இவ்வளவு நன்றாக இருந்திருக்குமா என்பது சந்தேகமே.


இது போக எல்லா பேரரசு படங்களிலும் உதித் பாடல் உண்டு " அடையே கல்ல சறுக்கி " ( அடியே கள்ள சிறுக்கி ) போன்ற காமெடி பாடல்களும் உண்டு.

Vina Sana said...

http://www.youtube.com/watch?v=YxzljfDm7GY&feature=PlayList&p=06C492301A3A00C4&playnext=1&playnext_from=PL&index=19

சோனு கன்னடத்தில் கூட நிறைய பாப்புலர் பாடல்கள் பாடியிருக்காப்ப்ல, மொழியைக் கொல்லாமல், சுத்தமாக :)

Vina Sana said...

BTW, you write a lot of good stuff lad! Impressive.

Prakash said...

நன்றி வீணு. சோனுவால் மட்டும் எப்படி இவ்வளவு தெளிவாக உச்சரித்து இவ்வளவு ஸ்வீட்டாக பாட முடிகிறது

Prakash said...

Thanks a lot veenu :)

Unknown said...

ரொமப நல்ல பதிவு சார். வாழ்த்துக்கள்.

இப்போதைய ரசிகர்கள்உங்களை மாதிரி பாட்டை ரசிப்பதுடன் பெயர் தெரிந்து
வைத்திருப்பார்களா என்று தெரியவில்லை.

Prakash said...

நன்றி ரவி சார்.சில நண்பர்களுக்கு பாடகர்களை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு ,பலருக்கு இருப்பதில்லை.:)

Vina Sana said...

http://www.youtube.com/watch?v=-vgVYQxyKxQ
சோனு நிகம் பாடிய இன்னொரு கன்னடப் பாடல், செம மெலொடி. வார்த்தை புரியலைன்னாலும் இசை + சோனு நிகத்தின் க்காக கேக்கலாம்.


http://www.youtube.com/watch?v=e7x2IFJ9-oU&feature=related
இதுவும் இன்னொரு பாப்புலர் மெலோடி, சோனு பாடியது. விஷுவல் எபெக்ட்ஸ் பாரு இந்த பாட்டுல, அருமை.

Vina Sana said...

காசுக்காக கத்திட்டு போகாம சோனு மாதிரி கேகே(மல்லு) மாதிரி மொழியோட ஆழம் வார்த்தைகள் வெளிப்படுத்தும் உணர்வுகள் எல்லாம் தெளிவா புரிஞ்சுகிட்டு பாடினா கேக்கலாம் கேக்கலாம் கேட்டுகிட்டே இருக்கலாம்

எஸ்பிபி - தெலுங்கு
ஜானகி - தெலுங்கு
யேசுதாஸ் - மல்லு
சித்ரா - மல்லு
மலேசியா - மல்லு
மனோ - தெலுங்கு
ஷைலஜா - தெலுங்கு
சுஜாதா - மல்லு

இப்படியாக, சென்ற தலைமுறைத் தமிழ்ப் பின்னனி பாடகர்கள் யாருமே ஏ! தமிழர்கள் அல்லர்.
இது எப்டி இருக்கு :) :)

Prakash said...

வீணு நீங்கள் சொன்னவர்கள் பலரும் ஓரளவு தமிழும் பேச தெரிந்தவர்கள் , இங்கேயே கொஞ்ச காலம் வாழ்ந்தவர்கள். ஆனால் , உதித் போன்றவர்கள் அப்படியில்லை. அவர்களுடைய ஹிந்தி பாடல்கள் அபாரமாக இருக்கும். வார்த்தைகளை மட்டும் கொல்லா விட்டால் இவர்கள் கண்டிப்பாக தமிழ் திரை இசையை ஆக்கரமித்திருப்பார்கள்.

நான் ஒரு சோனு பையித்தியம் , கண்டிப்பாக பாடல்களை கேட்கிறேன். :)

Prakash said...

அப்பறம் கேகே பாடிய மலையாள பாடல்களை விட ஹிந்தி பாடல்கள் அதிகம். சாகலேட் மில்க் ஷேக் குடித்தது போல் இருக்கும் அவர் பாடல்களை கேட்டால். க்யா முஜே ப்யார் ஹை ஒரு சிறந்த உதாரணம். :)

Vina Sana said...

இல்லைடா கண்ணு SPB, Janaki, etc எல்லாம் சும்மா ஒரு உல்லல்லாகாட்டி உதாரனம்.
These are set of geniuses. வட இந்தியப் பாடகர்கள் தென்னிந்திய மொழிகளை பிக்கப் செய்வது கடினமான காரியம், சைனாக்காரன இங்கீலீஸ் பேச சொன்னா மாதிரி ஆயிடும். அவங்களுக்கு x வராது சிக்ஸ்டி சிக்ஸ்னு சொல்ல சொன்னா 'சிக்டி சிக்'ம்பாய்ங்க. அது மாதிரி ஒரு மொழியயே பேசிப் பேசி பழகியவர்களுக்கு - ஒரு certain pattern வருவது ரொம்ப கடினம், people like Sonu are exceptional.

தமிழனுக்கு இந்தி சுலபம் ஆனா vice versa வொர்க் அவுட் ஆவாது. இது எப்படின்னா தமிழ் வார்த்தைகள் பேச நம்ம நாக்கு 360 டிகிரி சுழன்று இருக்கும். ஹிந்திக்காரனுக்கு may be 180 degreesலயே அவனுடைய entire vocabularyம் முடிஞ்சு போயிருக்கும். But with a sincere effort, these guys can do more justice because their voices are awesome, we don't want to miss out hearning them singing more songs in tamil.

அட அட அட என்னமா யோசிக்கிறேன். வீனா சானா எங்கேயோ இருக்க வேண்டியவன்டா நீ :D

Prakash said...

அண்ணேன் முதல் முறை ஒரு குவார்டர் செஞ்சுரி போட்டேன் அண்ணேன் :P Dan q

Vina Sana said...

ஏ இங்க பாரு இங்க பாரு இங்க பாரு ... நானும் பெரிய பிளாக்கர்தேன், நான் எழுதினதுக்கும் 25 responses வந்து இருக்கு ... :)


Irukattum irukkattum :)

Prakash said...

நானும் ரவுடி ரானும் ரவுடி :D

Tamil astrology said...

உங்கள் தகவல் அனைத்தும் அருமை , உங்கள் blog ஐ bookbark செய்துள்ளேன்
தீபாவளி வாழ்த்துக்கள்
நன்றி

Prakash said...

Tamil astrology , நன்றி :)