Wednesday, June 24, 2009

வெகு நாள் ஆசை


எல்லா இரவுகளும் போல அந்த இரவு இல்லை. குளிர் ஆள் மனதில் கூடுதலான பயத்தை உண்டாகி இருந்தது. நெஞ்சுக்குள் யாரோ கத்தியை இறக்குவது போல் குளிர் என்மீது பாய்ந்து கொண்டிருந்தது. இருட்டு முழுவதுமாக பரவியிருந்தது.


வெளியே எட்டி வானத்தை பார்த்தேன் , அடை மழை. மழையை மிஞ்சும் அளவு கதறி அழலாம் போல் இருந்தது. அதற்கும் தெம்பற்று மனம் இறக்கை ஒடிக்கப்பட்ட பறவை போல் முடங்கி கிடந்தது. தனிமை , நானே தேடிக்கொண்டது இல்லை. சபிக்கப்பட்ட தனிமை. மரணத்தை தீண்ட மனம் எவ்வளவு எத்தனித்தாலும் உடலளவில் தைரியம் இல்லை. எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு வீறு கொண்டு எழ நினைத்தாலும் கண்ணீர் துளியில் ஒடுங்கிப்போகிறேன். எனது வண்டி நேராக நான் பள்ளிபருவத்தில் படித்த இடத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தது மறுநாள் மதியத்தில்.





மாலதி , நான் உனக்கு என்ன குறை வைத்தேன்.இந்த கேள்வியை நான் அவளிடம் கேட்டிருந்தால் அவள் கூறும் பதிலின் ரணத்தை விவரிக்க இயலாது. படிப்பு மட்டுமே குறியாக இருந்தது கல்லூரியில் எனக்கு , இரண்டாவாதாக வந்தேன் கல்லூரியில்.உடன் வேலை , எதிர்பாரா சம்பளம். எல்லோர் போலும் நான் வீணாக குடி கும்மாளம் என்று காசை சீரழிக்கவில்லை , மாறாக சேர்த்தேன். சென்னையில் சொந்த வீடு பன்னிரண்டு லட்ச ருபாய் கொடுத்து வாங்கும் அளவிற்கு , அக்கா கல்யாணத்தை தனி ஆளாக தடபுடலாக நடத்தி காட்டும் அளவிற்கு சேர்த்தேன் . அடுத்தது எனக்கு ! வருபவளை ராணி போல் வைத்திருக்க வேண்டும் , தேடி தேடி முழுவதும் இயந்தரமயமாக்கப்பட்ட வாஷிங் மெஷீன் வாங்கினேன் , சோபா , இத்யாதி , இத்யாதி.

மாலதி நான் படித்த அதே படிப்பை படித்திருந்தாள் . பெண் பார்க்கும் போதே மனம் விட்டு பேசினோம். ஆசையாக நடந்த கல்யாணம். தலையில் வைத்து கொண்டாடினேன், மனசெல்லாம் மாலதி.அவளுக்கும் சந்தோஷத்திற்கு குறை இல்லை. அவ்வபொழுது உடலுறவில் நான் சோர்வடையும் பொழுது அவள் எரிச்சல் பட்டுக்கொள்வதை நான் பெரிதாக எடுக்க வில்லை. தனிமையில் மருத்தவரிடம் போனபொழுது எனக்கு ஒரு குறையும் இல்லை என்றார்.

"என்னன்னா இந்தாண்ட வந்திருக்க , எத்தினி நாள் ஆச்சு ? "நான் பன்னிரண்டாம் படிக்கும்பொழுது மெக்கானிக் கடையில் வேலைபார்த்த காளி இப்பொழுது கடை முதலாளி.

"நல்லா தாண்டா இருக்கேன். ராஜன் எப்டி இருக்கான்? ."

"இருக்கான் அவனும். என்ன இந்தாண்ட? ." வண்டியை பார்த்துக்கொண்டே கேட்டான் .

" ஒண்ணுமில்ல , மூர்த்தி அண்ணன் வீடு எங்க இருக்கு? வினோத் அடிக்கடி போவானே. "குரல் கம்மிப்போய் சொன்னேன்


"இன்னானா உனக்கு பழக்கம் இல்லையே? கண்ணாலம் வேற ஆயிடுச்சுனாங்க பசங்க . "


வூடு எங்க டா ? சிரித்துக்கொண்டே கேட்டேன்


" டேய் சங்கரு , அண்ணன மூர்த்தி அண்ணன் வூட்டாண்ட இட்டுனு போ. "


இருவருமே சிரித்துக்கொண்டோம். காளிக்கு தெரியும் நான் போதைப்பொருள்களை தொட்டதே இல்லை. வினோத் பள்ளிக்கே கொண்டு வருவான். காளி கடையில் வைத்து பல முறை அடித்திருக்கிறான் . மூர்த்தி வீட்டிற்கு போவதற்கு நான் புதிதாக வண்டி ஓட்ட கற்று கொள்ள வேண்டும் போல இருந்தது.


இந்த முறை அவள் என் முகத்திலேயே அறைந்தாள். ச்சீ என்று சொல்லிவிட்டு திரும்பி படுத்தாள். இது போல் தினமும் , எனக்கு ரண வேதனையாக இருந்தது , எதிர்ப்பார்ப்புகள் அதிகம் அவளுக்கு. ஆனால் அவள் ஏன் மாற வேண்டும்? யாருடனோ இரவு பன்னிரண்டு மணிக்கு தொலைபேசியில் பேசுகிறாள்? சிரிக்கிறாள் , சிணுங்குகிறாள். நான் வந்தால் துண்டித்துவிடுகிறாள் , இணைப்பை. மறுநாள் அவள் சொன்னன வார்த்தை தீயாக சுட்டது. " என்னுனுச்" என்றாள் , சத் என்று யாரோ கீறியது போல் இருந்தது. இதுபோன்ற சமயங்களில் அவளிடம் பேச முடியாது. அது சரி , எப்பொழுது தான் முகம் கொடுத்து பேசுகிறாள் ? . அன்றிரவு பெப்சி டின்னை உடைத்தேன் , பொங்கி வருவதை வெறுப்புடன் பார்த்துக்கொண்டே மீண்டும் தனிமையில்.



இதுக்குமேல வண்டி போவாதுனா என்றான் அந்த சின்னபய்யன்.

"எந்தாண்டடா போனும்? "

" இன்னும் ரெண்டு சந்திருக்கு , நானே இட்டுனு போறேன் , இல்லேனா காளினா திட்டும் "


மூர்த்தி வீட்டை ஒட்டி நிறைய குடிசை இருந்தது. அவன் பார்க்க நகைக்கடை பொம்மை போல் இருந்தான். உள்ளே போனேன் , போய்க்கொண்டே இருந்தேன். பல வகையான போதை , கல்லூரி மாணவர்கள் , பெண்கள் உட்பட. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாதாம். வாடிக்கையாளர் திருப்தி தான் முக்கியம் என்றான். பாம்பு கடி போதை கூட இருந்தது.சிறுவன் கழண்டு கொண்டான்.


" இன்னாப்பா வேணும் உனக்கு? " என்றான் மூர்த்தி சன்னமாக.


" ஹெராயின் " என்றேன்.


சிரித்துக்கொண்டே அடித்து பழக்கம் இருக்கா என்றான் , இல்லை என்று தலை ஆட்டினேன்.

அன்றிரவு நான் குளிரின் நடுக்கத்தில்மீண்டும் அந்த கடிதத்தை வாசித்து கொண்டிருந்தேன். என்னை போல் வாழ்க்கையை வீணாக்கும் பிறவியுடன் மாலதி வாழ விரும்பவில்லையாம் , கல்லூரியில் உடன் படித்தவன். நியூசீலாந்தில் இவளை வைத்து வாழ அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டானாம் , போகிறேன் என்று எழுதி விட்டு கிளம்பி விட்டாள் . ஏற்பாடுகளை அவன் அவனுடைய ஆண்குறியில் தான் செய்யவேண்டும் நியூசீலந்தில் அல்ல என்று நினைத்துக்கொண்டேன். அவள் கொடுத்துவிட்டபோன தாலி என் வெகுநாள் ஆசையின் சாட்சியமாக நின்றிருக்க மீண்டும் குளிர் ஆள் மனதில் கூடுதலான பயத்தை உண்டாகி கொண்டிருந்தது


ஹெராயின் முதலில் பௌடர் போல் இருக்கிறது. அதை அவன் அளந்து தான் கொதிக்கும் நீரில் போடுகிறான் , என்னை அந்த குழாயின் முனையை பற்றிக்கொள்ள சொன்னான் , புகை வந்தது.


" இழுங்க நல்லா " என்றான். பயத்தை மறந்து இழுத்தேன் , தலை இரண்டாக சுற்றியது. ஒரு சின்ன நாற்காலியில் உக்காந்திருந்தேன் , சிரித்துக்கொண்டே கீழே விழுந்தேன். கொஞ்சம் உணர்வற்று ஒரு அரைமணி நேரம் இருந்திருப்பேன். அடுத்த கேள்வி மூர்த்தியிடம் கேட்டேன்.


"பொண்ணு வேணும்னா , வீட்டுக்கு இன்னிக்கு ராத்திரி கூட்டினு போனும் "

"எப்போ வுடுவ ? மொத்தமா ஆறாயிரம் செலவாகும். சரக்குக்கும் சேர்த்துதான் சொல்றேன்"


"பிரச்சனை இல்லனா. "


"சரி அட்ரஸ் குடுத்துட்டு போ , மாரிதான் கொண்டாந்து விடுவான் பொண்ண"


"அண்ணா இருக்கறது பிளாட்டுனா , பிரச்சன ஆயுடாதே? "


சிரித்தான். " அது மாரி பொண்டாட்டி தான் பா. ஒன்னியும் கவலைப்படாத , வுட்டுட்டு கிளம்பினே இருப்பான் . நீ காத்தால டாக்சிக்கு கூட துட்டு தர வோணாம் "


சரினா என்று மொத்த ஆறாயிரமும் கொடுத்து விட்டு கிளம்பினேன்.

மாரி சொன்ன நேரத்துக்கு முன்னையே விட்டுவிட்டான் அவன் பொண்டாட்டியை . புருஷனே புரவலராக அமைய பலர் விரும்புவதில்லை , சிலருக்கு கட்டாயம். சிலருக்கு வேட்கை!


முழு பலத்துடன் அவள் உடலை புணர்ந்தேன். அவள் வாயில் வந்த கெட்ட வார்த்தைகளை கூட பொருட்படுத்தாமல் . சிறிது நேரம் கழித்து உணர்வற்று படுத்திருந்தாள் ,


வெகு நாள் ஆசை அவள் கழுத்தில் இருக்கும் தாலி அறுந்து ரத்தம் என் திறந்த மார்பை தொட்டது.குளிரின் பிடியில் ஜென்னலை வெறித்து பார்த்துகொண்டிருக்கிறேன் .

11 comments:

Prasanna Rajan said...

மன்னிக்கவும் ப்ரகாஷ். நல்ல சீராக ஆரம்பிக்கப் பட்டு, நிமிர வைத்த ஆரம்பம் கதையின் ஓட்டத்தில் வீணடிக்கப் பட்டிருப்பதாக உணருகிறேன்.ஒரு வேளை நான் கதையை புரிந்து கொள்ளவில்லையோ என்னவோ, முதல் கதை இந்தக் கதையை விட சிறந்தது என நினைக்கிறேன்...

Prakash said...

கருத்திற்கு நன்றி பிரசன்னா. ஒரு சிறிய குழப்பாமான அம்சம் இருக்கிறதே ஒழிய கதை அரதப்பழசு தான்

பதி said...

நல்ல நடை.. ஆனால், கதையின் முடிவு தான் குழப்பமா இருக்கு.... இல்லை, எனக்கு புரியலையான்னு தெரியலை....

Prakash said...

ஆஹா புரியாத மாதிரி இருக்கிறதா ? . என் பங்கிற்கான விளக்கத்தை வைக்கிறேன் . இரண்டாம் பத்தியில் வரும் இரவும் , அடுத்து வரும் பகலும் மாறி மாறி சொல்லபட்டிருக்கிறது.


//அன்றிரவு நான் குளிரின் நடுக்கத்தில்மீண்டும் அந்த கடிதத்தை வாசித்து கொண்டிருந்தேன். என்னை போல் வாழ்க்கையை வீணாக்கும் பிறவியுடன் மாலதி வாழ விரும்பவில்லையாம் , கல்லூரியில் உடன் படித்தவன். நியூசீலாந்தில் இவளை வைத்து வாழ அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டானாம் , போகிறேன் என்று எழுதி விட்டு கிளம்பி விட்டாள் . ஏற்பாடுகளை அவன் அவனுடைய ஆண்குறியில் தான் செய்யவேண்டும் நியூசீலந்தில் அல்ல என்று நினைத்துக்கொண்டேன். அவள் கொடுத்துவிட்டபோன தாலி என் வெகுநாள் ஆசையின் சாட்சியமாக நின்றிருக்க மீண்டும் குளிர் ஆள் மனதில் கூடுதலான பயத்தை உண்டாகி கொண்டிருந்தது
//

ஆனால் இதையும் நீங்கள் அதே இரவாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முடிவை உங்கள் அனுமானத்திர்க்கே விடுகிறேன்



பி.கு : அண்ணே இன்விசிபில் தூக்கி விடுங்க , விசா பத்தி ஏதும் கேக்கமாட்டேன் :D :D

"உழவன்" "Uzhavan" said...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

Prakash said...

என்ன பாஸ் சொல்றீங்க பரிசா ? சுட்டி இருந்தால் தாருங்களேன்

Prakash said...

மிக்க நன்றி உழவன் . பரிசை நீங்கள் சொல்லி தான் நான் தெரிந்து கொண்டேன் :)

சாணக்கியன் said...

முதல் இரண்டு இடங்களைப் பெற்ற கதைகளை விட ஆறுதல் பரிசு பெற்ற கதைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன...

/* என்னுனுச்" என்றாள் */

இது புரியலையே?

Prakash said...

மிக்க நன்றி சாணக்கியன் . அது சரியாக சொன்னால் eunuch என்ற ஆங்கில சொல்லை , கர்ண கொடூரமாக தமிழில் அடித்திருக்கிறேன். அந்த விஷயங்களுக்கு " லாயக்கு இல்லை" என்பதை எனக்கு கோபத்துடன் ஒரே சொல்லாக எப்படி வெளிப்படத்துவது என தெரியவில்லை :)

சாணக்கியன் said...

பிரகாஷ், ”‘சீ! பொட்டை’ என்று கத்தினாள்” அப்படின்னு எழுதியிருந்த அந்த context-க்கு தேவையான அர்தத்தை கொடுத்திருக்குமோ?

‘லாயக்கில்லாத நாயே’-கூட போதும்னு நினைக்கிறேன்.

Prakash said...

தோன்றவில்லை சாணக்கியன் :( வாழ்த்துகளுக்கு நன்றி :)