Wednesday, May 20, 2009

The 3 mistakes of my life - புத்தக விமர்சனம்


கோவாவில் மடுகானில் ,ரயில் வருவதற்கு சிறிது நேரம் முன் நானும் கிருஷ்ணாவும் புத்தக வேட்டையில் இறங்கினோம். என் கண்ணுக்கு இந்த புத்தகம் பட்டது ஏற்கனவே அவினாஷ் இதை படிக்க சொல்லியிருந்தான். விலை 95 தான் வாங்கி வைத்து அந்த மொக்கை ரயிலில் ஏறினேன். அங்கே உட்காரவே இடமில்லை , ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்தபோதிலும்.


மங்களூரில் நான்கு மணி நேர காத்திருப்பு , புத்தகத்தை திறந்தேன். அனைவரும் அசந்து தூங்க , ராப்பாடியாக கிருக்குபயல் போல் படித்த என் தலையில் பைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பு விழுந்தது.
மதம் , அரசியல் , கிரிக்கட் கொஞ்சம் காதல் + அருமையான கில்மா ( மஞ்சு பாதி புத்தகத்தை படித்தது விட்டு " மச்சி செம மூட் டா " என்றான் ) கலந்தால் இந்த புத்தகம். மைய கருத்துக்கு மெதுவாக வரலாம் , ஆனால் புத்தகத்தில் சொல்லிக்கொள்ளும் படி பெரிய உள்ளார்ந்த கருத்து ஒன்றுமில்லை , ஆனால் படிக்க படிக்க ஹெராயின் அடித்தாற்போல் ஒரு போதை. பக்கத்துக்கு பக்கம் சுவாரசியம். ஒரு மசாலா பாலிவூட் படத்திற்கும் இப்புதகத்திற்க்கும் எள்ளளவு வேறுபாடு இல்லை.


தனது வாசகர் ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக மின்னஞ்சல் அனுப்ப சேட்டன் அவர் கதையை பின்பு புத்தகமாக எழுதி அவரையும் காப்பாற்றுவதாக கதை. இந்த கற்பனையை உண்மை போல் எழுவது எல்லாம் நாங்க " ஜே ஜே சில குறிப்புகளிலேயே பார்த்தாகி விட்டது. ஆக சேட்டனை " தண்ணிய குடி தண்ணிய குடி " என்று தான் சொல்ல தோன்றியது .


மூன்று நபர்கள் மன்னிக்கவும் மூன்று நண்பர்கள் , ஓமி-இஷ்-கோவிந்து இவர்களை சுற்றி வருவது தான் புத்தகம்.


ஓமி- கோவிலில் வேலைபார்ப்பவன் , உடலை கட்டுமஸ்தாக வைத்து அவன் மாமா பிட்டூவின் பேச்சை கேட்டு இந்துத்வாவில் ஈர்க்கப்பட்டவன் .


இஷ் - தனது இடத்தில் மிக சிறந்த கிரிகட் ஆட்டக்காரன் , கொஞ்சம் முரடன். அதீத தேசப்பற்று கொண்டவன். பட்டாளம் புடிக்காமல் ஓடி வந்து ஊட்டில் திட்டு வாங்குபவன்.


கோவிந்து - கதை இவன் பார்வையில் இருந்து தான் சொல்லப்படுகிறது. மனித உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட தொழிலதிபராக துடிக்கும் ஒரு இளைஞன். கடவுள் நம்பிக்கை கம்மி. ( Agnostic)


இஷ் உடன் சேர்ந்து கோவிந்து ஒரு கிரிக்கட் சாதனங்கள் விற்கும் கடை ஆரம்பிக்கிறான். வருபவர்கள் இஷ் இடம் சந்தேகங்களை கேட்டு பொருட்களை வாங்குகிறார்கள் , வர்த்தகம் லாபத்தில் ஓட ஆரம்பிக்கிறது. கோவில் வளாகத்தில் ஒமியின் மாமாவின் உதவியோடு இயங்குகிறது கடை. அப்பொழுது கோவிந்து கணக்கு பாடம் எடுக்க , இஷ் கிரிக்கட் கோச்சிங்கும் ஓமி உடல் ஆரோக்கியமும் மாநாக்களுக்கு 250 ருபாய் தொகையில் கற்று தருகிறார்கள். மாமாவின் ஹிந்துத்வா பேச்சு கூட்டங்களுக்கு ஓமி ஆர்வமுடன் செல்ல , வேற வழியே என்று மற்ற இருவரும் செல்கிறார்கள். அலி என்ற இயற்கையாகவே மிக அருமையான திறமையுள்ள ஒரு சிறுவன் இஷாந்திர்க்கு சீடனாக கிடைக்கிறான். அவனை ஆஸ்திரேலியா சென்று பயிற்சி கொடுக்கும் அளவிற்கு இஷாந்த் முயற்சி எடுக்கிறான். இஷாந்தின் தங்கை வித்யாவிற்கு கணக்கு பாடம் எடுக்க கோவிந்திடம் சொல்ல கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் காதல் வயப்படுகிறார்கள். கடைசியில் பிட்டூ மாமாவின் மகன் கோத்ரா ரயில் எரிப்பில் கொல்லப்பட , அலியை தேடி கொண்டு பிட்டூ மாமா ஒரு மத வெறி கும்பலோடு இம்மூவரிடதிலும் வருகிறார். ஓமி தன உயிரை நீத்து ஒரு இஸ்லாமிய சிறுவனின் உயிரை காப்பாற்றுகிறான். பின்பு வித்யாவின் காதலை இஷ் ஏற்று கொண்டானா , இஷ்-கோவிந்து இணைந்தார்களா என்பது தான் கதை .



மூன்று முக்கிய தவறுகள் என்னவென்றால் , முதலில் கிடைத்த அனைத்து லாபங்களை வைத்து கோவிந்து ஒரு இடம் வாங்குகிறான் ஒரு ஷாப்பிங் மாலில் , ஆனால் அது பூகம்பத்தில் தரைமட்டமாகிறது.

கணக்கு வாத்தியாக இருந்து கொண்டே வித்யாவை காதலிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் , ஒன்பது முறை உடலுறவும் வைத்து கொள்கிறான்.

உண்மையில் பெரிய தவறு , கடைசி நேரத்தில் பிட்டூ மாமாவின் ஆள் ஒருவன் அலியை வெட்டவர கொஞ்சம் காலதாமதமாக அவனை தூக்குகிறான் கோவிந்து. அந்த ஒரு நிமிட சுயநல சிந்தனையால் அலியின் கையில் பலத்த அடிபடுகிறது.

இதில் சேட்டன் நமக்கு பிடித்த பல அம்சங்களை கவர் செய்கிறார். யார் போட்டாலும் அலி சிக்சராக அடிப்பது. லக்ஸ்மனின் 287 ரன்கள் எடுக்கும் ஆட்டத்திற்கு பிறகு வ்யாபாரம் சூடு பிடிப்பது. அழகாக கோவிந்து காதல் வயப்படுவது , வித்யா முதன்முறையாக அவனிடம் இதழ் பதிப்பது. ( We kiss each other until one of us struggle for our breath , we kiss when we feel like kissing and study when we feel guilty) . பிறகு அவளது பிறந்தநாள் சமயத்தில் இருவரும் மொட்டைமாடியில் கொள்ளும் உடலுறவு என்று சூர கில்மா. ஒக்கா மக்காவென்று எழுதியிருக்கிறார். மத அரசியலை உள்ளே புகுத்தும்பொழுது பல இடத்தியல் லாஜிக் சறுக்கல்கள். பேலன்ஸ் செய்வதாக நினைத்து கொண்டு கோத்ராவையும் , அதான் பிறகு நடந்த வன்முறைகளையும் ஒரு சேர கதையில் புகுத்துகிறார். எது எப்படியோ , பிட்டூ மாமாவின் வெறியை கண்முன்னே நிறுத்துவதில் சேட்டன் பிரமாதம். கடைசியில் சுபம் போட்டு முடிக்காத குறை தான்.

படமாக எடுத்தால் பிச்சுகிட்டு ஓடும் ! தெரிந்து கொள்ள ஒன்றும் இல்லை , ஆனாலும் இந்த புத்தகம் கிக் தான்.



7 comments:

Prasanna Rajan said...

Five point Someone கூட அருமையான மசாலா நாவல் தான். நானும் என் நன்பண் கிஷோரும் சண்டை போட்டு படித்தோம்.‘தில் சாத்தா ஹை’ ஸ்டைலில் நாவல் செல்லும். இந்த புத்தகங்களை படமாக எடுக்க வேண்டும் என்றால் நாவலின் ஆசிரியரே திரைக்கதையையும் எழுத வேண்டும். இல்லையென்றால் ‘ஆனந்த தாண்டவம்’ கதை தான்.

Prakash said...

One night at a call centre திரைப்படமாக வருகிறது, " ஹலோ " என்ற தலைப்பில். In bollywood , only sex and sharukh sells The film might not have sharukh though!

techieV2 said...

// இல்லையென்றால் ‘ஆனந்த தாண்டவம்’ கதை தான். //
ரொம்ப சரி.. பேசாமல் படத்திற்கு ஆ(வும்)-நொந்த-தாண்டவம் என்று பெயரிட்டிருக்கலாம்..

திரைப்படம் இலாபத்தை ஈட்டவேண்டும் என்றால் இன்றைய நிலையில் சமரசம் செய்து கொண்டு(??) சரசங்களை உள்நுழைக்க வேண்டியுள்ளதே. ஒன்றும் செய்துவிட முடிவதில்லை :P

Prakash said...

இந்த கதையில் சமரசமே தேவைப்பட்டாது , பாட்டுக்கு கூட கேப் விட்டது போல் எனக்கு ஒரு தோற்றம் :D

techieV2 said...

நீவிர் குறிப்பிட்டது ஆனந்த தாண்டவமாயின் எனக்கென்னவோ, எப்பொழுதெல்லாம் தமன்னாவின் 'சதை' தெரிகின்றதோ அப்பொழுதெல்லாம் ஒரு பாடலை போட்டு, சுஜாதா அவர்களின் 'கதை'யில் இருந்த காதலை காமமாக்கிவிட்டனரோ என்றுதான் தோன்றுகிறது ;)

Prakash said...

நான் குறிப்பிடுவது இந்த புத்தகத்தை. " The 3 mistakes of my life" . தமன்னாவின் சதை தெரிகிறது என்ற அத்யாவசிய தகவலை தெரிவித்தற்கு நன்றி :P

techieV2 said...

நினைத்தேன்.. இருப்பினும், தெளிவாக *தெரிகின்றவை* தான் எழுதும் பொழுது முதலில் நினைவுக்கு வருகின்றன. என்ன செய்து தொலைக்க :P