உங்களில் யார் செய்த பாவமோ எனக்கு எழுத நேரம் கிடைத்திருக்கிறது.
வார்சாவில் நிறைய விடுமுறை நாட்கள் உண்டு.அது போக நான் கல்லூரி இருக்கும் திசைக்கு மாற்று திசையில் தான் இந்த ஆறு மாதம் தலையனையை வைத்து படுத்தேன்.மே மாத விடுமுறையில் ( அது என்ன மே மாத விடுமுறை? அதெல்லாம் தெரியாது , விடுமுறை அய்யா) என் வகுப்பில் எட்டு பேர் செக் நாடுக்கு செல்வது என முடிவானது , நான்கு ஆண்கள்.மிச்சம் நான்கு பெண்கள்.விகிதாச்சாரம் தானாக மட்டுமே அமைந்தது!
போகும் பொழுது ஒரு பாதி வித் அவுட்டில் போனோம் , வண்டியில் இருக்க இடம் உண்டு ஆனால் அமர அல்ல.முதலில் பப்பரப்பே என்று உக்காந்தாச்சு. பிறகு டிக்கட் வாங்கிய ஒருவர் மாத்தி ஒருவராக வந்து எழுப்பிவிட ஆரம்பித்தனர்.கடைசியில் இரண்டு இருக்கையில் ஐந்து பேர் சமாளித்து போலந்தில் எல்லை வரை வந்து விட்டோம்.ரயிலில் நகர இடமில்லை.கடைசியில் போலந்து எல்லையில் இருந்து செக் தலைநகர் ப்ராஹாவிர்க்கு வேறு ரயிலில் தாவிக்கொண்டு போனோம்.
உண்மையில் பிராஹா எழில் கொஞ்சும் நகரம்.முதலில் நாங்கள் போனது பிராஹா கோட்டைக்கு , உலகிலேயே மிகப்பெரிய கோட்டையாம்.பசி வயிற்றை கிள்ளியதால் அதை அடுத்த நாளுக்கு வைத்துவிட்டு வந்துவிட்டோம்.மதியம் பழைய நகரம் , புதிய நகரம் என்று அனைத்து இடத்தையும் சுத்தி காட்ட ஒரு கைட் கிடைத்தார் , இலவசமாக! பிரித்தானிய ஆங்கிலம் நுனி நாக்கில் தாண்டவமாடியது.வரலாறு , கலை , இலக்கியம் என அனைத்தையும் பிரித்து மேய்ந்தார்.
அவர் சொன்னதில் இரண்டு முக்கியமாக பட்டது , ஒன்று வென்செலாஸ் சதுரம் இன்னொன்று யூத கல்லறைகள்.வென்செலாஸ் சதுரத்துக்கு ஒரு வரலாறு உண்டு.1969இல் ஜான் பலாக்ஸ் என்னும் மாணவர் நம் முத்துக்குமார் போல் தன்னையே தீக்கு இரையாக்கினாராம்!
1968க்கு பிறகு டூப்செக் செக் குடியரசுத்தலைவராக இருந்த காலம் பிராஹாவின் வசந்தமாம். அவர் குடிமக்களுக்கும் , பத்திரிக்கையாளர்களுக்கு பல சுதந்திரம் அளிக்க ஆரம்பித்தார்.இன்னும் பத்து ஆண்டுகளில் கம்மியூனிச ஆட்சி முறையில் இருந்து விலகி ஒரு முழு ஜனநாயகத்தை நோக்கி நகர்வோம் என்னும் பிரகடனம் வைத்தார்.நாட்டு மக்களிடம் மிக நல்ல வரவேற்பு இருந்தது.சேதி தெரிந்த உடன் சோவியத்திலிருந்து டேங்க்குக்ள் உருள ஆரம்பித்து விட்டதாம்! இதை எதிர்த்து தான் அறவழி போராட்டத்தில் ஜான் பலக்ஸ் மற்றும் ஜான் சஜிக் என்னும் இரண்டு மாணவர்க்ள் தங்களையே சாம்பலாக்கிக்கொண்டனர்.
அதன் பிறகு சார்லஸ் பிரிட்ஜ் மற்றும் பல இடங்களில் நான் தன்னந்தனியாக சுத்தி திறிந்தேன். ஒருவர் வித்தியாசமான வாசிப்பு கருவியில் உலகத்தர இசையை கொடுத்து கொண்டிருந்தார் , மற்றொரு பக்கம் நம்மூர் பொம்மலாட்டம் போல் ஒரு கலை.அதையும் ரசித்து கண்டுகளித்து விட்டு வீடு திரும்பினேன்.அடுத்த நாள் எல்லோரும் கோட்டை போக அடம் பிடித்தார்கள் ,அந்த புன்னியவான் கோட்டையை எஙகயோ உச்சியில கட்டி வெச்சிருக்கான் , எனக்கு ஏறுவதர்க்குள் டவுசர் கழண்டுவிட்டது.நண்பன் ஒருவன் மட்டுமே ஒரு மூச்சில் ஏறினான்.அட என்று அடுத்ததாக நான் ஏறி பக்கத்தில் போனால் கைத்தாங்கலாக் புடியேன் என்றான் , சரி அவனும் தான் எவ்வள்வு நேரம் வலிக்காத மாதிரியே நடிப்பான்.
ஒரு தெரு முழுவதும் ஷாப்பிங்கிற்கென ஒதுக்கியிருந்தார்கள் , செதேன் தொலைந்தேன் என்று வேறு இடம் ஓட ஆரம்பித்தேன்.அங்கே நின்றவர்கள் கடைசியாக கொடுத்த ஆய்வறிக்கைப்படி அங்கே மட்டுமே நான்கு மணி நேரமாம்.முந்தய தினம் யூத கல்லறைகள் பற்றி கேள்விபட்டபடியால் அங்கே போக நினைத்து வழிகண்டுகொண்டு போனேன்.ஒரு சுவர் அது முழுக்க நுனுக்கி நுனுக்கி எழுதபட்ட பெயர்கள் சுவரையே பல நூறு பெயர்கள் மறைத்தன. இது போல் பல சுவர்கள் ,இரண்டு அறை முழுவதும்! அனைத்தும் நாஜிக்க்ள் படுகொலை செய்யபட்ட யூதர்களின் பெயர்கள்.
நாஜி வதைமுகாம்களில் இருந்த குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் காட்சிக்காக வைக்கபட்டிருந்தது.ஒவ்வொன்றிலும் ஒரு வித செய்தி , வெறுமை. பெரும்பாலான குழந்தைகள் மனபிறழ்வு உடையவர்களாம். அங்கே ஒரு குழந்தை ”ஷவர்” காட்சியை ஓவியமாக்கியிருந்தது , அது என்ன என்று "Life is beautiful" படம் பார்த்தவர்களுக்கு தெரியும் .இதயம் கணக்க வெளியேறினேன்.
அடுத்து செஸ்கி குர்ம்யோவ் என்ற சின்ன நகரத்துக்கு பயணமானோம்.அநியாயத்துக்கு அழகு , ட்ரெட்லின்க் என்று ஒரு செக் உணவு வைக உண்டு , ரசித்து அனைவரும் சாப்பிட்டோம்.இது போக எனக்கு கோடுலிச் என்று ஒரு வகை பிரட்டும் மிகவும் பிடித்திருந்தது.நதிக்கரையோரம் அந்த கால செக் உணவு வகைகள் கொடுக்கும் உணவகத்தில் சாப்பிட்டோம்.சைவமே ஆனாலும் மிக வித்தியாசமான ருசி.க்ரும்யோவின் அழகு எளிதில் வார்த்தைகளில் சொல்ல முடியாது ,பல வயதான கொரிய சீன தம்பதிகளை பார்த்தேன்.சில முக்கியமான புத்துகங்கள் வாங்கினேன்.ஃப்ரான்ஸ் கஃப்காவின் சிலையை அங்கே பார்த்தும் அவரை பற்றி ஏற்கனவே கேள்விபட்டிருந்தும் அவர் புத்தகம் எதுவும் வாங்கவில்லை.
வெளியேறிய பொழுது ஜான் சாஜிக்கின் வாசகம் ஒன்றை காண நேர்ந்தது
But I want a lot for you, for everyone, so I have to pay a lot. Do not lose your heart after my sacrifice, tell Jacek to study harder and Marta too. You must never accept injustice, be it in any form, my death will bind you. I am sorry that I will never see you or that, which I loved so much. Please forgive me that I fought with you so much. Do not let them make me a madman.
Say hi to the boys, the river and the forest
8 comments:
அனுபவமெல்லாம் அருமையாக தான் இருந்தது.. ஆனா என்ன ஆச்சு பா உன் கொள்கை முடிவு.. "நெறைய படிக்க இருக்கும் போது எதற்கு எழுத வேண்டும் னு"
கொள்கை முடிவு எல்லாம் இல்லை டா சுரேஷ்.அது ஒரு தனிப்பட்ட கருத்து சார்ந்த முடிவு.மத்தபடி அப்பப்போ எதாவது எழுதலாமேன்னு பார்க்கறேன்.யார் படிக்கறதை பத்தியும் நான் பொதுவா கவலைபடறது இல்லை.மனம் போன போக்கில் வாழ்க்கை :)
மச்சி சூப்பர்!! ஓ.சியில கைடு கெடைச்சாரா? ஆச்சர்யம். அங்கயும் போய் வித்தவுட்டா? என்னமோ போ...
ஆமாம் பிரசன்னா.
கைட் ,அங்கே கலை இலக்கியம் படிக்கும் மாணவர்கள் தன்னார்வத்தில் செய்யும் ஒரு விஷயம் இது.நாம் விருப்பபட்டால் கடைசியில் காசு கொடுக்கலாம் , நாங்கள் கொடுத்தோம்.
வித அவுட் கொஞ்சம் வித்தியாசம் அந்த வண்டியில் போக உரிமை உண்டு உட்கார அல்ல.உட்காருவதர்க்கு கூடுதலாக இருபது யூரோ தர வேண்டுமாம்!
நன்றி!
நல்லா இருக்குது பயண அனுபவம்.
முடிந்தால் சில படங்களையும் இணைக்கலாமே?
1968ல் தீக்குளித்த ஜான் பலக்ஸ் மற்றும் ஜான் சஜிக்ன் நினைவுகள் இன்னமும் மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகின்றதா?
அங்கு மானாடா மசுராட நிகழ்ச்சிகள் எதுவும் வைத்து அவர்களுடைய உணர்வுகளை கலைத் தாகத்தால் மெருகேற்றவில்லையா? என்ன அரசாங்கம் அது?
அங்கே எடுத்து சொல்வதற்க்கான தேவையே இல்லை.வரலாறை அறிந்தே இருக்கிறார்கள்.இருந்தும் அவர்கள் இருவரும் இறந்த பொழுது கூட மிகப்பெரிய அளவுக்கு அங்கேயும் போராட்டம் வரவில்லை.காரணம் பயம்!
கிழக்கு ஐரோப்பிய அனுவம் கண்டிப்பாக பலருக்கு மாற்றுப்பார்வை கொடுக்கும். அதுவும் போலந்தில் நான் பல வயதானவர்களுடன் உரையாடியிருக்கிறேன்.இது போக வெல்வெட் புரட்சியின் போது சுயமாக இயங்கிய சமகால எழுத்தாளர்களிடம் இருந்தும் நாம் அதிகம் வாசிக்கலாம் போல!
ஆனால் அங்கே கூட யாரு ஜான் என்று கேட்கும் துணிச்சல் யாருக்கும் வராது! இங்கே கேட்டாரே ஒருத்தர்~
Your writing style is very good. Keep writing often.
Thanks a lot Manikandan :) Big time compliment.
Post a Comment