Monday, June 1, 2009

விஜயகாந்த் - புத்தக விமர்சனம்


இப்போதைக்கு இருக்குற மொக்கைல இதைத்தான் என்னால் செய்ய இயலும். ஏதாவது புத்தகம் படிப்பது , விமர்சனம் எழுவது.

புத்தகம் வாங்கி வந்தவுடன் அம்மா கேட்ட கேள்வி " ஏண்டா விஜயகாந்திற்கு ஒரு புக் ஆ ? , நீ இதெல்லாம் வாங்கமாட்டயே? "

" ஆமாம். ஆனால் எழுதியவரை எனக்கு தெரியும்.போர் அடிக்காம இருக்கும். "

" என்னவோ பண்ணு"

சரி என்று திட்டு வாங்கி விட்டு படிக்க ஆரம்பித்தேன். 136 பக்கங்கள். பறந்தது நிமிட பிரேக் இல்லை. சிட்டாக பறந்தது புத்தகம். நல்ல போதை. காலையில் தான் தெளிந்தது.போதையிலேயே ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு படுத்தேன்.

ஆரம்பத்தை நான் ஏற்க்கனவே இணையத்தில் படித்துவிட்டதால் சுவாரசியம் இல்லை. அதற்க்கு பிறகு , விஜயகாந்தின் பால்ய மற்றும் இளம் வயதை பற்றி பல சுவைகரமான தகவல்கள். கூடவே "விளாறு" போன்றவைக்கு விளக்கத்தோடு. முழுப்புத்தகம் படிப்பது எதோ படம் பார்ப்பது போல் உள்ளது.படிப்பு வராமல் விஜயகாந்த் தந்தையிடம் அடி வாங்குவது , இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்றது , பிறகு மில்லில் வேலைக்கு சேர்ந்து எதிர்வீட்டு ஜென்னல் சிட்டை நோக்குவது என எண்பதுகளில் வந்த தமிழ் சினிமாவிற்கு தரணி திரைக்கதை எழுதி வேகமூட்டியது போல் ஒரு பீலிங்.

விஜயகாந்த் படிப்படியாக முன்னுக்கு வந்ததை பற்றி லக்கி நன்றாகவே எழுதி இருக்கிறார். பின்னால் நல்ல உழைப்பு இருக்கிறது. குறிப்பாக 92-96 சிறப்பான தொகுப்பு. அவர் பட்ட அவமானகளை அதே சூட்டுடன் படிக்க முடிகிறது. நிற்க.

அறுபத்தி மூன்று ருபாய் கொடுத்திருக்கிறேன். பச்சையாக பல இடங்களில் என்னை கேனயன் என்று நினைத்து வித்திருக்கிறார்கள் .பக்கத்துக்கு பக்கம் அவர் படம் போட்டா என்ன யா ஞ்யாயம் ? . லக்கி செய்த அநியாயம் ஒன்று பக்க எண்107-112. விஜயகாந்த் மாற்று சக்தி என்பதை நிரூபிக்க ஆதி காலத்து திராவிட அரசியல் ( 1957) இல இருந்து இன்ற வரை உண்டான ட்ரெண்டை விளக்குகிறார். தேவையே இல்லாத வேலை. என்ன சமாதானம் சொன்னாலும் ஒப்புக்கொள்ளவே முடியாது. இது பக்கத்தை நிரப்பும் வேலை என்றால் , இதை நான் வாசகர்களுக்கு செய்த பச்சைத்த்ரோகமாக பார்க்கிறேன். இல்லை , இது தேவை என்று அவர் நினைத்து எழுதி இருப்பார் ஆனால் , போனால் போகட்டும். இத்துனூண்டு புக் ல இதெல்லாம் எழுதினா அநியாயம். உங்களுக்கு தமிழக அரசியலில் உள்ள அறிவை சோதிக்காவா நாங்க காசு கொடுத்தோம் ? . மற்றபடி அரசியல் சார்ந்த இடங்களில் எனக்கு நன்றாகவே தெரியும் , லக்கியால் எளிதாக எழுதி விட இயலும் என்று. சமகால அரசியலை பின்தொடரும் எவராலும் தொகுத்து விடக்கூடிய விஷயம் தான் , ஆனால் சுவாரசியமா எழுவது தான் சவால். அடுத்தமுறை கம்மி விலைக்குமட்டுமே சரக்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
( பி.கு : நெறைய சரக்கே அடித்து சலித்துவிட்டதால் , உருப்படியான ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன் )

6 comments:

லக்கிலுக் said...

இப்படி போட்டு கயட்டிட்டீங்களே? :-)

Prakash said...

எதோ பாமரன் மனசில் பட்டதை எழுதுகிறேன். இந்த நுண்ணரசியல் பார்த்து எழுத நமக்கெல்லாம் வராது அங்கிள் :D

Prasanna Rajan said...

ஒரு வேளை பிளாக் நினைப்புள்ள, நிறைய படம் போட்டு எழுதிட்டாரோ என்னமோ!!

Prakash said...

அவர் என்ன நெனைப்புல எழுதினாருன்னு எனக்கு தெரியாது. ஆனா , எத்தனைப்படம். மொத்தம் பதினெட்டு படம் முழுபக்கத்திற்கு போட்டிருக்கிறார். இதுபோக குட்டி குட்டியா நிறைய படம் வேற. ஞாயமா லக்கி ?

Prasanna Rajan said...

அட என்னப்பா பண்றது!! மேட்டர் இல்லைனா படத்தைப் போட்டு நிரப்புறது தானே ஒரு பிளாக்கரோட கடமை. ’படம் பார்த்து கதை படி’ இது தான் ஒரு பிளாக்கரின் ரகசிய்ம். ஐயயோ!! ரகசியத்தை உளறிக் கொட்டிட்டேனே...

Prakash said...

என்னபண்ண , படத்தை போட்டு பிட் ஓட்டுவது தான் அனைவரும் செய்கிறோம். எவன் சுவாரசியமாக செய்கிறானோ , அவன் தான் வித்தை தெரிந்தவன். :)