Wednesday, February 10, 2010

இலங்கையில் சீனாவின் தவறான ஆளுமை


டெலிக்ராபில் வந்த பீட்டர் போஸ்டரின் இந்த கட்டுரையின் தமிழாக்கம்

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசாங்கம் மீண்டுமொருமுறை தனது சகிப்புதனமில்லாத போக்கை காட்டியிருக்கிறது , சரத் பொன்சேகாவின் கைது மூலம். பொன்சேகா தனது ராணுவ ஜெனரல் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு தற்பொழுது நடந்த தேர்தலில் மகிந்தா ராஜபக்சேவிற்கு எதிராக நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது நண்பர் டீன் நில்சன் பொன்சேகாவின் கைதை ஒட்டி நடந்த சம்பவங்களை இங்கே தொகுத்துள்ளார்.பொன்சேகாவை ராணுவ வீரர்கள் விசாரணைக்கு விடாப்பிடியாக இழுத்து சென்றிருக்கின்றனர்.

சமீபத்தில் இலங்கையில் நடந்த மிக மோசமான சம்பவம் இது.கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கை ராஜபக்ஷே ஆட்சியின் கீழ் சர்வாதிகார நாடாக உருமாறி வருவதற்கு இது ஒரு உதாரணம்

அரசாங்கத்துக்கு எதிரான குரல்கள் சமீபகாலமாக அதிகம் ஒடுக்கபட்டு வருகின்றன.இலங்கை, பத்திரிக்கையாளர்கள் இயங்குவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக மாறி வருகின்றது.இதற்க்கு பிரபல பத்திரிக்கையாளர் லசந்தா விக்ரமது ங்கேவின் மரண சாசனமே எடுத்துக்காட்டாகும். அதை படிக்காதவர்கள் உடனடியாக இங்கே படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சரி இது எல்லாவற்றிற்கும் சீனாவிற்கும் என்ன சம்பந்தம்? சீனாவின் மக்கள் ஜனநாயக சர்வாதிகார (!!) அரசு புதிதாக முளைத்திருக்கும் இலங்கையின் "மக்கள் சர்வாதிகார " அரசிற்கு பொருளாதார ரீதியில் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. இது உலகளாவிய ரீதியில் சீனாவின் மோசமான நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது .

பூகோள ரீதியில் இலங்கை விடயம் சிறியது தான் , ஆனால் கிழக்காசியாவில் ஜனநாயக நாடாக இருந்து வந்த இலங்கை இப்பொழுது ஊழல் நிறைந்த எதேச்சிகார சர்வாதிகார நாடாக மாறி வருவது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விடயமாகும் .

பல காலமாக இலங்கையின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாமல் தான் இருந்து வந்தது ( மிக கவனமாக இந்தியாவை சங்கடப்படுத்தாமல் ) ஆனால் 2007 ஆம் ஆண்டு ராஜபக்ஷேவின் பீஜிங் பயணத்தில் இருந்து இது மாறத்தொடங்கியது . அவரின் வருகை பொருளாதார மற்றும் சில ராணுவ ரீதியான உதவியை இலங்கைக்கு சீனா அளிப்பதற்கு வழிவகுத்தது.

இந்த வருகைக்கு பிறகு இரண்டு அரசாங்கங்களும் " தீவிரவாதம் , பிரிவினைவாதம் , பயங்கரவாதம்" ஆகிய மூன்று அழிவு சக்திகளுக்கு எதிராக போராட ஒப்பந்தம் போட்டுக்கொண்டன. இத்தகைய வார்த்தை பிரயோகங்களின் மூலமே ராஜபக்ஷே சமீபத்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக நடத்தி காட்டினார்.

சீனாவின் அரசிற்கு சொந்தமான China Harbour Engineering Company (CHEC) என்னும் கட்டுமான பெருநிறுவனம் ஒன்று தற்ச்சமயம் இலங்கையின் தெற்கு மூலையில் உள்ள ஹம்பண்டோடாவில் புது துறைமுகம் , விமான நிலையம் மற்றும் கொழும்புவுடன் இணைக்கும் ஒரு எக்ஸ்பிரஸ் பாதையையும் கட்டி வருகிறது.

சில ஆப்ரிக்க நாடுகளுடன் செய்வது போல் நேரடியாக ஈடுபடாமல் ஆளுங்கட்சியின் கையை பலப்படுத்துவது மூலம் இதை சீனா செய்துவருகிறது. இங்கே நாம் ஹம்பண்டோட்டா ராஜபக்ஷவின் சொந்த தொகுதி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான கண்டனகள் , இலங்கையின் மீது அழுத்தம் கொடுக்காமல் இருக்க சீனாவின் பணமும் மனிதமற்ற தன்மையும் காரணிகளாக இருக்கின்றன.

இலங்கயின் சமீப போர் குற்றங்களை விசாரிக்க நடந்த ஐநா சபை விவாதத்தில் இலங்கயின் புதிய நண்பரான ரஷ்யா இலங்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டியது.இப்பொழுது இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் அமெரிக்கன் டாலர்களுக்கு ஆயுதம் கொடுப்பது பற்றியான பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது . சீனாவின் கூட்டாளியான ஈரானும் மலிவு விலைக்கு எண்ணெய் மற்றும் சில பொருளாதார உதவிகளைத்தர முன்வந்திருக்கிறது .

பிரிட்டின் இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்தும் பொருளாதார உதவிகளை ரத்து செய்தும் வருகிறது ஆனால் அந்த பணம் சொற்பம் என்பதால் இலங்கை உதறித்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.அமெரிக்கா அடிக்கடி நிலைமை மோசம் என்று மட்டும் கூறிக்கொண்டே இருக்கிறதே ஒழிய அதன் பங்கிற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை.

இந்த வெள்ளியன்று ஐரோப்பிய கூட்டமைப்பு இலங்கையுடனான வர்த்தகத்திற்கு இலங்கயின் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி ரத்து செய்துள்ளது.ஆனால் இதை நடைமுறைபடுத்தும் தாமத்தை சீனாவின் பொருளுதவி ஈடுகட்டிவிடும் போல் தெரிகிறது.

சீனாவை பற்றி இந்த மாத இறுதியில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு , சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மா சாவோக்சு இலங்கை தனது சமூக ஸ்திரத்தன்மையை பேண வேண்டும் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.இப்படி தான் வெள்ளை வேன்களுடன் கொடுமை புரிந்த ராஜபக்ஷே அரசிற்கு ஆதரவாக சீனா சப்பை கட்டு கட்டுகிறதுஇலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த இந்த உலகம் விழித்துக்கொண்டால் தான் முடியும் , ஆனால் அது நடக்கும் என்பது சந்தேகமே

1 comment:

பதி said...

தமிழாக்கத்திற்கு நன்றி பிரகாஷ்..

அபாயச் சங்கினை பலரும் ஊதிக் கொண்டே தான் உள்ளனர். யாரும் கேட்டதாகத் தான் தெரியவில்லை.