Tuesday, August 18, 2009

ஆட்டம் க்ளோஸ்தோழர் ரமேஷ் என்னை கேட்டவுடன் தான் நான் செய்வதே எனக்கு உரைத்தது."என்னடா தம்பி யார் படிக்காட்டியும் பதிவு அடிக்கடி போடறியே , போறதுக்குள்ள நெறைய எழுதனும்னு வேண்டுதலா? "ஆமாம்ல! இதோ நாளும் வந்துவிட்டது. இனி எனக்கு இணையதள ஆக்சஸ் கிடைப்பது அரிது ஒரு மாதத்திற்கு. என்னை நம்பி ஒருத்தன் படிக்க வேற கூப்புடுகிறான். முதல் முறை விமானப்பயணம் , அட பக்கத்துல போய் கூட பார்த்ததில்லை. நான் சமைக்கிறேன் பேர்வழி என்று அப்பாவை தினமும் ஹோட்டலில் சாப்பட வைக்கிறேன். கோவில்பட்டியில் உச்சி வெயில் மண்டையை பிளக்க கிரிக்கட் மைதானத்தில் நின்ற பொழுதுகள் எல்லாம் சொர்க்கம் , வியர்வையும் வெயிலும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஊட்டி கூட என்னால் பொருத்து கொள்ள முடியாது , பிரான்சில் குளிர் காலத்தில் போகிறேன். போலந்து இதைவிட மோசமாமே? செத்தேன்!

பாட புத்தகங்களை தொட்டு சிலபல மாதங்கள் ஆகிறது. ஒரு மன்னாங்கட்டியும் நினைவில்லை. திகட்டும் அளவிற்கு புத்தகங்கள் படித்தேன் ( பாட பொஸ்தகம் அல்ல ) , திகட்டாத அளவிற்கு பதிவுகள் படித்திருக்கிறேன்,நிறைய படங்கள் பார்த்தேன் . கல்லூரி முடித்து விட்டு மேற்படிப்புக்கு போகும் இந்த மூன்று மாத இடைவேளையை முழுவதும் வேலை எதுவுமே பார்க்காமல் சந்தோஷமாக இணையத்தில் கழித்திருக்கிறேன்.
பதிவுலகம் எனக்கு இன்னும் பிடிபடுவேனா என்கிறது ! ஆண்ட ( கதிரவன்) எனக்கு அறிமுகப்படுத்தியது இது . முதலில் நான் படித்த தளம் லக்கிலுக் , அடுத்து அதிஷா. அப்பொழுது எல்லாம் பின்னூட்டம் என்று ஒன்று இருக்கிறது என்றே எங்களுக்கு தெரியாது. ரித்தீஷ் பற்றி ஒரு பதிவு அதிஷா போட்டிருந்தார் , ஆண்டை எங்கள் எல்லாரையும் கூப்பிட்டான் லேப் முடிந்ததும் உக்கார்ந்து படித்தோம்.கூட்டம் கூடியதால் அவன் மட்டும் உரக்க வாசிக்க மற்றவர் அனைவரும் சிரித்து கொண்டு இருந்தோம்.
என் கல்லூரியில் , ஆண்டை ஷரீப் இருவர் தான் தொடர்ந்து வலைத்தளங்களை படித்து வருவார்கள். பல எழுத்தாளர்கள்களுக்கு தங்கள் ரசிகர்களை பற்றி தெரிவதே இல்லை,தெரிவதற்கு வாய்ப்பும் இல்லை . கடை நிலை ரசிகனுக்கு எழுத்தின் மீதும் எழுத்தாளர்கள் மீதும் பிரமிப்பு அவ்வளவு ஜாஸ்தி. மருதனின் புத்தகங்களை நானும் ஆண்டையும் பிரித்து வைத்து வாங்கி படிப்போம். இருவரும் ஒரே புத்தகம் வாங்காமல் இருவேறு புத்தகங்கள் வாங்கி எக்ஸ்சேஞ்சு செய்து படித்து கொள்வோம். காரைக்குடி புத்தக கண்காட்சிகள் ! மிஸ் யு ஆண்ட.

தமிழ் வலைத்தளம் அறிமுகமே இல்லாதவர்களுக்கு நான் முதலில் இதை தான் படிக்க குடுப்பேன். இவரின் அனைத்து பதிவுகளையுமே படித்திருக்கிறேன் :). சேடன் பகத் புத்தகம் ஜாலியாக படித்தது , மஸக்கலி பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் , தில்ஷன் கேப்டனாக இருந்த மேட்சை நினைத்து நினைத்து சிரித்திருக்கிறேன் , உலக திரைப்படங்கள் , பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் , மைக்கேல் ஜாக்சன் , சச்சின் காஸ்பரோவிச் பந்தில் அடித்த சிக்ஸ் என அனைத்தும் என் ரசனைக்குரிய ஏரியா.

நான் என் வாழ்கையிலேயே கதைகள் எழுதியதில்லை. உரையாடல் , உயிரோடை போட்டிகளுக்காக தான் கதைகள் எழுதினேன்.நடத்தியவர்களுக்கு நன்றிகள் பல.நான் அடிக்கடி படித்த வலைத்தளத்தில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக என் அம்மா காலத்து நபர். முந்திய தலைமுறைக்கு தான் எவ்வளவு ரசனை இருந்திருக்கிறது? புத்தகங்கள் , ஜென்சி , இளையராஜா இசை , கவிதைகள் ஹ்ம்ம் என் கல்லூரியில் எத்தனை பேர் புத்தகங்கள் படித்திருக்கிறார்கள்?

இவ்வளவு நீண்ட மொக்கை , நான் இந்த பக்கம் தலை வைத்து படுக்க இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்பதை தெரிவிப்பதர்க்கே. அதற்குள் பதிவுகளை படிக்க முடிந்து பின்னூட்டம் போட முடிந்தால் சந்தோசம்.

பி.கு : இந்த மொக்கையை திரட்டிகளில் சேர்க்க வேண்டுமா என்ன?
13 comments:

Prasanna Rajan said...

அட தம்ப்ரீ. பிரபல பதிவர் ஆகுறதுக்கு 10 வழிகள்னு ஏதுனாச்சும் பதிவு படிச்சியா என்ன? அதுல நான் வலையுலகத்தை விட்டே போறேன்னு நீங்க அழுது புலம்பனும் அப்பிடினு யாரோ டிப் சொல்லி இருந்தாங்கோ. நீயும் போயிட்டா எனக்கு யாருய்யா பின்னூட்டம் போடுவா? ரைட்டு விடு. நீ நினைக்கிற மாதிரி அங்க இருக்காது. முக்குக்கொரு வயர்லஸ் இண்டர்னெட் ஆக்செஸ் இருக்கும். அப்பப்ப இந்த பக்கம் வந்து பார்க்க ட்ரை பண்ணு. பயணமும், படிப்பும் சிறக்க வாழ்த்துக்கள்...

Prakash said...

அட தம்ப்ரீ. பிரபல பதிவர் ஆகுறதுக்கு 10 வழிகள்னு ஏதுனாச்சும் பதிவு படிச்சியா என்ன? அதுல நான் வலையுலகத்தை விட்டே போறேன்னு நீங்க அழுது புலம்பனும் அப்பிடினு யாரோ டிப் சொல்லி இருந்தாங்கோ//

அசிங்கபடுத்தாதய்யா. நான் வலையுலகத்த விட்டு எல்லாம் போல . சென்னை போறேனா , மாமா வீட்ல நெட் இல்லை அதான் மேட்டர். அப்பாலிக்கா கெளம்ப ஆயுத்தம் ஆகணும் . நான் அதன் மட்டும் படிக்கல , குசும்பன் ஒரு முறை இப்படி வெளியேறுகிறேன் அப்டீனு சொல்றவங்கள செமையா கலாய்த்துஇருந்தார் , அதையும் படிச்சேன்.
//நீயும் போயிட்டா எனக்கு யாருய்யா பின்னூட்டம் போடுவா?//

யோவ் ! முரளிகண்ணன் , டக்லஸ் , கேபிள் ஷங்கர் , கார்த்திகேயன் என்று ஒரு கூட்டமே பின்னூட்டம் போடுது. இப்படியே எனக்கு யாரும் பின்னூட்டம் போடலை என்று சொல்வது பிரபலத்துக்கு அறிகுறி என்று அந்த பத்து பாயிண்டுகளில் படித்த நினைவு.
//நீ நினைக்கிற மாதிரி அங்க இருக்காது. முக்குக்கொரு வயர்லஸ் இண்டர்னெட் ஆக்செஸ் இருக்கும். அப்பப்ப இந்த பக்கம் வந்து பார்க்க ட்ரை பண்ணு. பயணமும், படிப்பும் சிறக்க வாழ்த்துக்கள்...//

விசா பிரச்சனை கொஞ்சம் இருக்கிறது பிரசன்னா , அது முடிந்து நிரந்தர ஆக்சஸ் கிடைத்தால் ஜமாய் தான். நன்றி உங்கள் வாழ்த்துக்கு.

Gopalan Ramasubbu said...

All the best with your studies, Prakash :)

Prakash said...

Thanks a lot thala :)

யுவகிருஷ்ணா said...

ஐ மிஸ் யூ பிரகாஷ்! :-(

எனினும் மேற்படிப்புக்கு வாழ்த்துகள்! :-)

Prakash said...

ஆஹா தோழர் என்னை வெச்சு காமடியா ?

Prakash said...

வாழ்த்துகளுக்கு நன்றி யுவா :)

கார்க்கிபவா said...

நல்லபடியா படிச்சு முடிச்சிட்டு வாங்க பாஸ்..

all the best

Prakash said...

நன்றி சகா :)

Balaji said...

கோவில்பட்டியில் உச்சி வெயில் மண்டையை பிளக்க கிரிக்கட் மைதானத்தில் நின்ற பொழுதுகள் எல்லாம் சொர்க்கம் , வியர்வையும் வெயிலும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஊட்டி கூட என்னால் பொருத்து கொள்ள முடியாது , பிரான்சில் குளிர் காலத்தில் போகிறேன். போலந்து இதைவிட மோசமாமே? செத்தேன்!///////////

+ 1

எனக்கும் அப்படி தான் இருக்கு....
Anyways enjoy ur journey... Best wishes da....

Prakash said...

குட்டை வேதப்ப்ரியா ஆஸ்திரேலியா கிளம்பியாச்சா ? வாழ்த்துகளுக்கு நன்றி

Unknown said...

இந்த
mega mall மாதிரி
இல்லன்னாலும் ஒரு
பங்க் கட rangeக்காவது வரணும்ன்னு
நான்,
ஒரு முட்டு சந்து ஓரமா
புதுசா கட விரிச்சிருக்கேன்.

http://vaarththai.wordpress.com/

அப்டியே
அந்தான்ட…இந்தான்ட‌
போறசொல‌
நம்ம கடையான்ட வந்து
எட்டி பாருங்கோ… Senior

Prakash said...

யோவ் நான் சீனியரா?

பதிவெழுதி பிரபலமாக வாழ்த்துகள்