Thursday, July 30, 2009

எராஸ்மஸ் முன்டூஸ் மேற்படிப்பு- ஓர் அறிமுகம்


இதை எழுதி கூட கொஞ்சம் மொக்கை போட்டால் ஒருவரும் படிக்கமாட்டார்கள் எனது வலைத்தளத்தை ( இப்போ மட்டும் என்ன வாழுது என்று கேட்கும் பதி அண்ணனுக்கு , இன்னொரு ஜிங்கிலி ப்ளாக் பரிசாக அளிக்கப்ப்படும் ) ! தெரிந்தே எழுதுகிறேன் , ஏனென்றால் விஷயம் கொஞ்சம் முக்கியமானது. எனக்கு தெரிந்த உருப்புடியான ஒன்றை பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.

பொதுவாக , மேற்படிப்புக்கு ( MS , PhD) அதிகம் அமெரிக்கா அல்லது கனடா செல்லும் வழக்கம் தான் இருந்து வருகிறது. அதற்க்கு மாற்றாக முற்றிலும் வேறுபட்ட , மிகவும் வித்யாசமான ஒரு மாஸ்டர்ஸ் தான் இந்த Erasmus Mundus .

இது எராஸ்மஸ் என்னும் மனிதனின் பின்னால் பெயரிடப்பட்டுள்ளது. அவர் என்ன செய்தார் என்று இணையத்தில் படித்தால் கொஞ்சம் மொக்கையாக இருந்தது. விட்டு விடலாம் , பாதகம் இல்லை. ஆனால் ஒன்று முக்கியம் , மனிதன் ஐரோப்பா எங்கும் சுத்தி சுத்தி போய் படித்தார். ஏன் அது முக்கியம் என்றால் , இந்த படிப்பும் அப்படிதான். ஒரே இடத்தில் உக்காந்து ஜல்லி அடிக்காமல் , நாடு நாடாக சுத்தி கும்மி அடிக்க வழிவகுக்கும் படிப்பு இது .


குறைந்த பட்சம் ஒரு வருடத்தில் இருந்து , அதிகம் இரண்டாண்டுகள் வரை இந்த படிப்பு இருக்கும். குறைந்தது இரண்டு நாடுகளுக்காது செல்ல வேண்டும் , அதிகமாக நான்கு நாடுகள் கூட செல்லலாம். இது MS க்கு மட்டுமே உண்டான பிரத்யேக படிப்பு. மேலோ , கீழேயோ இதில் படிக்க முடியாது.


மொத்தம் 104 வகையான மேற்படிப்புகள் உள்ளன. நீங்கள் எந்த துறையை சேர்ந்தவராயினும் உங்களுக்கு உகந்தந்து போல் ஒரு படிப்பு இருக்கும்! இதில் என்னை பொறுத்தவரை உதவித்தொகை மிகவும் அதிகம்.


பொதுவாக ஒரு செமஸ்டர் படிக்க உங்களுக்கு இரண்டு இடங்கள் தரப்படும் , அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். சில செமஸ்டர்கள் இல் ஒரே இடம் , அதில் தான் படிக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும். நாம் மூன்றாம் நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர் என்ற அடையாளத்தில் வருவோம் ( third country applicant). ஒரு கோர்ஸில் பதினெட்டு பேர் மூன்றாம் நாடுகளில் இருந்தும் , மீதி எழு பேர் ஐரோப்பாவின் உள் இருந்தும் தேர்வுசெய்யப்படுவார்கள். ( இந்த எண்கள் மாறலாம் !! ) . ஆக நாம் ஒரு மாறுபட்ட பல்நாட்டு கலாச்சாரத்தை சந்திக்கும் வாய்ப்பாக இது அமைகிறது.பல நாட்டு மாணவர்களுடன் பழகும் வாய்ப்பாகவும் பல பல்கலைக்கழகங்கள் சென்று பயில ஒரு வாய்ப்பாகவும் இது இருக்கிறது.


நான் படிக்கப்போகும் இந்த படிப்பில் மொத்தம் இரண்டாண்டுக்கும் சேர்த்து 42,000 யூரோ உதவித்தொகை . அதில் செமஸ்டருக்கு இரண்டாயிரம் என எட்டாயிரம் இரண்டாண்டுக்கு போய்விடும் , மிச்சம் நமக்கு தான்.


சேர்வதற்கு உண்டான தகுதி ஒவ்வொரு கோர்ஸ்க்கும் மாறுபடும்! அதில் ஆங்கில அறிவை காட்ட TOEFL/IELTS எடுப்பது அவசியம். முக்கால்வாசி படிப்புகள் ஆங்கிலத்தில் தான் இருக்கும்.


மொத்தம் எத்தனை கோர்ஸ்கள் உள்ளன என்பதை இணைப்பாக தருகிறேன். உள்ளே போய் பாருங்கள் , ஒவ்வொரு ஹைபர்லிங்க்இலும் தேவையான அனைத்து தகவல்களும் இருக்கும். இதுபோக எராசுமஸ் படிப்பை பற்றிய முக்கிய வினா விடை ( FAQ's) தனியாக கீழே உள்ளது. நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் , அந்தந்த Graduate co-ordinator ஐ தொடர்பு கொள்வது தான்.


பி.கு : ஒவ்வொரு கோர்ஸும்ஒவ்வொரு தினுசு. ஆக தனித்தனியே உங்களுக்கு தேவையானதை எடுத்து பாருங்கள்.வேறு எதுனா தெரிய வேண்டும் என்றாலும் கேளுங்கள் , ஒவ்வொரு கோர்சிலும் ஒரு தமிழர் இருக்க வாய்ப்பு உண்டு. அவர்களிடம் கேட்டு விவரம் பெறலாம்



List of EM courses : http://ec.europa.eu/education/programmes/mundus/projects/index_en.html

FAQ's : http://www.u-picardie.fr/userfiles/file/Mundus%2520_%2520Frequently%2520asked%2520questions%5B1%5D.pdf

10 comments:

Aravind Kumar said...

en ya Prakashu..enna ya idhu.... nalla vilambaram...

கலையரசன் said...

நல்ல பயனுள்ள பதிவை போட்டுட்டு, மொக்கன்றீங்களே?
நன்றி பாஸ்!!

பதி said...

பயனுள்ள தகவல்கள் பிரகாஷ்...

நண்பர்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்...

செமஸ்டர், கோர்ஸ் போன்ற சில வாக்கியங்களையும் தமிழ்ப் படுத்தலாமே???
யோசிக்கவும்...

Prakash said...

@ பதி அண்ணேன் , நன்றி. உங்கள் ஊக்கம் தான். ( இதையும் உதவியாக மாற்றிடலாமா ஹா ஹா ). தமிழ் வார்த்தைகள் தெரிந்தே தான் இதை உபயோகப்படுத்தினேன் அண்ணே , கொஞ்சம் எளிதாக இருக்குமே என்று.

பதி said...

//இன்னொரு ஜிங்கிலி ப்ளாக் பரிசாக அளிக்கப்ப்படும் //

அப்படி ஏதும் நடக்கும் பட்சத்தில், பதிலுக்கு "படிக்காத பக்கங்கள்" போன்ற கருத்தாளாமுள்ள விசயங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்...

:))))))))

Prakash said...

அரவிந்த் , இது விளம்பரம் இல்லை. ஒரு தகவல் பகிர்வு தான். நான் ஆரம்பத்தில் கௌஷிக் சொன்ன பொழுது it was latin and greek to me. ஆக சில நபர்களுக்காது இது போய் சேரும் என்ற நம்பிக்கையில் தான் பதிந்தேன்.

Prakash said...

கலையரசன் , நன்றி.வருகைக்கும் கருத்திற்கும் :)

Prakash said...

பதி அண்ணேன் , அந்த தளம் அருமை. என்ன இருந்தாலும் ஜிங்கிலி ஜிங்கிலி தான் :P

Prasanna Rajan said...

நல்ல பதிவு ப்ரகாஷ். ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி தெரிஞ்சிருந்தா, ஃப்ரான்ஸ்ல கும்காலி - குபீர்னு டேரா போட்டு இருக்கலாம்...

Prakash said...

ஆர்லின்க்டனில் ராஜ போக வாழ்கை வாழ்பவரின் பேச்சா இது :)